இன்று (4.2.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.
Tuesday, February 04, 2014
மத்திய அரசின் ஏழாவது சம்பள கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மாத்தூர் நியமனம்
- மாறி வரும் விலைவாசிக்கேற்ப மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கை செலவினங்களை சீராய்வு செய்யும் இந்த சம்பள கமிஷன், கால மாற்றத்துக்கேற்ப அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டிய புதிய சம்பளம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கும்.
இதன் அடிப்படையில் மாநில அரசுகளும் இதற்கு சற்றேறக் குறைய தங்களது ஊழியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்கும். கடைசியாக அமைக்கப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், அதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் கடந்த 2006-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதேபோல், 2016-ம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. செயலாளராக மீனா அகர்வால், நிரந்தர உறுப்பினராக எண்ணை துறை செயலாளர் விவேக் ரயே, பகுதிநேர உறுப்பினராக ரதின் ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சம்பள திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கமிஷன் வழங்கும் பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும், அவர்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மாநில அரசு ஊழியர்களும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Monday, February 03, 2014
மத்திய அரசின் 10 சதவீத அகவிலைப்படி கணக்கீடு எப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, 90 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூடுதல் 10 சதவீத அகவிலைப்படி உயர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு மாதமும், இந்திய அளவில் பரவலாக, பொருட்களின் விலை குறியீட்டுப் புள்ளி சேகரிக்கப்படுகிறது. அதன் சராசரியை கணக்கிட்டுக் கொள்கின்றனர்.
இப்படி கடந்த ஆண்டின் (2013), 12 மாத சராசரியை எடுத்துக் கொள்கின்றனர். அதனுடன், 2005 ம் ஆண்டின் சராசரியை கழித்து, அதை நூறால் பெருக்குவர். பின், அந்த தொகையை மீண்டும், 2005ம் ஆண்டின் சராசரி விலைப்புள்ளி குறியீட்டால் வகுப்பர். இதில் கிடைக்கும் தொகையே, ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அகவிலைப்படி சதவீதம். இதன்படி கடந்த 12 மாத விலைப்புள்ளி சராசரி 232.17 இதனுடன் 2005ம் ஆண்டின் விலைப்புள்ளி சராசரி 115.76ஐ கழித்து, நூறால் பெருக்கி, மீண்டும் 115.76ஆல் வகுக்க 100.56 சதவீதம் வருகிறது.
இது இப்போது வழங்கப்பட வேண்டிய சதவீதம். ஏற்கனவே 90 சதவீத அகவிலைப் படியை பெற்று வருவதால், மீதியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படும்.
PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB
TRB - PG General Merit List
click below
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
Sunday, February 02, 2014
ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்
ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும். ஆசிரியர்களின் விபரங்கள் மட்டுமின்றி அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள விபரங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். மேலும் பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரங்களும் இதில் இடம் பெறும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிபதிவேடு வெள்ளம், தீ போன்ற சூழலால் பள்ளிகளில் இருந்து பாதிக்கப்பட்டால் அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் பணிபதிவேட்டை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டு.
இந்தநிலையில் பணி பதிவேட்டை ஆன்லைன் மயமாக்கி இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பெயரில் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சம்பள கமிஷனின் போது ஊதிய நிர்ணய விபரங்கள், பதவி உயர்வு, இடமாறுதல்கள், ஓய்வு கால பலன்கள் போன்றவை எளிதாக மேற்கொள்ள முடியும்.பள்ளிகளில் தற்போது கல்வி மேலாண்மை முறையில் மாணவ, மாணவியர் விபரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களின் விபரங்கள் ‘டீச்சர்ஸ் புரொபைல்‘ என்ற பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையில் ஒன்றிய வாரியாக இந்த பதிவுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டருக்கான விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான கருத்தாளர்களுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டம் தோறும் பள்ளிகள் தொடர்பான தகவல் சேகரிப்பு தொகுப்பில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பகுதியில் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் ஆசிரியர்கள் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், இனம், மொழி, பதவி உயர்வு விபரங்கள், பெறுகின்ற சம்பளம், வீட்டு முகவரி, ரத்த பிரிவு, உடல் அடையாளங்கள், போட்டோ, இ-மெயில் முகவரி, செல்போன் எண், இருசக்கர, 4 சக்கர வாகனம் இருப்பின் அதன் பதிவு எண், பான்கார்டு போன்ற விபரங்கள் பதியப்படும். மேலும் இதன் தொடர்ச்சியாக பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்ற விடுப்பு, விடுப்பு ஒப்படைப்பு, டிபிஎப், சிபிஎஸ், எஸ்பிஎப், எச்எப் போன்றவற்றுக்கு வாரிசு நியமனம், ஆதார் அட்டை எண் போன்றவையும் பதிவு செய்யப்படும்‘ என்றார்.இதன்மூலம் இனி ஆசிரியர்களின் பணிபதிவேடு எளிதில் கையாளத்தக்க வகையில் வெள்ளம், தீ போன்றவற்றால் எந்த சூழ்நிலையிலும் சேதப்படுத்தப்படாத இ-சர்வீஸ் ரெஜிஸ்டராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் 8-இல் துவக்கம் By திருப்பூர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு, வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் வகையில், திருப்பூரில் பாரதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் துவக்க விழா வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற உள்ளது. பாரதி கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் துவக்க விழா வரும் 8-ஆம் தேதி காலை 9.30 மணியளவில், குஜராத் சமாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன் தலைமை வகிக்கிறார். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர், 99522 37383, 97871 71225 எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, இப்பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ""ஆரம்ப கால மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி இருக்காது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம்'' என்று தெரிவித்தனர். இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12 முதல் 2 நாள்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
