இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 14, 2013

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும்

*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்

*தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்

*இடம்பெயரும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

*90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன
*தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது

டிசம்பர் மாத குறுவள மையப் பயிற்சி

அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

  சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அவர் பேசியது:

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ.1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர். குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. ்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு புது அறிவிப்பு

பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு, மார்ச் ஏப்ரலில் நடைபெறும் இடைநிலை மற்றும் மேல்நிலை பொது தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில், 15ம் தேதி (இன்று) முதல், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், 15ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனித்தேர்வர்கள் வி"ண்ணப்பிக்கும் தேதி வரும், 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை என, மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை

10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின. இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது

. இந்த சர்ச்சையை, வரும் ஆண்டுகளில் தவிர்க்க, தேர்வு மையத்தில் இருந்து, திருத்தப் படும் மையத்திற்கு, விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து, தேர்வுத்துறை ஆலோசனை நடத்துகிறது. மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு வந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, வாகனங்களில் அனுப்பினால் எத்தனை ஊழியர்கள் தேவை; தபால் நிலையத்தில் இருந்து, திருத்தப்படும் மையங்களுக்கு அனுப்பாமல், தலைமை தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினால் பாதுகாப்பாக இருக்குமா? என ஆலோசிக்கப்படுகிறது; மேலும், கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

How to use printing tool of students records -EMIS

இரட்டை பட்டம் சார்பான வழக்கு இரு தரப்பு மற்றும் அரசுதரப்பு வாதங்கள் முடிந்து, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 12மணியளவில் முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கறிஞ்சர் பிரகாஷ் வாதிட்டார். அதை தொடர்ந்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு அரசு தரப்பு வழக்கறிஞ்சர் வாதிட்டார், அப்பொழுது அரசின் நிலை குறித்து கேட்டறிந்த நீதியரசர்கள் வருகிற 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Wednesday, November 13, 2013

Tetojac தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் மாநில பொறுப்பாளர்கள

்1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.காமராஜ்.

2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-

திரு.ஜியாடோ ராபின்சன்.

3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திரு.ரக்ஷித்.

4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட்
பால்ராஜ்.

5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.மோசஸ் .

6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.தாஸ்.

7.தமிழ்நாடு தொடக்க
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்-
திரு.சேகர்

ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும்
விதமாக
* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA.

ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.. அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர்.. இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்..

அவ்வையார் எத்தனை பேர்? : ஆசிரியர் குழுவை விசாரிக்க முடிவு

  அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு, விடை தேடும் பணியில், பள்ளி கல்வித் துறை இறங்கியுள்ளது. ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழுவை, விரைவில் அழைத்து விவாதிக்க, கல்வித் துறை முடிவு எடுத்துள்ளது. பள்ளி கல்வித் துறை வெளியிட்ட, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், அவ்வையார் இருவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக, அவ்வையார் ஒருவரே என, பொருள்படும் வகையில், புத்தகங்களில், தகவலை தெரிவித்த கல்வித் துறை, திடீரென, இப்போது, இருவர் என, தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது, பெற்றோர், மாணவர் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்தும், தினமலர் நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து, கல்வித் துறை, அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு, விடை தேடும் வேலையில், இறங்கி உள்ளது. இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், தீர்க்கமான, இறுதியான கருத்துக்கள் என, முடிவு செய்யப்பட்டவை மட்டுமே, பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். சந்தேகத்திற்கு இடமான கருத்துக்கள், பாட புத்தகங்களில் இடம்பெறக் கூடாது. இது, மாணவர் மத்தியில், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அவ்வையார் இருவர் தான் என, எப்படி, பாட புத்தகத்தில் இடம்பெற்றது என, தெரியவில்லை. ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழுவை, விரைவில் அழைத்து, அவ்வையார் விவகாரம் குறித்து, விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளோம்.

இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து, உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதற்கட்ட நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு, இரண்டாம் பருவ பாட புத்தகத்தில், அவ்வையார் குறித்த தகவல்கள் நீக்கப்படலாம்

முழு தேர்ச்சிக்கு "100 பக்க புத்தகம்'

  அரசுப் பள்ளிகள், 10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, 100 பக்க வினா-விடை புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், 10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில், 10 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாவட்ட வாரியாக நடந்தது.

படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, 35 மதிப்பெண் பெற வைப்பது; அனைத்து பாடங்களிலும், ஒன்று, இரண்டு, ஐந்து, 10 மதிப்பெண் கேள்விகள் கொண்ட, மாதிரி வினா-விடை தொகுப்பை, அந்தந்த பாட ஆசிரியரே தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வினா- விடை தொகுப்பு, மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

இணைய தளத்தில்மாணவர்களின்ஆதார் எண் பதிவு

    பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால், அவற்றை செயல்படுத்துவதில், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், 2012-13ம் கல்வியாண்டில், 1 முதல், பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களின் விவரங்கள், இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டன.

"ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன், மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணையும், பதிவு செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அப்பணி தற்போது துவங்கியுள்ளது. ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு, ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தின் எண் பதிவு செய்யப்படுகிறது.

10மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கல்வித்துறை  அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.  கடந்த பொதுதேர்வுகளில் தேர்வு எழுத மாணவர்களுக்கு மெயின் சீட் வழங்கப்பட்டது. மேலும் கூடுதலாக அடிஷனல் ஷீட் வழங்கப்பட்டது. புதிய நடைமுறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30 பக்கங்களும் வழங்கப்பட உள்ளது.

