இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 12, 2013

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கி ஆண்டாய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது வழக்கம்.

இப்போது விரைவில் ஆண்டாய்வு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டாய்வு செய்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''ஒவ்வொரு யூனியனிலும் வாரத்திற்கு 2 பள்ளிகள் வீதம் ஆண்டாய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் ஒரு நாள் முழுவதும் (பள்ளி வேலை நேரம்) தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கல்வி தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளியில் மாணவர்களிடம் 2 மணி நேரம் கலந்துரையாட வேண்டும். இலவச சைக்கிள், இலவச சீருடை உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய திறந்த வெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அந்த குறைகள் நீக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 11, 2013

AEEO க்களின் பணிகள் குறித்து தொடக்ககல்வி இயக்குநரின் கடிதம்

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

  பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய, பண, பணி மற்றும் இதர பலன்களை, உரிய நேரத்தில் பெறவும், நிலுவைகளை உடனுக்குடன் பெற்று, பணி தொய்வடையாமல் இருக்கவும், அனைத்து கல்வி அலுவலகத்திலும், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

இதன்படி, தொடக்கக் கல்வித் துறையில், மாதத்தின் முதல் சனிக்கிழமை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும், இரண்டாம் சனிக்கிழமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மூன்றாவது சனிக்கிழமை, தொடக்கக் கல்வி இயக்குனரகம் என்றும், பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இயக்குனரகம் என, மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகள், மாநில அளவில் தீர்க்கும் வகையில், இம்முகாம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இருந்த இம்முகாம்களில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தில், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ளலாம் என, உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் நடக்கும் குறைதீர்க்கும் முகாம் நடைமுறைகளையே, இவர்களுக்கும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

   இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள், அடிக்கடி ஏற்படும் பிழைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த பயிற்சியை அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில் படித்து, திருத்தம் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டுத் தேர்வு, கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 10, 2013

47 கேள்விகளில் தவறு தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை

   தமிழகத்தில் காலியாக உள்ள 605 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான தேர்வு ஜூலை 21ல் நடந்தது. தேர்வின் போது, ஏ, பி, சி, டி என நான்கு பிரிவு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் பி பட்டியலில் இருந்த 150 கேள்விகளில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. இதனால், கேள்வியின் அர்த்தம் மாறியிருந்தது. விடைகளிலும் பிழை காணப்பட்டது.கேள்வித்தாளில் இருந்த தவறு குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன்.

அவர் தவறை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பிழையுள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கவும், என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நேரத்தில் இதுபோன்ற தவறுகளுடன் கேள்வித்தாள் தயாரித்ததை ஏற்க முடியாது. இதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது கவனம் செலுத்தாமல் கேள்வித்தாள் தயாரித்தது தவறு. 47 கேள்விகளில் தவறு இருந்துள்ளது. இதை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் செப். 16ல் நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை காலை வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு, தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், பழைய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான, வங்கி சலானை, கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனவும், தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு

 துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங் களூக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று  டி.என்.பி.எஸ்.சி  அறிவித்திருந்தது. கல்வித்தகுதி:

தமிழகத்தில் பட்டதாரிகள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்பதால்  ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இன்று காலை முதல் டி.என்.பி.எஸ்.சி இணை யதளத்தில் விண்ணப்பம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்.  சர்வர் கோளாறு என்று காரணம் கூறப்படுகிறது.  இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள்.

Monday, September 09, 2013

திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது, 2011–ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜெயலட்சுமி மனு அனுப்பினார்.

இவரது மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், ‘தந்தை மரணமடையும்போது, ஜெயலட்சுமிக்கு திருமணமாகி விட்டது. எனவே அவருக்கு வேலை வழங்கமுடியாது’ என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– தந்தை இறந்து விட்டால், திருமணமான மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. அதனால், திருமணமான மகளுக்கு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகளால் கூறமுடியாது. பாகுபாடு கூடாது 2007–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின்படி, வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும். இதில், மகன் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.பெற்றோரை பாதுகாப்பது மகன், மகள் ஆகியோரது கடமை என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அங்கு பாலியல் ரீதியான பாகுபாடு பார்க்கப்பட வில்லை. எனவே தந்தை இறந்தால், திருமணமான மகளும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது. இதில் மகள், மகன் என்ற பாகுபாடு பார்க்க கூடாது.எனவே விஜயலட்சுமிக்கு கருணை அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலை வழங்கவேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Saturday, September 07, 2013

இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித் தேர்வை எழுதி, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று முதல், 10ம் தேதி வரை, www.examsonline.co.in என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ஜூன், 2013ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள, டி.எம்.ஆர்., கோடு எண்களை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, விரைவில், மறுகூட்டல் முடிவு அறிவிக்கப்படும். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.tndge.in என்ற இணையதளத்தில், இன்று (8ம் தேதி) முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, 11, 12 ஆகிய தேதிகளில், சி.இ.ஓ., அலுவலகங்களில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இநத் தகவலை, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Know Your CPS detail

