இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 08, 2013

பள்ளி மாணவர் செஸ் போட்டி: பரிசுக்கு 24 பேர் தேர்வு

பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில், 24 பேர், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளன. பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவரிடையே, செஸ் விளையாட்டு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு நிலைகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. 3,4,5 வகுப்பு மாணவர், ஒரு பிரிவு; 6,7,8 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு; 9,10 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு;

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் ஒரு பிரிவு என, நான்கு பிரிவிலும், மாணவர், மாணவியர் என, தனித்தனியே, போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிக்கு, 360 மாணவர் தேர்வு பெற்றனர். இந்த போட்டி, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. போட்டியை, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி, துறை செயலர், சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இறுதியில், முதல், மூன்று இடங்களுக்கு, முறையே, தலா, எட்டு மாணவர் வீதம், 24 பேர், தேர்வு செய்யப்பட்டனர். முதல் இடம் பெற்றவர்களுக்கு, 1,200 ரூபாய்; இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு, 800 ரூபாய்; மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு, 400 ரூபாய் வீதம், ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

மேலும், அனைவருக்கும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. விரைவில் நடக்கும் விழாவில், மாணவர்களுக்கு, கேடயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய போட்டியில் பங்கேற்ற, 360 மாணவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்ய, தொடக்க கல்வித்துறையினர் தயாராகி வருகின்றனர். லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமைஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து, ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா?

எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து விளக்கமும் பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர். ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டு உள்ளது. ஜனவரிக்குள், பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க கல்வித்துறையினர் தயார்படுத்திவருகின்றனர்.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு  பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, November 07, 2013

நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம

் கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் மாணவர் தகவல் தொகுப்பு மூலம் மாணவ மாணவியரின் விபரத்தை அதிகாரிகள் எந்த ஒரு கல்வி அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அரசின் திட்டங்கள் முறையாக மாணவ மாணவியரிடம் சென்றடைந்துள்ளதா என்பது இதன் மூலம் சரிபார்க்க முடியும்.

மேலும் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனரா அல்லது இடையில் பள்ளி செல்லாமல் இடை நின்றுள்ளனரா என்பதும் தெரியவரும். அவர்களின் கல்வி முன்னேற்றம்,உடல்நிலை, அவர்களின் சிறப்பு திறன்கள் போன்றவையும் இதன் மூலம் கண்காணிக்க இயலும். மாணவர்களின் 100 சதவீதம் சரியான விபரங்கள் இதில் இருக்கும். இந்த திட்டத்தில் தொடர்ந்து அனைத்து விபரங்களுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்மார்ட்கார்டு மூலமே மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.தகவல் விபர சேகரிப்பு பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது. எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

5.63 லட்சம் ஆசிரியர் விவரங்கள் விரைவில் இணையத்தில் சேர்ப்பு

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர்களின் வருகை பதிவை, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம், கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, முதலில், திருச்சி மாவட்டத்தில், செப்., 5ல், முதல்வர் துவக்கி வைத்தார். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங் : ஒழுக்கத்தை மேம்படுத்த கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர, மொபைல் வேன் மூலம், கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக, 10 வேன்களை, கல்வித்துறை வழங்கி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே, வன்முறை மற்றும் ஒழுக்கமின்மை அதிகம் ஏற்பட்டுள்ளது. இவர்களை, நல்வழிபடுத்தி, அதிக மதிப்பெண்கள் எடுக்க, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர்.

இதற்காக,சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் என, 10 மண்டலங்களாக பிரித்து, தலா ஒரு வேன் கொடுத்துள்ளனர். இதில் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். இவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு "கவுன்சிலிங்' வழங்குவர். இதில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, மனநலம் பற்றி விழிப்புணர்வு, ஞாபக மறதி, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னை, ஒழுக்கம், போதை பொருள் பற்றிய விழிப்புணர்வுகளுக்கு, "டிவி' மூலமும், தனியாகவும் "கவுன்சிலிங்' கொடுக்கின்றனர்.