இவை மொத்தமாக பைண்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு அடிஷனல் ஷீட்டிற்கு எழுந்து நிற்க தேவையில்லை.  தேர்வு எழுதும் மாணவரின் முன் அல்லது பின் அமர்ந்துள்ள மாணவர்கள் அடிஷனல் ஷீட் வாங்கி காப்பி அடிக்கும் நிலை தடுக்கப்படும்.  ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சமாக 400 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். அதற்கு மேல் மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும்.

தற்போது, ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே மட்டுமே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் வெளியாகிவிடும் என்ற குற்றசாட்டும் எதிர்காலத்தில் நிகழாது. இந்த புதிய நடைமுறைகள் வருகின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமல்படுத்தப்படும் என பள்ளி, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. வரிசை எண் 23-ல்  வழக்கு விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது

.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார். மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது.

எனவே இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு  மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

Tuesday, November 12, 2013

பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை அச்சிடப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு ரூ.25 முதல் ரூ.95 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் மாவட்ட மையங்களின் விவரம்:

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிசியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு. 2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை

. 3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூ

அண்ணாமலை பல்கலைக்கழக டிசம்பர் மாத தேர்வு அட்டவணை மற்றும் அறிவுரைகள்

Monday, November 11, 2013

குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி -

நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும்.

30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும். இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள். தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது. அடுத்த மாதம் முடிவு வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப்–4 தேர்வை எழுதி உள்ளனர். தேர்வு முடிவை மிகச்சரியாக வெளியிடவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிக்கோளாக வைத்திருக்கிறது. தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும். தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும். நடந்து முடிந்த குரூப்–1 மெயின்தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். குருப்–2 தேர்வு குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந்தேதி நடக்கிறது. புதிதாக குரூப்–1 தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

. காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ் (வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தவறான விடை நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன். இந்த தேர்வு முடிவினை 5–11–2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

அதில், நான் 89 மதிப்பெண் பெற்று இருந்தேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். அதேநேரம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், கேள்வி எண் 4, 14, 24 ஆகிய கேள்விகளுக்கு தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. 3 மதிப்பெண்கள் நான், இந்த 3 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துள்ளேன். இதையடுத்து, 6–11–2013 அன்று இந்த 3 கேள்விக்குரிய சரியான விடைகளையும், அதற்கான ஆதார புத்தகங்களையும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்த தேர்வு முடிவின் அடிப்படையில், தேர்ச்சிப் பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எனவே சரியான பதிலை அளித்துள்ள எனக்கு 3 மதிப்பெண்கள் வழங்கவும், சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்துக்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அனுமதிக்க வேண்டும் இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணி ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விரைவில் நடைபெற உள்ள, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் மனுதாரரையும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை வருகிற 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.  

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை எழுத்து தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இந்தப் படைக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 94 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 1.37 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் 7 மையங்களில் சுமார் 3,000 பேர் எழுதினர். இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீரூடை பணியாளர் தேர்வு குழுமம் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் (ஆன்சர் கீ) w‌w‌w‌w.‌t‌n‌u‌s‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n.​  என்றஇணையத்தளத்திலும், ‌w‌w‌w.‌t‌n‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையத்தளத்திலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது

. தேர்வர்கள் இந்த இணையத்தளத்துக்குச் சென்று விடைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் ஒப்புக் கொள்ள முடியாத விடைகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அவற்றை இம் மாதம் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. 18-ம் தேதிக்குப் பின்னர் விடைத் தொடர்பாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என அந்த குழுமம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு

   டி.இ.டி., தேர்வில், சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர். இது குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர்.நேற்று, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில், அனைவரும், அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித் தனர். பின், தேர்வர்கள் சார்பில், இருவர் மட்டும், டி.ஆர்.பி., தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, இரு தேர்வர், டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து, தேர்வர்கள் கூறியதாவது:

தேர்வை நடத்துவதும், தேர்வு முடிவை வெளியிடுவதும் தான், டி.ஆர்.பி.,யின் வேலை. கேள்வித்தாளை வடிவமைப்பது, விடைகளை தயார் செய்வது, டி.ஆர்.பி., வேலை அல்ல. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழு தான், இவற்றை செய்கிறது. அப்படியிருந்தும், தேர்வில் பிரச்னை எனக் கூறி, இவ்வளவு பேர் ந்திருக்கிறீர்கள்.எனவே, நீங்கள் குறிப்பிடும் கேள்விகள் மற்றும் விடைகள் குறித்து, மீண்டும் ஆய்வு செய்ய, குறிப்பிட்ட பாடங்களில், அனுபவம் வாய்ந்த, சிறப்பு நிபுணர்களைக் கொண்டு, சிறப்பு குழு அமைக்கப்படும். அக்குழு, என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும்.

மதிப்பெண்களில் மாற்றம் இருந்தால், இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, டி.ஆர்.பி., தலைவர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.டி.ஆர்.பி., தலைவரின் கருத்தை அறிய முயன்றபோது, 'சேர்மன், 'மீட்டிங்'கில் இருக்கிறார்; இப்போது பேச முடியாது' என, அலுவலக ஊழியர்கள் தப்பித்தனர். - நமது நிருபர் -

குரூப்-2 விண்ணப்ப ஒப்புகை வெளியீடு

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான, ஒப்புகை பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 12.12.2013ம் தேதியன்று, குரூப் 2 பணிக்கான தேர்வை நடத்தவுள்ளது. 1,064 காலியிடங்களுக்கான இந்த தேர்விற்கு, 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் விவரங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தி"ன் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம் என, தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம் - அரசு உத்தரவு

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு  தேதி மாற்றம்  - அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி இயக்குநரின் EMIS குறித்த செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள்