1.இடைநிலை ஆசிரியருக்கு 9300-34800-4200 ஊதியம் நிர்ணயம் செய்தல்.தற்போது மாதமொன்றிற்கு ரூ4750இழப்பீடு
2.சி.பி.எஸ்.ரத்து
3.ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10
4.முன்பருவக்கல்வி தொடங்குதல்
5.அலுவலக காலி பணியிடம் நிரப்புதல்
6.தகுதிதேர்வு கைவிடுதல்
7.கல்விக்கான தன்னாட்சி அமைப்பு
8.இலவச கல்வி உபகரணம் நேரடியாக பள்ளிக்கு அனுப்புதல்
9.மகப்பேறு விடுப்பிற்கு பதிலி ஆசிரியர் நியமணம்
10.மருத்துவப்படி ரூ50ஆக குறைத்தல்
11.அரசாணை 400 உரியதிருத்தம்
12.அரசாணை23 திருத்தம்
13.தொகுப்பூதிய கால ஊதியம் வழங்குதல்
Sunday, June 23, 2013
20.06.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுடனான கூட்டத்தின் போது TNPTFஆல் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம்
Saturday, June 22, 2013
TENTATIVE TRAINING schedule 2013-14
CRC
CCE&SAVL-6-7-13
READING&WRITING skills:26-10-13
simple science concept: 4-1-14
TRAININGS
RTE child protection :20-8-13
social equity:4-9-13
cyber safety:20-11-13
communicative English:4-12-13
பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போதே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்கள், இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது
.பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிலையில், மதிப்பெண் சான்று வழங்கப்படுகிறது. மாணவர்கள், பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போது, இணைய தளம் வாயிலாக, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ள, அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.மாணவ, மாணவியர், ரேஷன் கார்டு நகல், ஜாதிச் சான்று நகல்களையும் கொண்டு செல்ல வேண்டும். ரேஷன் கார்டில், தங்களின் (பதிவுதாரர்) பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்களும் பதிவு செய்து, மதிப்பெண் சான்றுடன், வேலை வாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். 20ம் தேதி முதல், 15 நாட்களுக்கு இந்த சேவை இருக்கும் எனவும், 15 நாட்களில் பதிவு செய்வோருக்கு, ஜூன் 20ம் தேதிப் படியே பதிவு மூப்பு தரப்படும் என, வேலை வாய்ப்புத் துறை தெரிவித்துள்ளது
.வேலை வாய்ப்பு அலுவலங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும், மாணவர்களின் அலைச்சலைப் போக்கும் வகையிலும், இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.
Friday, June 21, 2013
பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது
. மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும்,சென்னை, மாநகர போக்குவரத்து கழகம்- 3.50 லட்சம்; விழுப்புரம் போக்குவரத்து கழகம்- 4.79 லட்சம்; சேலம் போக்குவரத்து கழகம்- 2.79 லட்சம் பேர் என, அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம், பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில், 14.02 லட்சம் பேருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, 323.70 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, போக்குவரத்து துறையிடம் உள்ள, மாணவர்களின் பட்டியல், கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலை, சரிபார்க்கும் பணியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல் கிடைத்த உடன், பஸ்பாஸ் தயாரிப்பு பணியில், போக்குவரத்துத் துறை ஈடுபடும் என, தெரிகிறது. காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பழைய பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவரை, இலவசமாக பயணிக்க அனுமதிக்கின்றனர்; சில பகுதிகளில், டிக்கெட் வசூல் செய்யப்படுகிறது; பல பகுதிகளில், மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, மாறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இக்குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண, பஸ் பாஸ் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்கம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழுக்கான, பொதுத் தேர்வில், சில தனித்தேர்வர்களின், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்கள் பெறப்படவில்லை. எனவே, தேர்வர்கள், நிலுவையில் உள்ள செய்முறை தேர்வு மதிப்பெண்களை உரிய தலைமையாசிரியடம் பெற்று, இம்மாதம், 24ம் தேதிக்குள், அரசு இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட தேர்வர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநு£ல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும். அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடவேண்டும்.வாக்காளர் தினம் (ஜன 25), தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி (ஜன 30), கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் (மே5), குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி நாள் (ஜூன் 12), நல்லிணக்க நாள் (ஆக 8), பயங்கரவாத ஒழிப்பு நாள் (அக் 31), விழிப்புணர்வு வாரம் (நவ 11), தேசிய ஒருமைப்பாட்டு நாள் (நவ 19), வரதட்சணை ஒழிப்பு தினம் (நவ 26), எயிட்ஸ் விழிப்புணர்வு நாள் ( டிச 1) ஆகிய நாட்களில் மாணவர்களை உறுதிமொழி எடுத்து கொள்ள செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு
் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு ஜூன் 28ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 04362 - 227782, 226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின்படி தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை
Thursday, June 20, 2013
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
பள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்
முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் சங்கத்திற்கு மூவர் வீதம் அழைக்கப்பட்டனர்,
பின்னர் உயர்நிலைப்பள்ளி சார்ந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.இதில் தொடக்கக்கல்வியோடு இனணந்து பணியாற்றும் சாஸ்திரா பட்டதாரி ஆசிரியர் கூட்டணி,பட்டத◌ாரி ஆசிரியர் சங்கம்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டன.பின்னர் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்டன
பின்னர் கல்வித்துறைஅமைச்சுபணியாளர்அனைத்து சங்க பிரதிநிதிகள், உ.தொ.க.அ. சங்க பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசணை நடத்தப்பட்டது.
வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில(அனைத்தும் சங்கங்களின் கருத்து தொகுப்பாக) முழுமையான விபரங்கள் இல்லை.
1.இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 ஆக உயர்த்துக
2.சி.பி.எஸ் முறையை கைவிடுக
3.Dual degree -க்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது
4.1-5,6-10,6-12 என்கிற முறையில் வகுப்புகள் கொண்ட பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்( உயர்,மேல்நிலைப்பள்ளி சங்கங்கள்)
5.அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக்காவலர் நியமனம் செய்க
6.அலகுவிட்டு அலகு விட்டு மாறுதல் தருக
இவற்றில் ஒரு சில கோரிக்கைகள் தவிர மற்றவை திரு
courtesy:annadurai velusamy
பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்
.அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசி ரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.
எனவே இவ் அரசாணையை உட்பட அனைத்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு
டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம். வேலையில் ஏதாவது பிரச்னை நடந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கலாம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பள்ளிகள் மீது எடுக்க முடியாது. அதனால் தான், அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்குகிறோம். விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தெளிவாக கூறியுள்ளோம். "கிளார்க்'குளை மட்டுமே, இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம்.இவ்வாறு சுர்ஜித் கே. சவுத்ரி கூறினார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை
பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில், நேற்று மாலை, 4:00 மணியில் இருந்து, ஒவ்வொரு சங்க நிர்வாகிகளையும் அழைத்து, அவர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, சங்க நிர்வாகிகள், கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், பேட்ரிக் ரைமாண்ட், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க தலைவர், ரவிச்சந்திரன், பொதுச்செயலர், தேவி செல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில், விளையாட்டுக்கென, தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தலா, ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம் என, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், "
"மாவட்ட கல்வி அலுவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், 14 வகையான இலவச பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் பணியை கவனிக்க, தனி ஊழியர் நியமனம், நிலுவையில் உள்ள சிறப்புக் கட்டணத்தை, உடனடியாக வழங்க கோருதல், கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். முதல்வருடன், ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்,'' என்றார்.
ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Wednesday, June 19, 2013
Tuesday, June 18, 2013
TNPSC Group IV Vacancies 3469 Jr Assistant 1738 Typist - June 2013
Post And Vacancies :
Junior Assistant (Non - Security) : 3469 posts
Junior Assistant (Security) : 62 posts
Bill Collector Grade-I : 19 posts
Typist : 1738 posts
Steno-Typist Grade-III : 242 posts
Field Surveyor : 06 posts
Draftsman : 30 posts
Important Dates :
Date of Notification 14.06.2013 -
Last date for submission of applications 15.07.2013 -
Last date for payment of Fee through Bank or Post Office 17.07.2013 -
Date of Written Examination 25.08.2013 10:00 A.M. to 1:00 P.M.
Required Qualification :
Candidates should possess the following or its equivalent qualification : Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.
TECHNICAL QUALIFICATION:
(a) FOR TYPIST:
Must have passed the Government Technical Examination in Typewriting:-
(i) by Higher / Senior Grade in Tamil and English (or)
(ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
(iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
(b) FOR STENO-TYPIST, GRADE III :
Must have passed the Government Technical Examination both in Typewriting and in
Shorthand:-
(i) by Higher / Senior Grade in Tamil and English (or)
(ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
(iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
Computer Qualification (for Typist and Steno-Typist, Grade III):-
Candidates should have passed the “Certificate Course in Computer on Office Automation” awarded by the Technical Education Department.
Selection by a written test on 25/08/2013.