இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 17, 2013

தமிழக அரசு அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கும் டிஇடி கட்டாயம்

''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது. அங்கீகாரம் காலாவதியான நாளில் இருந்து அபராதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் பள்ளி செயல்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வீதமும் சேர்த்து மொத்தமாக அபராதம் விதிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளி தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவில் 30 மாணவர்களும், 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் விதித் தொகுப்பு விதி எண் 14ன்படி ஒரு பிரிவில் 50 மாணவர்கள் வரை சேர்க்கலாம். ஒரு வகுப்பிற்கு 4 பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும்.

ஐந்தாம் பிரிவு துவங்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் தொடங்கவோ, செயல்படவோ அனுமதி இல்லை. முறையான பிறப்புச் சான்றிதழ் அளிக்காத காரணத்தினால் சேர்க்கை மறுக்கக் கூடாது. 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேக்கம் செய்யவோ, பள்ளியில் இருந்து வெளியேற்றவோ கூடாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் 1ம் தேதிக்குப்பிறகு மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. 100 சதவீத தேர்ச்சியினைக் கருத்தில்கொண்டு கற்றலில் பின்தங்கிய மாணவர்களை 9 மற்றும் 11ம் வகுப்புகளில் கட்டாயப்படுத்தி தேக்கமடைய வைக்கக் கூடாது.

அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்து அவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். 10, 12ம் வகுப்பு மாணவர்களை எக்காரணம் கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக் கூடாது. அதிகளவில் வீட்டுப்பாடம் மற்றும் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படுவதாக புகார் வருகிறது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வகுப்புத் தேர்வுகள் நாள் ஒன்றிற்கு ஒரு பாடம் வீதம் சுழற்சி முறையில் முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம், கணிதம், தமிழ் ABL அட்டைகளும் பாட நூலில் பக்க எண்களும்

TNPSC Group I Hall ticket

குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

  வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூன்று நாட்களும், பொது அறிவுத்தாள், ஒன்று, இரண்டு, மூன்று என, மூன்று தாள்களாக நடக்கும். காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது தேர்வாணையத்தின் கட்டணம் இல்லாத தொலைபேசி (18004251002) மூலமாகவோ, தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார். இந்த தேர்வு, கடந்த மாதம் நடக்க இருந்தது. அதே நாளில், வேறு போட்டித் தேர்வுகள் இருந்ததால், இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதன்மை தேர்வை, 950க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு

2008-2009-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை அரசே ஈடு செய்யும் வகையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2011-2012-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளிடம் வசூலிக்கப்பட வேண்டிய சிறப்பு கட்டணங்களுக்கு பதிலாக அதனை ஈடு செய்து அந்த தொகையினை பள்ளிகளுக்கு வழங்கிட அரசால் ரூ.21 கோடி (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.20.50 கோடி, மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது இந்த திட்டத்திற்கு 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.ஆயிரம் மட்டுமே அடையாள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 2011-12-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளுக்கு 6 முதல் 12-ம் வகுப்புகளின் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் சிறப்பு கட்டணம் ஈடு செய்யும் பொருட்டு, வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை போன்று 2012-13-ம் ஆண்டிற்கும் வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டு உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை பரிசீலனை செய்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படாத செலவினங்களுக்கு மட்டுமே இழப்பீடு நிதியினை பயன்படுத்தும் வகையில் ரூ.20.50 கோடி வீதம், 2012-13 மற்றும் 2013-14-ம் கல்வி ஆண்டில் மொத்தம் ரூ.41 கோடி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது. ஏற்கனவே செலவிடாமல் உள்ள நிதியினை சரிகட்டிய பின்னர், இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கூடுதல் செலவினம் 2013-14-ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் மேற்கொள்ளப்படும்.

இருப்பினும் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறும் பொருட்டு, இந்த செலவினத்தை 2013-14-ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட வேண்டும். இதனை எதிர்நோக்கி இந்த செலவினத்தை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த செலவினத்திற்கான உரிய கருத்துருவினை 2013-14-ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கம் மற்றும் துணை மதிப்பீட்டில் சேர்க்கத்தக்க வகையில் உரிய விவரங்களுடன் நிதி(கல்வி-11) துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNOU UG.PG results june 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: தேர்வு முடிவுகள் வெளியீட

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணைதளத்தில் வெளியிட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

சிறப்பு நிலை/தகுதி நிலை முடித்த ஆசிரியர்களுக்கு 3% ஊக்கஊதியம் வழங்கும் மாதிரி படிவம்

சிறப்பு படி 3% வழங்குவதற்கான மாதிரி படிவம்


2014-15 book detail form 2

2014-15 Book detail form 1

Wednesday, October 16, 2013

பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும

. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம் இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில், தேர்வுத் துறை வழங்கியது. இந்த விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த வாரத்தில் இருந்து, தேர்வெழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்தப் பணி, நவம்பர், முதல் வாரம் வரை நடக்கும் என, தெரிகிறது. இணையதளத்தில், விவரங்கள் ஏற, ஏற, அது குறித்த புள்ளி விவரங்களை, உடனுக்குடன் பெறவும், தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பணிகளை, தனியார் நிறுவனம் ஒன்று செய்து கொடுக்கிறது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில்,

நவ., 15ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த புள்ளி விவரங்கள் தயாராகி விடும். பொதுத்தேர்வுக்கு, போதுமான கால அவகாசம் இருப்பதால், ஒவ்வொரு பணியையும், நிதானமாக செய்வோம், என, தெரிவித்தார். சமீபத்தில் நடந்த பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வுகள், ஒரே தேதிகளில் நடந்தன. இதில், எவ்வித குளறுபடிகளும் ஏற்படவில்லை. இதேபோல், பொதுத் தேர்வுகளையும் நடத்தலாமா என, தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது. எனினும், இதுகுறித்து, தற்போது வரை, எவ்வித முடிவும் எடுக்கவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தனித்தேர்வு முடிவு விரைவில் வெளியீடு

தனித்தேர்வு முடிவை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வு, சமீபத்தில் நடந்தது. பிளஸ் 2 தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 50 ஆயிரம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி, தலா, நான்கு மையங்களில் நடந்து வருகின்றன.

   இந்தப் பணிகள், இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும், மாத இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

"அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.டி.இ.,) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்தேர்வுக்கு www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மேலும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் தேதியை அக்.19 வரை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Interactive Learning Sites for Education 2013-14

P.F Loan Application Form

Tuesday, October 15, 2013

முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?


முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும்,   14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் அல்லாதஇதர பாடங்களுக்கு, தற்காலிகமாகதேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, , www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,இணையதளத்தில்,  வெளியிடப்பட்டது. மேலும்,சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தேர்வர்கள், 'ரோல் எண்'களை பதிவு செய்து, தங்களுக்கானmஅழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும். ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ்சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காததேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22 மற்றும் 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 881 உள்ளன. இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. அந்த தேர்வில் தமிழ்பாடத்திற்கான தேர்வு வினாத்தாளில் ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்தன. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

முடிவில் தமிழ்பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7–ந்தேதி இரவு வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்த்தல் இப்போது சான்றிதழ் சரிபார்த்தலுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இணையதளத்தில் உள்ளன. சான்றிதழ் சரிபார்த்தல் 22 மற்றும் 23–ந்தேதிகளில் கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் 22 மற்றும் 23–ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு "அட்வைஸ்'

அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஊழியரின் பெயர், வயது, இனம், மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார், சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: "எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும்.

எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. "ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்: அக்.20-ல் நுழைவுத்தேர்வ

ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாவூசி கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி முகாமுக்கான நுழைவுத்தேர்வு அக்.20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாம் நவம்பர் மாதம் தொடங்கி எட்டு மாதங்களுக்கு  வார நாள்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறுவதால் பணியிலிருப்போர் மற்றும் இந்த தேர்வுக்காக தனியாக தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

சென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், கோவை, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளின் மூலம் இலவச பயிற்சி முகாமுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். வாவூசியின் சங்கம் ஐஏஎஸ் கல்வி மையம். 3 சி, கிளாம்பாக்கம் ரயில்வே கேட் ரோடு. சங்கர வித்யாலயா பள்ளி எதிரில் என்ற முகவரிக்கு பயோடேட்டாவுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைத்து அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அக்.20-ஆம் தேதி மேற்குறிப்பிட்ட மாவட்டத் தலைநகரங்களில் இலவச பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நடைபெறும்.

