இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 27, 2016

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு


'பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.

இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது.

ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

NATIONAL.UNIT DAY celebration

Click below

https://app.box.com/s/kj4qsh405oyr8azhp7xi0pjhioa6snl3

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

TNPSC group IV hallticket

Click below

http://182.18.164.63:8080/groupIVtnpscac2016/FrmLogin152016.aspx

NPSC பொதுத் தமிழ் -DINAMANI (group IV - முக்கிய குறிப்புகள் தேதி வாரியாக)

நன்றி:சுரேஷ்

Click below

http://www.tamilagaasiriyar.com/2016/10/tnpsc-dinakaran-group-iv.html?m=1

தமிழ் சொற்கள் அகராதி


http://www.tamilvu.org/library/dicIndex.htm

Wednesday, October 26, 2016

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?


தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகை முதலே, தீபாவளி பண்டிகைக்கான முன் தயாரிப்புகள் துவங்கி உள்ளன.

தீபாவளி பண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வரையும், அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம் போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள், வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.

எனவே, ஆசிரியர், மாணவர், பெற்றோர் வேண்டுகோள்படி, பல மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை எடுத்து கொள்ள, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். சில பள்ளிகள், வெள்ளிக்கிழமை மதியம் வரை, பள்ளிகளை இயக்க முடிவு செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், அதற்கு பதில், வரும் வாரங்களில் விடுமுறை நாளான சனிக்கிழமையில், ஈட்டு வகுப்பு நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

GROUP-IV SERVICES-HALL TICKET PUBLISHED-DATE OF EXAM:6/11/2016

Click below

http://182.18.164.63:8080/groupIVtnpscac2016/FrmLogin152016.aspx

தீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா ? என்ன சொல்கிறது அரசு அறிக்கை....!

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29-ம்  தேதி கொண்டாடப்படுகிறது. 'மாத கடைசியில் தீபாவளி வருகின்றதே... செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வது... ' என்ற வருத்தத்தில் அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்டோபர் மாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்னரே வழங்கவேண்டும் என்று  கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மாதம் தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அக்டோபர் 25-ம்  தேதி, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட அரசாணை 277-ல், 'இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி அன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அக்டோபர் 21-ம் தேதி கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கான ஊதியத்தை 28.10.16 அன்று வழங்க சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரையை வழங்க முதன்மைச் செயலர் கருவூல கணக்கு ஆணையருக்கு அணுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது’ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். "புதிய அகவிலைப்படியை 1.7.16 முதல் வழங்கவில்லை என்றாலும், இந்த மாத சம்பளத்தையாவது தீபாவளிக்கு முன்பு தர ஆணையிட்டுள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது" என்று கூறி வந்தனர். ஊழியர்களின் சந்தோஷத்துக்கு வேட்டு வைப்பது போல,  நிதித்துறை  வெளியிட்ட அரசாணை  எண் 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அவசர அவசரமாக கருவூலத்துறை ஆணையரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தனது, கிளை கருவூலங்களுக்கும், "அக்டோபர் மாத சம்பளத்தை வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்" என்று அறிவித்துள்ளனர். அரசுத் துறையிலேயே குழப்பமாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருவூல கணக்குத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது “மாதத்தின் இறுதி நாட்கள் விடுமுறை தினமாக இருந்தால் மட்டுமே அதற்கு முந்தின வேலைநாளன்று சம்பள விநியோகம் செய்யலாம். ஆனால் இந்த மாதம் 31-ம் தேதி அலுவல் நாளாக உள்ளது. கருவூல கணக்கு சட்டப்படி, இறுதி நாள் பணிநாளாக இருந்தால், அந்த நாளில் தான் சம்பளம் போட வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை, அதற்கு மறுதினம் ஞாயிற்றுக் கிழமை. ஆனால் திங்கள் கிழமை அன்று வேலைநாள். அன்று தான் மாதத்தின் கடைசி நாள். ஆனால் நிதித்துறை 28-ம் தேதி வெள்ளியன்று சம்பளம் போட அறிவித்தது. ஆனால் சட்டப்படி அந்தநாளில் அப்படி போட முடியாது என்பதால் தான், நாங்கள் எங்கள் அலுவலர்களுக்கு, 28-ம் தேதி சம்பளம் போட வேண்டாம். அரசாணை 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறுகையில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய ஊதியமும் இதுவரை வழங்கவில்லை. அகவிலைப்படி உயர்வும் தரவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று, இந்த மாத சம்பளத்தை அக்டோபர் 28-ம் தேதி போடுவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு கருவூலத்துறை முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அரசாங்கம் நினைத்தால் முன்கூட்டியே சம்பளம் போடலாம். ஆனால் அவர்கள் அதைபற்றி யோசிக்கவில்லை. நிதித்துறை அனுமதி அளித்தும், அவர்களுக்கு கீழ் செயல்படும் கருவூலத்துறை உயர் அதிகாரிகளின் பிடிவாதத்தால், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தின் தித்திக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை, கசக்க வைத்து விட்டனர். இதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டார். 