Accountant General (A&E), Tamil Nadu
click below

http://www.agae.tn.nic.in/

Friday, September 06, 2013

இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்குகள் வெளியீடு

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 2 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள ஊழியர்கள் தங்களது 2011-12- ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்கு அறிக்கையை கருவூலங்களில் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளிடம் (டி.டி.ஓ.) பெற்றுக்கொள்ளலாம் என சென்னையிலுள்ள முதன்மை கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் 29.02.12 ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ அந்த அலுவலகத்துக்கான டி.டி.ஓ.விடம் இந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். கருவூலங்களுக்கு இந்த கணக்கு அறிக்கைகள் சி.டி.க்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் 2 லட்சம் பேர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இந்தத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஓய்வூதிய திட்டத்துக்குச் செலுத்தலாம். அதற்கு நிகரான தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கும்.

இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மொத்த தொகையை ஊழியர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இப்போது நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து கணக்கு விவரங்களும் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலோ அல்லது மேலும் தகவல் தேவைப்பட்டலோ கீழ்க்கண்ட முகவரியிலோ, தொலைபேசியிலோ தகவல் தெரிவிக்கலாம்.

வர்ஷினி அருண், துணை மாநில கணக்காயர் (நிதி), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), அண்ணாசாலை, சென்னை - 18. தொலைபேசி: 044-24314477. மேலும் விவரங்களுக்கு  http:www.agae.tn.nic.in

SAVE WATER Secure Future- Drawing Competition Prescribed Format

இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  ஆசிரியர் தேர்வு கடந்த 2007–ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக கல்வித்துறை 2007–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

இந்தமனு, தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின் இருநபர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில அளவில் இடைநிலை ஆசிரியர் தேர்வு முறையானது மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் உத்தரவிட்டது. கடந்த 2008–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர், மற்றொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
எனவே, ஒட்டுமொத்த மாநில அளவில் தான், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2008–ம் ஆண்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், அதிக காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியை நிரப்ப, தமிழக அரசுக்கு அனுமதியளித்தது. மேலும், ஒரு மாவட்டத்தில் தேர்வாகும் ஆசிரியர்கள், தன் சொந்த மாவட்டத்தில் தான் பணியிடம் வேண்டும் என்றோ அல்லது இடமாறுதல் வேண்டும் என்றோ கோரக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு 7000 ஆசிரியர்களை நியமனம் செய்தது. அதில், 5000 ஆசிரியர்கள் தொலைதூர, பிற வெளிமாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் 2009–ம் ஆண்டு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேற்படி 2009–ம் ஆண்டு சட்டப்படி தேவையற்றதாகிவிட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவால் பாதிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு செய்தனர். இடமாறுதல் வழங்கலாம் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எச்.எல்.கோகலே மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காததால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை முடிவுக்கு வந்தது. இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களின் கோரிக்கை அரசின் ஆணைக்கு உட்பட்டு மாவட்ட பணிமாறுதல் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அளித்த ஆசிரியர் பரிசாக இது விளங்குகிறது என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 6, 7, 8, 9, 10 ம் வகுப்புகளுக்கு, செப்., 12, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 10 முதல் செப்., 21 வரை, காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வினாக் களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, தேர்வு துறையால் "சிடி' அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே,பள்ளி கல்வி இணை இயக்குனர் ஆர். ராஜேந்திரன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,""காலாண்டு தேர்வுகள் நடைபெறும் நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது. பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் வினாத்தாள் கொண்டு செல்லப்படுவதை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டுள்ளார்.

தனித்தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள், வரும், 23ம் தேதி துவங்கி, அக்., 5ம் தேதி வரை நடக்கின்றன. 10ம் வகுப்பு தனித்தேர்வுகள், வரும், 23ல் துவங்கி, அக்டோபர், 1ம் தேதி வரை நடக்கிறது. இரு தேர்வுகளையும் சேர்த்து, 50 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும்.

Thursday, September 05, 2013

TNPSC Group II பாடத்திட்டம் வெளியீடு

இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பாகும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி வரை விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி ஆகும். இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், ஒளிவுமறைவின்றி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3–வது கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ள இந்த தேர்வில், தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் வண்ணம் ‘‘ஆப்டிடியூட்’’ எனப்படும் திறனறிவுத்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் கால் இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும்.

தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணையதளம் குரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம். வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும்.

பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.


      சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், நேற்று மாலை விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட, 370 ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் வெள்ளி பதக்கம் ஆகியவற்றை, அமைச்சர் வழங்கினார்.

அமைச்சர் பேசுகையில்,""கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,'' என்றார். சபிதா பேசுகையில்,""அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.