இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 14, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும், பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன். 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது. அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150. இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை.

இதற்கு மேற்குறிப்பிட்ட நான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையான மதிப்பெண்களுக்கு ஏற்ற விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம். தகுதி உள்ள நபர்கள் பணி நியமனத்துக்கு பரிசீலனை செய்யபடவில்லை. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

G.o 29 dt 14.2.14 TET weightage marks released

Thursday, February 13, 2014

TNPSC DEO Post Notification 2014

மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.

விளம்பர எண்-04/2014
அறிவிப்பு நாள் - 14.02.2014  விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014
வயது வரம்பு இல்லை
தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014
எண்ணிக்கை 11

QUALIFICATION
PG (Tamil, English, Mathematics, Physics, Chemistry,
Zoology, Botany, History & Geography)WITH B.ED
AGE
NO AGE LIMIT
REVISED SCHEMES OF EXAMINATION 

PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
General Studies 200 items / 300 marks / 3 hours
General Studies ‐ 150 items
Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
Total Marks ‐ 300
Preliminary Examination Minimum Marks:
OC                  ‐ 120
Other than OC ‐ 90

MAIN WRITTEN EXAMINATION (DEGREE STANDARD)
Paper ‐ I (Descriptive type) : General Studies ‐ 300 Marks /3 Hours
Paper ‐ II (Descriptive type) : General Studies ‐ 300 Marks / 3 Hours
Paper ‐ III (Objective type) : Education ‐ 200 Items/ 300 Marks/3 Hours (B.Ed. course syllabus)
Interview & Record – 120 Marks
Total Marks ‐ 1020 Marks
Main Examination Minimum Marks:
OC                   ‐ 408
Other than OC ‐ 306

பள்ளிக் கக்வித் துறைக்கு 17,731 கோடி

மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்கிட, 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மாநில அரசின் நிதி மூலமாக நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.

நலத்திட்டங்களுக்காக ரு.1,631 கோடி: இதற்காக 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூ.1,631 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1 கோடியே 11 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.264 கோடி.

77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.106 கோடி.

20 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக ரூ.323 கோடி.

46 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைகள் வழங்குவதற்காக ரூ.409 கோடி.

90 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்குவதற்காக ரூ.120 கோடி.

77 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்காக ரூ.120 கோடி.

9.39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வரைபடப் புத்தகங்கள், ஜியாமென்ட்ரி பாக்ஸ் வழங்குவதற்காக ரூ.6.77 கோடி.

31 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ரூ.216 கோடி.

மலைப் பகுதிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ, மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க ரூ.3.71 கோடி.

36 லட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்க ரூ.56 கோடி.

இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,100 கோடி: கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 22 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.1,100 கோடியில் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 5.5 லட்சம் லேப்-டாப் வழங்கப்படும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்ய ரூ.250 கோடி: வரும் நிதியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்ய நபார்டு வங்கியின் மூலம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு ரூ.384 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016-ல் ஏழாவது ஊதியக் குழு

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும். அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக, 2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் முறையே 14.62 மற்றும் 20 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-17-ஆம் ஆண்டு முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி, இந்த குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய நிலை எழாது எனவும் கருதப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2014-14 முழு விபரம்

உயர் கல்வித்துறைக்கு 3, 627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறைக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.3,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி கல்வித் துறைக்கு ரூ.17,731 கோயும், இலவச புத்தகங்களை வழங்குவதற்காக ரூ.264.35 கோடியும், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க ரூ.55.11 கோடி ரூபாயும், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி கட்டண உதவிக்காக ரூ.585.17 கோடி ரூபாயும், பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.4,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TN Budjet

2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயக்கப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

காவல்துறைக்கு 5186.20 கோடி நிதி ஒதுக்கீடு.
காவல்துறை குடியிருப்புகள், கட்டடங்கள் கட்ட 571.67 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ. 100 கோடி செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சாலைகள் மேம்பாட்டு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ. 2800 கோடி ஒதுக்கீடு.
சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு மொத்தம் ரூ. 215 கோடி ஒதுக்கீடு.
இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் ரூ. 1260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை நவீனப்படுத்த ரூ.189.65 கோடி ஒதுக்கீடு.
ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
நீதிமன்றங்களுக்கு ரூ.783.02 கோடி நிதி ஒதுக்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடப்பு நிதியாண்டில் ரூ.681 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னையில் வரிவசூல் செய்ய 10 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சிக்கென ரூபாய் 39.29 கோடி நிதி ஒதுக்கீடு. 4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
அணைகள் புனரமைப்புக்கு ரூ. 329.65 கோடி ஒதுக்கீடு.
கூட்டுறவு அமைப்புகளுக்கு பயிர்க்கடனாக ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 323 கோடி ஒதுக்கீடு.
நடப்பு நிதியாண்டில் கோழி வளர்ப்புக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
திருந்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கரில் விரிவுப்படுத்தப்படும்.
2014-15ல் உணவு மானியம் ரூ. 5,300 கோடியாக உயர்த்தப்படும்.
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 12, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 22 முதல் பயிற்சி

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் வியாழக்கிழமை (பிப்.20) வரை தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்காக 40 நாள்கள் பயிற்சி வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகு, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் மையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். பாடத்திட்டத்துக்கு ஏற்ப இந்தப் பயிற்சிக்கான பாடங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் தயாரித்துக்கொள்ள வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச தேநீர், உணவு: பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேநீர், உணவு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல், சமூக அறிவியல் உள்ளிட்டப் பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். 