குரூப்-1: 79 காலியிடங்களுக்கு 1.8 லட்சம் பேர் போட்டி
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள். மூன்று துணை ஆட்சியர்கள் (ஆர்.டி.ஓ.), 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 33 வணிகவரி உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களை (மொத்தம் 79 இடங்கள்) நேரடியாக நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த டிசம்பர் 29-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதிலிருந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவர். எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களையும் மெயின் தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 70 பேருக்கு சிறப்பு அனுமதி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த 5 ஆண்டு பணிநியமன தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டதையும், அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வழங்கிய 5 ஆண்டு வயது வரம்புச் சலுகையை பயன்படுத் திக் கொள்ள முடியாததையும் குறிப்பிட்டு தங்களை குரூப்-1 தேர்வெழுத அனுமதிக்குமாறு வயது வரம்பை கடந்த சுமார் 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி 70 பேர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப் பித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு சில நிபந்தனைகளுடன் தற்காலி கமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thursday, January 30, 2014
பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி
முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே நியமித்து வந்தார். குறிப்பிட்ட சில பள்ளிகளில், குறிப்பிட்ட தேர்வு பணியில் சிலர் ஈடுபடுவதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் சென்றுள்ளது
. மேலும் சீனியர் ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்காதவாறு, கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதிய ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில், தேர்வுக்கு பணியாளர் நியமிப்பதை, தேர்வுத்துறை இயக்குனரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்வு மையங்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு மையத்திலும் தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விபரம், ஆசிரியர்கள் விபரங்களை ஏற்கனவே தேர்வுத்துறையிடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல் விடைத்தாள் திருத்தும் பணியிலும் மாற்றம் செய்ய உள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர் விபரம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலிருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் தேர்வுத்துறை இயக்குனரகம் ஒதுக்கீடு செய்த நாட்களில் கண்டிப்பாக,தேர்வுப்பணியாற்ற வேண்டும், என்றார்.
ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு
இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும், குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள இந்த பிரிவினரை திருப்திபடுத்தும் விதத்தில், மேலும், 60 ஜாதிகளுக்கு, ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை அடுத்து, பிரதமர் தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும். என்னென்ன தகவல்கள்? வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள், வேலை பெறுவதற்கான உதவிகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை தமிழகம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
Wednesday, January 29, 2014
சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாட
அரசு பணிகளில், ஒருவர் சேர்ந்ததும், அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், 'சான்றிதழ்கள் உண்மையானது தான்' என, அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.
இவற்றை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில், தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம் செய்யப்படுவது, தள்ளிப் போகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத் துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால், பணி பளு, சற்று குறைந்துள்ளது. இதனால், பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு, சிறப்பு குழுக்களை, இயக்குனர் அமைத்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.
30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவ
ு. நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.
Tuesday, January 28, 2014
ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி பார்க்க இன்றே கடைசி
, 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது. வாரியத்தின் அறிவிப்பு:கடந்த ஆண்டு, ஆக., மாதம் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்கள், இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். 2012ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களும், இதில் பங்கேற்கலாம்; இதுவே, கடைசி வாய்ப்பு.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
எனவே, வரும் பட்ஜெட்டில், 20,ஆயிரம் கோடி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.இவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நிதியில், ஆசிரியர், அதிகாரிகளுக்கு, பெரும்பகுதி சம்பளம் அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள்,சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.
அறிவுசார் பூங்காகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கல்வித் துறைஅலுவலகங்கள் மற்றும் சென்னை, கோட்டூர்புரம்நுாலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா என்ற, பிரமாண்டமான கட்டடம் கட்டப் படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிப்பு அளவிலேயே நிற்கிறது