இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 14, 2012

நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவு கள்

் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்தப் புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழக்கத்தைவிட கூடுதலாக நேரம் ஆகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 6 லட்சம் பேர்: தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். எந்தவொரு பிரச்னையும் இன்றி இந்தத் தேர்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தேர்வின் அடிப்படையில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

காலையில் நடைபெற்ற முதல் தாளை 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர். பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் தாளை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர். சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர். தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பெரும்பாலான தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முதல் தாளில் ஆங்கிலமும், இரண்டாம் தாளில் தமிழும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். 3 வாரங்களுக்குப் பிறகு விடைகள் வெளியீடு: தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு இந்த விடைத் தாள்கள் அனைத்தும் கொண்டுவரப்படும். அதன் பிறகு மூன்று வாரங்கள் இந்த விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெறும். விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கேள்விகளுக்கு உரிய சரியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தினமணி ஆசிரியர்க்கு-பொதுச் செயலரின் கடிதம்

Saturday, October 13, 2012

இன்று டி.இ.டி., மறு தேர்வு : 6.16 லட்சம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தும் டி.இ.டி., தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 6.16 லட்சம் தேர்வர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர், தோல்வி அடைந்தனர். கடந்த மாதம், 17 ஆயிரம் பேர், புதிதாக விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான டி.இ.டி., தேர்வு, இன்று, 1,094 மையங்களில் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வும் நடக்கிறது. முதல் தாள் தேர்வை, 2.52 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 3.64 லட்சம் பேரும் எழுதுகின்றனர். இரு தாள்களையும் சேர்த்து, 58 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். முந்தைய தேர்வில், தேர்வு எழுத வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இன்றைய தேர்வுக்கு, 3 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய தேர்வைப்போல், தேர்வர் தரப்பில் புகார் எழாது எனவும், நிதானமாக தேர்வர் விடை அளிக்க முடியும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்தது.

72 சதவீதம் பேர் பெண்கள் : முதல் தாள் தேர்வில், 24.20 சதவீதம் பேர் ஆண்கள்; 75.80 சதவீதம் பேர் பெண்கள். இரண்டாம் தாள் எழுதுவோரில், 30.30 சதவீதம் பேர், ஆண்கள்; 69.70 சதவீதம் பேர் பெண்கள். மொத்தத்தில், ஆண்கள், 27.80 சதவீதம் பேரும், பெண்கள், 72.20 சதவீதம் பேரும், தேர்வெழுதுகின்றன

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவு 2012

Teacher Training Observation Forms

Teaching practice Forms

Friday, October 12, 2012

EMIS - Student particular Format

டி.இ.டி., தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்

ஆலோசனைகள்:

* நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம

். * மறுதேர்வு எழுதுவோருக்கு, புதிய பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளவும்.
* தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள், அதே பெயரில் கிளைகளை கொண்டிருப்பதால், மையம் எது என்பதை முதல் நாளே உறுதி செய்யுங்கள்.
* போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட் வந்திருந்தால், அரசிடம் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட, போட்டோ ஒட்டிய, தற்காலிக அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்
. * விடைத்தாளில், ஒன்றன் பின்ஒன்றாக விடையளிப்பதே நல்லது. தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து, தெரியாதவற்றுக்கு பின்னர் விடையளிக்கலாம் என, நினைப்பது சரியல்ல; விடைத்தாள், ஓ.எம்.ஆர்., தாளாக இருப்பதால், கவனக் குறைவாக, வரிசை மாறிவிட வாய்ப்புண்டு; எல்லா விடைகளுமே தவறாகும் அபாயம் நிகழலாம்.

* வினாக்களின் ஆங்கில வடிவத்தையும் படிப்பது அவசியம். வினாக்கள், ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு, பின்னரே தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

* வினாத்தாள் தொகுப்பு, அனைத்து விருப்பப் பாடங்களையும் உள்ளடக்கியதாகத் தரப்படுகிறது. சமூக அறிவியல், அறிவியல் வினாக்களை கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும். சமூக அறிவியல், அறிவியலில் சில பாடங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால், விருப்பப் பாட வினாப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், கடந்த தேர்வில் சிலர் குழம்பினர்.