இலவச பயிற்சி மற்றும் தேர்வு குறித்த தகவல்களுக்கு 9940670110, 9962620814, 9094496617 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, October 14, 2013

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை

*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்
*நுழைவுத்தேர்வு இல்லை
*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை
*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650
*கடைசி நாள்-31-11-13
இணைய முகவரி www.tamiluniversitydde.org
*கோவை-90951-11177
அவினாசி-9842291345

பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

தற்போதுள்ள நிலையில் மாத சம்பள வரம்பில் 24 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கு சென்று விடுகிறது. ஓய்வூதிய நிதிக்காக மத்திய அரசு 1.16 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது. பி.எப். பிடித்தம் செய்வதற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்துவதால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.90,000 கோடி கிடைக்கும்.

இந்த நிதியை, இந்த அமைப்பு மத்திய அரசின் கடன் பத்திரங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி நிறுவனங்கள் வெளியிடும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. நம் நாட்டில் வங்கி சாரா நிதி துறையில் எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக இ.பி.எஃப்.ஓ. அமைப்பிடம்தான் அதிக நிதி உள்ளது. நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.4.84 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் இ.பி.எப்.ஓ. அமைப்பு மட்டும் கடன்பத்திரங்களில் கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பி.எப். பிடித்தத்திற்கான சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்தும்படி பாராளுமன்ற கமிட்டியும், இ.பி.எஃப்.ஓ. அமைப்பும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இதனை நிதி அமைச்சகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசின் மானியச் சுமை ரூ.1,100 கோடியிலிருந்து (ஆண்டிற்கு) ரூ

ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வித்திடத் துடிக்கும்-TNPTF

இன்றைய சூழ்நிலையில் கல்வித்துறையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பது இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம். இது சம்பந்தமாக பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் தனித்தும், இணைந்தும் பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் தமிழக அரசின் மௌனம் கலைவதாக இல்லை. கூட்டு போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு என பலமுறை நாம் வலியுறுத்தியுள்ளோம

். கடந்த ஆகஸ்ட்-18 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்து டிட்டோ-ஜேக் கூட்டத்தை கூட்டியது. அதில் முக்கிய இரண்டு கூட்டணிகள் பங்கேற்கவில்லை. அதன்பின் பொதுச்செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த வாரம் கூட்டி ஆலோசித்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித மாற்றத்திற்கு எந்தவித போராட்ட வியூகத்திற்கும் தயாராகவே உள்ளோம் என மாவட்டச்செயலாளர்கள் ஒருமித்த குரலாக கூறினர்.

அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றி விவாதிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின் உயர்மட்ட கூட்டம் (மாநில மையம்) நேற்று(13.10.2013) மாலை மதுரை மாவட்ட அலுவலகத்தில் கூடியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே கூடிய விரைவில் கூட்டுப்போராட்டம் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக பல்வேறு இயக்கத் தலைவர்களை நேரடி சந்திப்பு மூலம் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான முறையான முடிவுகளை தன்னோட மாநில செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது. கூட்டுப் போராட்டம் என்றால் வட்டார அளவில் இருந்துதான் தொடங்க முடியும்

. ஏற்கனவே மாவட்ட மறியலில் TNPTF தன்னோட கடுமையான எதிரப்பை பதிவு செய்துள்ளது. ஒரே கல்வித்தகுதி உள்ள அனைவரிலும் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டதை தமிழ்நாடு ஆரம்ப்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னோட கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. நேற்று கரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.என.பி.டி.எப். பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் கூட்டுப்போராட்டத்திற்கு முயற்சி நடப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் இடைநிலை ஆசிரியர்க்கு சரியான தீர்வு கிடைக்கும் என்றார். ஒரு வேளை கூட்டுப்போராட்டத்திற்கு வராத இயக்கங்களை தவிர்த்து விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தமிழக ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு. ஒன்றுபட்ட போராட்டமே நம் துயர் ஓட்டும். தோழர்களே தாங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமைகளை கூட்டுப்போராட்டத்திற்கு நிர்பந்தியுங்கள். இயலவில்லையென்றால் கூட்டுப்போராட்டம் நடத்தும் இயக்கத்தில் இணையுங்கள். நளைய வெற்றி நமதே!!! இளைஞர்கள் பலம் என்ன என்பதை இவ்வுலகிற்கு உணர்த்துவோம்.