இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 03, 2014

அடுத்த கல்வி ஆண்டு முதல்அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் செயலாளர் சபீதா தகவல்

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

Tuesday, December 02, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2ஏ முடிவுகள்: டிசம்பர் 15ல் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் - 2ஏ தேர்வின் முடிவுகள் டிசம்பர் 15 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பினை, டிஎன்பிஎஸ்சியின் பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சியின் சார்பில் நேர்முகதேர்வு அல்லாத குரூப்-2ஏ தேர்வு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. இத்தேர்வின் மூலமாக உதவியாளர், தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தேர்வின் முதல்நிலை முடிவுகள் வருகின்ற 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அடையாள அட்டை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புகைப்படம் எடுக்க தவறியவர்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரையிலும் 440 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிரந்தர மையங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையின் விவரங்களை பதிவு செய்து ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

அந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு கண் கருவிழி பதிவு, கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்ததற்கான ரசீது ஒன்று கொடுக்கப்படும். இந்த ரசீதை வைத்து இணையதளம் மூலமாக ஆதார் அடையாள அட்டை தபாலில் விண்ணப்பித்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதா? என்ற விவரத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 5 கோடியே 1 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 73 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களையும் ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் விடுபடாமல் முழுமையாக இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் தலைமையில் எழிலகத்தில் நேற்று ‘காணொலி காட்சி’ (வீடியோ கான்பரன்சிங்) மூலம் 16 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் உடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் வருவாய்த் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்களை விரைவாக பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்கள் வாரியாக தொடங்கப்பட்டுள்ள நிரந்தர மையங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?, செயல்பாட்டுக்கு வராத நிரந்தர மையங்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வருகின்ற மார்ச் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆதார் அட்டை முழுமையாக சென்றடைய வேண்டும். அதற்குள் நிறைவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21RlRvRmpCcGo3NkE/view?usp=sharing

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி தொடக்க விழாவில் இந்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக 42 யூனிட்டுகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்க அரசு ஆணையிட்டது. முதல்கட்டமாக, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 73 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நிர்வாக பயிற்சி

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 73 பேருக்கு, சென்னையில், பயிற்சி வகுப்பு நடந்தது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி, 32 தலைப்புகள் கொண்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கையேடை வெளியிட்டார். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில உச்சரிப்பை, சரியான முறையில் கற்க வேண்டும் என்பதற்காக, தயார் செய்யப்பட்டுள்ள குறுந்தகதடையும், அமைச்சர் வெளியிட்டார். பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள் எப்போது?

கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி, வி.ஏ.ஓ. தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில், வேறு பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடத்தப்பட்டதோடு, தற்போது குரூப் 4 தேர்வும், டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ளது. அதுமட்டுமின்றி, 2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. அதன் முடிவுகளை TNPSC எப்போது வெளியிடும் என்று தேர்வெழுதியோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

KNOW YOUR "GPF" STATUS JUST IN ONE CLICK

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த அவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரிய தலைவராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளரக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்துவந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்., பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர்ப்புற திட்ட துறை ஆணையர் ஆர்.வெங்கடேசன், வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக இருந்த நசீமுதீன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மோகன் பியாரே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சி.மனோகரன் ஐ.ஏ.எஸ். வேளாண் தொழில் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்., தமிழக கடல்சார் வாரியம் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறு தொழில் கூட்டமைப்பு, டான்சி தலைவராக நிர்மலா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Monday, December 01, 2014

ஏ.டி.எம். கட்டணம்: மேலும் பல வங்கிகளில் இன்று முதல் அமல்!

ஏ.டி.எம் களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறையை மேலும் பல வங்கிகள் இன்று முதல் அமல்படுத்தியுள்ளன. வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம். களில் பணம் எடுக்க மாதத்திற்கு 5 முறை மற்றும் பிற வங்கி ஏ.டி. எம்-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 20 ரூபாய் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததை தொடர்ந்து அத்திட்டம் கடந்த மாதம் 1 ஆம் தேதி முதலே டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வந்தது.

பல வங்கிகள் இந்த முறையை நடைமுறைப்படுத்திவிட்டன. இருப்பினும் இன்று முதல் மேலும் சில வங்கிகள் இந்த முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. எனினும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடாக் மகேந்திரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த முறையை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group IV know your application status

Click below

http://www.tnpsc.gov.in/Appstatusget-grp42k14.html

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வை நடத்துகிறது. 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கென 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிந்து, விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால் அந்த விண்ணப்பதாரர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தேர்வாணையத்தின் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 5 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரரின் பெயர், தொகுதி 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம், இந்தியன் வங்கி), வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

சில மாதங்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர், மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 80 சதவீத ஆசிரியர்கள் கல்வி போதிப்பதில் முழு ஈடுபாடு காட்டுவதில்லை. மாணவர்களை குறைகூறி தங்களது கடமையிலிருந்து தவறி வருவதாகவும், இதன் தாக்கம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் கடுமையாக எதிரொலிப்பதாகவும் தெரியவந்தது.

மேலும், பாடங்களை மனனம் செய்வதால், மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போது தடுமாறுவதாகவும், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வித் துறை இணை இயக்குநர்கள், கல்வித் துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மாணவ, மாணவியர்களுக்கு 6, 7, 8ஆம் வகுப்புகளில் இருந்தே கல்வி கற்பிப்பதில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் முழு ஈடுபாட்டுடன், அறிவுப்பூர்வமாக கற்கச் செய்துவிட்டால், உயர் கல்வியில் மாணவர்களின் தடுமாற்றங்களை அறவே தடுக்க முடியும்.

மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களைச் சார்ந்தது. மாவட்டந்தோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த, 6, 7, 8ஆம் வகுப்புகளிலேயே போதிய பயிற்சிகளை வழங்கி, முன்னேற்பாடுகளை செய்யவேண்டும்.

இதற்கு, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளை, அரசு பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம்: கிளம்புகிறது கடும் எதிர்ப்பு

அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதியில்லை என்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறும் வகையில், மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தரை வார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது, கல்வித் துறையினரிடம் பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும் என, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு அறிவித்தது. இதன்மூலம், பள்ளி துவங்க, 60 சதவீத பணத்தை தனியார் கொண்டு வந்தால், 40 சதவீத தொகையை அரசு அளிக்கும். பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் தனியார் பள்ளியாக்கப்படும். இத்திட்டத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த 2013 நவம்பரில், இத்திட்டம் குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், விரைவில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் மாற்றப்படும். தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் துவங்க, எந்த விண்ணப்பமும் பெறவில்லை என கூறியிருந்தார். ஆனால், இத்திட்டத்தைப் போலவே உள்ள ஒரு புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.

* மாநகராட்சி பள்ளிகளில், 50 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை உள்ள ஏழு பள்ளிகளை, முதல் கட்டமாக தனியாருக்கு அளிக்க உள்ளனர்.

* இப்பள்ளிகளின் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் தனியாருக்கு அளிக்கப்படும்.

* இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

* ஆண்டுக்கு, மாணவர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாயை, பள்ளியை நடத்தும் தனியாருக்கு, மாநகராட்சி அளிக்கும்.

* பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் வசமே இருக்கும். இந்த திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எந்த வகையில் சிறந்தவை?

பள்ளிக்கு தேவையான கழிப்பறை, துப்புரவாளர், இரவு பாதுகாவலர், மொழி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என, எதையும் செய்து தராமல், சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது என, மாநகராட்சி காரணம் சொல்கிறது. அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படாது என, ஜெயலலிதா உறுதி அளித்தார்.

அவர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மாநகராட்சிப் பள்ளிகளை, தனியாருக்கு அளிக்கும் வேலையை, சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. தனியார் பள்ளிகள், எந்த வகையில் தரமானது என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்; என்ன மாற்றம் வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மேயர் சைதை துரைசாமி, ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்துகிறார். அதன்மூலம், பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கினோம் என சொல்பவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில், அந்த நிர்வாகத்தை ஏன் அமல்படுத்தவில்லை.

- பிரின்ஸ் கஜேந்திர பாபு, மாநில பள்ளிகள் பொது மேடை அமைப்பின் பொதுச்செயலர்

தனியாருக்கு துணைபோகும் அரசு

இலவச கல்வி அளிப்பதை முற்றிலுமாக உதறிவிட, அரசு நினைக்கிறது. அதன் ஒரு கட்டமாக, மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு அளிக்கின்றனர். ஒரு மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றால், அத்தொகையை மட்டும் கொண்டு, பள்ளியை தனியார் நடத்தி விடுவரா? மாறாக, மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவர்.

இதனால், கல்வி மூலம், தனியார் சம்பாதிக்க அரசே துணை போகிறது. மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சீர்செய்ய, மாநகராட்சி ஏன் முன்வரவில்லை. தனியாரிடம் என்ன எதிர்பார்க்கின்றனரோ அதை மாநகராட்சியால் ஏன் செய்ய முடியாது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும்.

- வசந்தி தேவி, முன்னாள் துணைவேந்தர்

கொள்கை இல்லாத அரசு

அட்டவணை பாடம் (Activity Learning), புத்தக வழிப்பாடம் இதில் எதை நடத்துவது என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. இத்தகைய குழப்பமான ஆரம்பப் பள்ளி கல்விக் கொள்கையை, அரசு வைத்துள்ளது. இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மாற்றினர். பல பள்ளிகள், ஓராசிரியர் பள்ளியாகவே நீடிக்கின்றன.

இந்நிலையில், கல்வித் தரம் குறைந்து விட்டது என, அரசு எப்படி கூற முடியும்? அரசிடம் தெளிவான கல்விக் கொள்கையோ, இலவச கல்வியை தொடரும் எண்ணமோ இல்லை. தனியாரிடம் கல்வித்துறையை முழுமையாக அளிக்க திட்டமிடுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த, டிச., 7ம் தேதி நடக்கும்,

ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல்: சந்தீப் சக்சேனா தகவல்

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது வரை எண்பத்தாறு சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாகக் கூறினார். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவுற்று திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர்.

புதிதாக விண்ணப்பித்த இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என சக்சேனா தெரிவித்தார். தற்போதுள்ள கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால் ,புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்பவருக்கு ,வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

Click below

https://app.box.com/s/dr2wgk4eyfbvheo5rvng

NMMS mail

Click below

https://app.box.com/s/5i5vr5a1ei2q7zma1ucn

Tamil reading module

Click below

https://app.box.com/s/bnfznm4voqxul07cgz3g

English module 1

Click below

https://app.box.com/s/0i6tnfnsa6cvsm7w3c06