இதேபோல், பள்ளிகளில் தலா இரு ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் தருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்,"" இந்தியாவில் முதன் முறையாக, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில், மாணவர் களுக்கு வேன் மூலம் "மொபைல் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இது, மாணவர்களிடையே உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி, நல்வழிபடுத்தும். கற்றலில் பின் தங்கிய மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

குரூப்–1 மெயின் தேர்வு : 3 மாதத்தில் முடிவு வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி -

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையொட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்–1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது

. அந்த தேர்வு கடந்த மாதம் 25–ந்தேதி நடைபெற்றது. 84 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். 16 சதவீதத்தினர் வரவில்லை. விடைத்தாள்களை சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்ய உள்ளனர். விடைத்தாள்கள் இரு முறை மதிப்பீடு செய்யப்படும்.  குரூப்–1 மெயின்தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு ‘எவ்வளவு விரைவாக குரூப்–1 மெயின்தேர்வு முடிவை வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிடுவோம். எப்படியும் 3 மாதத்திற்குள் வெளியிடுவோம்‘ என்றார்.

மாதந்தோறும் டீசல் விலையை 1 ரூபாயாகவும், சமையல் கேஸ் ரூ.10 வரையும் அதிகரிக்க திட்டம்: பொதுமக்கள் அதிர்ச்சி

மாதம்தோறும் உயர்த்தப்படும் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வில் நிர்ணயித்த அளவைவிட மேலும் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் 90 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இதேபோல் டீசல் விலையை மாதந்தோறும் 50 பைசா உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மே மாதம் முதல் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கச்சா எண்ணெய்யை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 11 ரூபாய் வரையும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

இதையடுத்து மாதந்தோறும் 50 பைசா உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தவும், இதேபோல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி புதிய இயக்குநர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக ஆர்.எம்.ச ந்திரசேகரன்  வியாழக்கிழமை பொறுப்பேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக ஆர்.எம்.சந்திரசேகரன் 1990 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் 2007-2010ல் திருச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.

பின்னர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணியா ற்றி வருகிறார். இந்நிலையில் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப் பேற்றார்.  இதற்கு முன்பு இருந்த இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மேலாண்மைத்துறை பேராசி ரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 06, 2013

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாத

. தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில் பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது.

இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது. இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம். இ-மெயில் முகவரி:  dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், தமிழ் வாசிப்புத் திறன், மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் வாசிப்புத் திறன், 64 சதவீதமாக இருப்பதும், எஸ்.எஸ்.ஏ., மூலம், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில், 'பள்ளிகள் இல்லாத, தொலை தூர குடியிருப்பு பகுதிகளில், புதிய பள்ளிகள் துவங்க, கருத்துரு அனுப்பவும், ஆசிரியரல்லாத பள்ளிகளில், உடனடியாக, ஆசிரியர்களை நியமிக்கவும், தமிழ்வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட, அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்காக, அடைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. இதற்காக, வட்டார அளவில், 10 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள, தலா, 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியல், அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அடைவுத் தேர்வுக்கான நாள் அறிவிக்கப்படவுள்ளது.

முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள்

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதன்படி சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மென்ட்) படிப்பு, முதுகலையில் பொது நிர்வாகப் படிப்புக்கு (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., வளர்ச்சி நிர்வாகம் (டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் (ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு), எம்.ஏ., பொது நிர்வாகம் (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) படிப்புக்கு இணையானது.

சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.எஸ்சி., பயன்பாட்டு புவியியல் (அப்ளைடு ஜியாக்ரபி) படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி., புவியியல் (ஜியாக்ரபி) படிப்பு. மேலும் சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., தமிழ் இலக்கியப் படிப்புக்கு (தமிழ் லிட்டரேச்சர்) இணையானது எம்.ஏ., தமிழ் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.