அரசுத் துறைகளின் இந்த மோதலால், தீபாவளிப்பண்டிகை அரசு ஊழியர்களுக்கு தீபா’வலி’   ஆகிவிடுமோ ?

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

Tuesday, October 25, 2016

முன் கூட்டியே ஊதியம் இல்லை

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் இல்லை

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.


முன்கூட்டியே சம்பளமா? :

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளி இந்த மாதம் 29 ஆம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. அதனை பரிசீலனை செய்து, இந்த மாதத்திற்கான சம்பளத்தை 28 ஆம் தேதி வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஊதியம் என அறிவிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் 277 செல்லாது என கருவூலகத்துறை வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புபடி வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையை கொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

" இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது. அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்


பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தினமும் சுமார் 5 நிமிஷங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-இல் கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் முக்கிய கடமையாகும். முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தவறுதல் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்கள் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை மாணவர்கள் தவிர்க்கவும். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக் கூடிய ஆடைகளை அணியக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்துகொண்டோ பட்டாசு வெடிக்க வேண்டும். கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகில் வெடிக்காமல் பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இரவு 10 முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உடலையும் மனநிலையையும் பாதிக்கும் வகையில், அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

மகிழ்ச்சி நிறைந்த விபத்துகளற்ற தீபாவளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்துக்கு பின்னரோ அல்லது அணி திரளும்போதோ சுமார் 5 நிமிஷங்களுக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பேச வேண்டும். விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல், ஒரு குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 5 முதல் 10 நிமிஷம் தீ பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி நடத்துதல், வரைபடபோட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

ஜி.பி.எப்., வட்டி குறைப்பு


ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அக்., 1 முதல், டிச., 31 வரை, இந்த நிதிக்கு, எட்டு சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Monday, October 24, 2016

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு


அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது, 4–வது, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்கு எத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3–வது, 4–வது, 5–வது படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பணி தொடங்கியது

அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.
அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை


கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது. இதில், தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்த, 2006 முதல், கடந்த செப்., வரை நடந்த, பல தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த புத்தகம், இன்று முதல் சிறப்பு மையங்களில் விற்பனை செய்யப்படும். வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல் மாணவர்களுக்கு மட்டும், நவ., இறுதியில் தான் புத்தகம் கிடைக்கும்.  சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெற்றோர், ஆசிரியர் கழக அலுவலகத்தின் சிறப்பு கவுன்டர்கள்  அமைக்கப்படும்

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக, ஒரு அரசு பள்ளியில், வினா வங்கி புத்தகம் கிடைக்கும். அதன் முகவரியை, மாவட்ட முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்.

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி


'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியாகும்.

தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில், ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால், விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி, நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்,'' என்றார்

Sunday, October 23, 2016

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?


புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது.

எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்

Tamil pdf books

Click below

http://www.tamilnavarasam.com/otherbooks.aspx