இளங்கலை, முதுகலை, தொழில் படிப்பு, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பு குறித்து விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 07ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Monday, November 04, 2013
Sunday, November 03, 2013
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013
*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~12.11.2013
உயர் தொடக்கநிலை~19.11.2013
*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
தொடக்க நிலை ~16.11.2013
உயர் தொடக்கநிலை~23.11.2013
courtesy:tntam
Saturday, November 02, 2013
மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 1268 துவக்கப்பள்ளிகளுக்கு "பூட்டு'
"அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இருக்காது' என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழக அரசு, சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோகளின் ஆங்கிலக் கல்வி மோகமே, இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள, 23,576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட, அரசு முயற்சித்து வருவதாக, ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில்,"முதல் கட்டமாக, 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது, இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல், நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே, இருக்காது' என்றனர்.
Friday, November 01, 2013
Thursday, October 31, 2013
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும், வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும், இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
courtesy:tnkalvi
Wednesday, October 30, 2013
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்., 30 கடைசித் தேதி. ஆன்-லைனிலிருந்து பதிவிறக்கம் செய்த வங்கி செலான் மூலம் ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவ., 2 கடைசித் தேதி.
பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவம்பர் 5 முதல் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 9 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களை www.ugcnetonline.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31) கடைசி நாள்.
வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள்-தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கடந்த கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி வேலை நாட்களில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் குறுவள மைய பயிற்சி மற்றும் 10 நாட்கள் வட்டார வள மைய அளவில் பயிற்சி, ஆண்டுக்கு 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள் ஆண்டுக்கு 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே வேளையில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ளும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்கள் விடுமுறை நாளில் பணியாற்றினால் அவர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.தற்போது விடுமுறை நாட்களில் பயிற்சியில் பங்கேற்கும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். 6 மாதங்கள் வரை இந்த ஈடு செய் விடுப்பை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் கே.சி.வீரமணியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விராலிமலை எம்.எல்.ஏ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக நியமித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. புதிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நவம்பர் 1ஆம் தேதி பதவியேற்கிறார்.
இரட்டைப்பட்டம் வழக்கு-ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மீண்டும் நாளைக்கு விசாராணைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது.விசாரணை ஒத்திவைப்பவ
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும
அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.
சுற்றறிக்கையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
* பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்
* பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
* பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
* பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.
* விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி, பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, October 29, 2013
நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை
இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை சந்தித்து வரும் வெள்ளி கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்பு வரும் வெள்ளி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்தில் வி.இ.சி தலைவர் ஒப்புதலுடன், பிறிதொரு சனிக்கிழமை ஈடுசெய் விடுப்பாக அளிக்கலாம் எனக் கூறினார்
Monday, October 28, 2013
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார். அப்போது அமைச்சர் பி.பழனியப்பன் கூறியது:
ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் 1.21 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.
இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்.