* கணித வினாவுக்கு, முழுக் கணக்கையுமே செய்து பார்க்க வேண்டியதில்லை. கொடுக்கப்பட்டுள்ள, "ஆப்ஷன்'களில், வினாவுக்கு சற்றும் பொருந்தாத இரண்டு விடைகளை, "டெலிஷன் மெத்தர்டு' - நீக்கல் முறையில் நீக்கிட வேண்டும். மீதமுள்ள இரண்டு, "ஆப்ஷன்'களில் எது சரி எனக் கண்டுபிடிக்க, சில, "ஸ்டெப்ஸ்'கள் போட்டால் போதும். நெருக்கமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதிவிட்டு, அடுத்த வினாவுக்கு சென்று விடலாம்.

* நேர மேலாண்மை அவசியம். ஒரே கேள்விக்கு விடையளிக்க நீண்ட நேரம், யோசிக்காதீர்.

உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் : விரைவில் டி.ஆர்.பி., அறிவிப்பு

  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள, 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

ஒரு ஆண்டை கடந்த நிலையில், இன்னும், உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை சார்பில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதற்குள், பழைய அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, சமீபத்தில், உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.

  உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., வேகமாக செய்து வருகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட உள்ளது.

எம்.பில்., மற்றும் "நெட்' அல்லது "ஸ்லெட்' ஆகிய தேர்வுகளில், தகுதியைப் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும், விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், அதிக கல்வித் தகுதி இருந்தால், 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பணி அனுபவத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக, 7.5 ஆண்டு இருந்தால், 15 மதிப்பெண்கள் கிடைக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

10ம் வகுப்புக்கு செய்முறைப் பயிற்சி: பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு

புகைப்படங்கள் பத்தாம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பதிவு செய்துகொள்ள அக்டோபர் 15 முதல் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்கள் (2012-13) அறிவியல் செய்முறை வகுப்புகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவு செய்ய ஆகஸ்ட் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததையடுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அக்டோபர் 15 முதல் 31 வரை அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவத்தை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.  மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக அளவாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் எவ்வித சிரமமும் அடையக் கூடாது என்பதற்காக பாடப்புத்தகங்களில் இருந்து அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா இலவசமாக வழங்கி வருகிறார். வேறெந்த துறைக்கும் இல்லாத சிறப்பு, சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.  

இத்தகைய துறையில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் அதே ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் மாணவர்களை முழுமையாகச் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அனைத்தும் நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை அடைய ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும்.  சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஏராளமாக வருகின்றன. இனிவரும் காலங்களில் பள்ளிகளில் எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது.  ஆசிரியர்களின் வருகையை, அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கல்வித் துறை அலுவலர் ஆசிரியர்களை நல்ல முறையில் நடத்துவது அவசியம் என்றார்.  பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபீதா, மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அ.கருப்பசாமி நன்றி கூறினார்.  

ஆய்வுக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சிறந்த பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் கேடயங்களை வழங்கினார்.  மாணவர் சேர்க்கை, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, ஆங்கில வழிப் பிரிவு துவக்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்துவது, மாணவர்கள்-ஆசிரியர் தகவல் தொகுப்பு, அலுவல் நடைமுறைகள் உள்ளிட்ட அறிவுரைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைச் செயலர் சபீதா வழங்கினார்.

Thursday, October 11, 2012

School Level painting competition


அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு

  அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துறையின் அறிவிப்பு: நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் பாரிமுனை இடத்திற்கு மாற்றம்

சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி முதல், பாரிமுனையில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது. வணிக வரித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த தேர்வாணையத்திற்கு, பாரிமுனை, பல் மருத்துவக் கல்லூரிக்கு பக்கத்தில், புதிய கட்டடம் கட்ட, முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆறு தளங்களுடன், 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில், 20 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, கடந்த மாதம், 27ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பல்வேறு பிரிவுகள், ஒவ்வொன்றாக, புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அனைத்துப் பிரிவுகளும் மாற்றப்பட்டு விட்டன. எனவே, 15ம் தேதியில் இருந்து, புதிய இடத்தில், தேர்வாணையம் முழுமையாக இயங்க உள்ளது. குரூப்-2 தேர்வுக்கான, பணி நியமன ஒதுக்கீட்டு கலந்தாய்வு, புதிய இடத்தில், முதல் நிகழ்ச்சியாக நடக்கிறது. பாரிமுனை பஸ் நிலையத்திற்கு அருகிலும், கோட்டை ரயில் நிலையத்திற்கு மிக அருகிலும், தேர்வாணைய அலுவலகம் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் தேர்வர்கள், எளிதில் சென்று வரலாம்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்

மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்,

"ஊனமுற்றோர் உரிமைக்குரல்' மாத இதழ், வெளிவர இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சட்டங்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான அரசாணைகள், போன்றவற்றை அறிய முடியும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய, பல்வேறு தகவல்கள், படிவங்கள், ஆணைகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாத இதழ் வெளியீட்டு விழா, மற்றும் இணையதள துவக்கவிழா, கவர்னர் மாளிகையில் உள்ள, அன்னபூரணா அரங்கில், இன்று காலை நடக்க உள்ளது.

October Month CRC-Inclusive Education

Wednesday, October 10, 2012

பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு: உண்மை நிலை வெளிவரும்

  தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

9ம் வகுப்பிற்கு 3 புத்தகங்கள

் அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது.

அடுத்த ஆண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கும் பணி, கல்வித் துறையில் தற்போது நடந்து வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்பார்வையில், பணிகளை முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை சரி செய்யும் பணியும், வேகமாக நடந்து வருகிறது.

அனைத்துப் பணிகளையும் முடித்து, மாத இறுதிக்குள், மூன்று பருவத்திற்கான பாடப் புத்தக பகுதிகளை, பாட நூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட நூல் வட்டாரம் கூறியதாவது:

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, நவம்பரில் துவங்கும். தற்போது, எட்டாம் வகுப்பு வரை, பருவத்திற்கு, இரு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பில், பாடத் திட்டங்கள் அதிகம். எனவே, ஐந்து பாடப் புத்தகங்களை, பருவத்திற்கு, மூன்று புத்தகங்களாக வழங்க திட்டமிட்டுள்ளோம். எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை அச்சிட, 140 அச்சகங்களுக்கு, தற்போது, "ஆர்டர்' வழங்கி வருகிறோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிம்கார்டு விற்பனை: அரசு புது உத்தரவு

"ரேஷன் கார்டு நகலுடன், 2012ல், பொருட்கள் வாங்குவதற்கான இணைப்பு சீட்டு பதிவு நகலும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் கம்பெனிகளின் சிம் கார்டுகளை வாங்கும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க, ரேஷன் கார்டு நகல் இல்லாமல் சிம் கார்டுகளை தர வேண்டாம் என, விற்பனையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் கார்டுகளை அடையாள அட்டையாக காட்டும் சிலர், புதுப்பிக்காத பழைய ரேஷன் கார்டுகளை காண்பித்து, சிம் கார்டுகளை வாங்குகின்றனர். இதையடுத்து, ரேஷன் கார்டு நகலுடன், இந்தாண்டு பொருட்கள் வாங்குவதற்கான உள்தாள் நகலும் வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர், ரேஷன் கார்டில் பொருட்கள் தொடர்ந்து வாங்கியதற்கான பதிவும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டுகளை வினியோகிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

14ம் தேதி டி.இ.டி., மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர

்  டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், 6.67 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், தோல்வி அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது; பின், புதிய தேர்வர்களும், தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம், 24 முதல், 28ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க, டி.ஆர்.பி., உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

முறைகேடின்றி ஆசிரியர் தகுதித் தேர்வு: வாரிய உறுப்பினர் தகவல

்  "அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார். ஏற்கனவே நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அவர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்.
சிவகங்கையில் அவர் கூறுகையில், ""ஏற்கனவே நடந்த தகுதி தேர்வில் வாய்ப்பு இழந்த, 6 லட்சத்து 55 ஆயிரத்து 243 பேர், புதிதாக விண்ணப்பித்த 20 ஆயிரத்து 43 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைபாடு, முறைகேடின்றி தேர்வை நடத்த கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்,'' என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.