  இந்தப் பயிற்சியில் சுமார் 2,500 பேர் வரை பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்பதால் இவர்களுக்கான உணவு, பயிற்சி ஆகியவற்றை பயிற்சி மையத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டி வெளியாகாது

"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்த, பல்கலை முடிவு செய்துள்ளது. "ஆகஸ்ட், 1ல், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ஜூலை இறுதி வரை கலந்தாய்வை நடத்தாமல், இந்த ஆண்டு, 10 நாள் முன்கூட்டியே, கலந்தாய்வை முடிக்கும் வகையில், அண்ணா பல்கலை ஆலோசித்து வந்தது. இதற்கு, பிளஸ் 2 தேர்வு முடிவை, மே, 10 வரை இழுக்காமல், 10 நாள் முன்கூட்டியே வெளியிட, தேர்வுத் துறைக்கு, கோரிக்கை வைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, பி.இ., மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பல்கலையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர், ராஜாராம் உள்ளிட்ட பல்கலை அலுவலர்களும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், கலந்து கொண்டனர். பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, பிளஸ் 2 தேர்வு முடிவை, குறைந்தது, 10 நாட்கள் முன் வெளியிடுவதற்கான வாய்ப்பு குறித்து, குழு உறுப்பினர்கள் கேட்டனர்.

அதற்கு, தேர்வுத் துறை தரப்பில், "இந்த தேர்வில், பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில், எந்த பிரச்னையும் வராமல் இருக்க வேண்டும். அவசரகதியில், விடைத்தாளை திருத்த முடியாது. முன்கூட்டியே, தேர்வு முடிவை வெளியிட வாய்ப்பு இருக்காது. கடந்த ஆண்டு வெளியான தேதியை (மே, 9) ஒட்டி, முடிவு வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கையை, வழக்கம் போல், ஜூன் இறுதியில் துவக்கி, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பல்கலை திட்டமிட்டு உள்ளது.

Tuesday, February 11, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வுன மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க ஆசிரியர்களுக்குப் பயிற்ச

பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்குதல், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குதல், தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மாநில அளவில் இந்தப் பயிற்சியை வழங்க உள்ளன. முதல் கட்டமாக, கல்வி மாவட்டத்துக்கு 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 130 ஆசிரியர்களுக்கான பயிற்சி சென்னையில் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களது கல்வி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

TET candidates to know your roll number 2013

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.

முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Monday, February 10, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள dinamalar

்"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது

. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம் 57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.

பி.எப்., நிரந்தர கணக்கு எண் அமைச்சகம் புதிய திட்டம

தொழிலாளர் சேம நல நிதியகத்தில் (இ.பி.எப்.ஓ.,) உள்ள, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, தொழிலாளர் நல அமைச்சகம், சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தொழிலாளர் சேம நல நிதியகத்தில், தற்போது, 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வாயிலாக, கணக்கு எண்களை, சேம நல நிதியகம் வழங்கியுள்ளது.

இவர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்கு செல்லும் போது, அவர்களின் கணக்கு மற்றும் எண்ணும் மாறுகிறது. இதனால், அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்தம் முடிந்ததும், வேறொரு நிறுவனத்திற்கு பணியாற்றச் செல்வர். இதனால், தொழிலாளர் சேம நல நிதியின் பயன்கள், இவர்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 5 கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து வேலை நிறுத்த கோரிக்கைகளை அரசு ஏற்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 52 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்களிடையே காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. விஆர்எஸ் கொடுக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிப்ரவரி 17-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் பொது மகா சபையைக் கூட்டி வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்ததுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தை கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தப் பேச்சவார்த்தையில் ரயில்வே அமைச்சரால் நியமிக்கப்பட்ட ரயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் புரோகித், பொதுச் செயலாளர் எஸ்.ஜி.மிஸ்ரா ஆகியோருடன் நிர்வாகத் தலைவரான நானும் கலந்துகொண்டேன். பேச்சுவார்த்தையின் முடிவில் ராணுவத்துக்கு இணையாக ரயில்வே தொழிலாளர்களையும், புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து விலக்கி மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாரிசுகளுக்கு வேலை தரும் திட்டத்தில் வேலை வழங்கும்போது ஏற்கெனவே உள்ள குடியிருப்பை வாரிசுகளுக்கு மாற்றி தருவது என்றும், மொத்த பணிக்காலம் 20 ஆண்டுகள் இருந்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டது. இதர கோரிக்கைகளில் அடிப்படை சம்பளத்தோடு டி.ஏ. வை இணைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவை அறிவிக்கும் எனவும், மற்ற கோரிக்கைகளில் உடன்பாடு காணப்பட்டு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த இறுதி முடிவு பிப்ரவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார் என்.கண்ணையா.