இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 30, 2014

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு


    புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.  இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் நீதிபதி சிங்காரவேலு குழுவிடம் மேல்முறையீடு செய்தன.

அதேபோல், பல தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தன.  இந்தப் பள்ளிகளுக்கும், புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இப்போது தமிழக அரசின் இணையதளத்தில் கட்டண நிர்ணய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இது தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியது:  மேல்முறையீடு செய்த பள்ளிகள் மற்றும் நீதிமன்றம் சென்ற பள்ளிகள், புதிய பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பள்ளிகளுக்கான புதிய கட்டண நிர்ணயத்தோடு, ஏற்கெனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டண விவரங்களும் சேர்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அந்தந்த தனியார் பள்ளிகள் தங்களது கட்டண நிர்ணயத்தை வெளியிட வேண்டும். அவ்வாறு பள்ளிகள் வெளியிடவில்லையென்றாலும், அந்தப் பள்ளிகளின் கட்டண விவரங்களைப் பெற்றோர்கள் இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.  5 பள்ளிகள் மீது நடவடிக்கை:  நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக கட்டணம் வசூலித்ததாக 5 பள்ளிகளின் மீது புகார்கள் வந்தன. இந்தப் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு கட்டண நிர்ணயக் குழு பரிந்துரையை அனுப்பியுள்ளது.  அதேபோல், கட்டண நிர்ணயக் குழு சார்பில் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை தானாகவே முன்வந்து ஆய்வு செய்யும் வகையில், குழுவில் கண்காணிப்புப் பிரிவு ஏற்படுத்த அனுமதி கோரி அரசுக்குப் பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் குழுவுக்கு அதிகக் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 23ல் கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23-ல் தொடங்குகிறது. விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 23,24-ல் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை நடைபெறும் என்றும் அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 29, 2014

இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: மதுரை மண்டலத்தில் 2,500 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஜூன் 2014 பருவத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இக்னோ இணையதளத்தில்(www.ignou.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்களுக்குரிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு மையங்கள் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தங்களுக்கான இக்னோ அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பிசிஏ, எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஜூன் மாத இறுதியில் அனுப்பப்படும். தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டு சம்பந்தமான விளக்கங்களுக்கு மாணவர்கள் மதுரை மண்டல மையத்தினை 0452-2370733, 2380733 ஆகிய தொலைபேசி எண்களிலும்,remadurai@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்ப

தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 11ம் தேதி துவங்க இருந்த இரண்டாம் ஆண்டு தேர்வுகள், ஜூன் 26ம் தேதி துவங்கி; ஜூலை 3ம் தேதி முடிகிறது. இதன்படி 26ம்தேதி-இந்திய கல்வி முறை, 27-கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 28- தமிழ் மொழிக்கல்வி, 30- ஆங்கில மொழிக் கல்வி, ஜூலை 1ம் தேதி- கணிதவியல், 2- அறிவியல், 3- சமூக அறிவியல். ஜூன் 20ம் தேதி நடக்கயிருந்த முதலாண்டு பட்டயத் தேர்வுகள் ஜூலை 7 ம்தேதி துவங்கி; 14ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 7 ம்தேதி- கற்கும் குழந்தை, 8- கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 9-இளஞ்சிறார் கல்வி மொழிக் கல்வி, 10-கணிதவியல், 11- அறிவியல், 12- சமூக அறிவியல், 14- ஆங்கில மொழிக் கல்வி. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை


கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும். பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று முன்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, 55 சதவீத மதிப்பெண் என் பது 50 சதவீதமாக மாற்றப்பட்டிருப் பதாக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.மனோகரன் அறிவித்துள்ளார். எம்.எட். படிப்புக்கு ஜூலை 4-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறுகிறது.

TNPSC DEO exam hall ticket avail

Wednesday, May 28, 2014

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை

'முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், வி.ஏ.ஓ., சான்று, பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை,' என, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தி.மு.க., ஆட்சியில், ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., பொறுப்பேற்றவுடன் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள விபரங்களின்படி, புதிய அட்டைகள் வழங்கப்பட்டன.

60 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வீதம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று நிறுவனங்களுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உரிமை வழங்கியுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் காப்பீட்டு திட்டத்தை, எம்.டி.,இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை, வி.ஏ.ஓ., சான்று, புதிய அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலே சிகிச்சை பெறமுடியும்.

இந்நிலையில், மே 28 முதல் வி.ஏ.ஓ., சான்று, பழைய அட்டைகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது. புதிய அட்டை இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கவேண்டும், என, எம்.டி., இந்தியா நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், புதிய அட்டை கிடைக்காதவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

  அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது:

ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க் தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு


பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், பொது இடங்கள், வீடுகளில் தனியாக இருக்கும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு தரப்படுகிறது. இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது, பாலியல் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, தனியார், அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை வழங்கவேண்டும். பள்ளி சிறுமிகள் தைரியமாக, புகார் தெரிவிக்க ஏதுவாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இப்புகார் பெட்டியில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் விசாரித்து தீர்வு காணவேண்டும். புகார்களின் தன்மையை பொறுத்தே, சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என, சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

   தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் கோரிய 80 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம்

   பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகளின் மூலம் 8.20 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14 வரை பள்ளிகளின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, விடைத்தாள் நகல் கோரி 79,953 பேரும், மறுகூட்டல் கோரி 3,346 பேரும் விண்ணப்பித்தனர். முக்கியப் பாடங்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாட விடைத்தாள்களைக் கோரி 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள பாடங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விடைத்தாள் நகல்களைக் கோரியுள்ளனர். சென்னையில் உள்ள விடைத்தாள் மறுமதிப்பீட்டு முகாமில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியது: பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் எடுக்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் பக்கங்களைச் சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அனைத்துப் பாட விடைத்தாள் நகல்களையும் மாணவர்கள் ஒரே நாளில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட உள்ளன. அதன் பிறகு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க 4 அல்லது 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 வரை அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, ஜூன் 10-ஆம் தேதிக்குள் மறுமதிப்பீடு செய்து முடிவுகள் வழங்கப்படும். மறுகூட்டல் முடிவுகளும் அப்போதே வெளியாகும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் மதிப்பெண் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை பாட ஆசிரியர்களுடன் முழுமையாக ஆராய்ந்த பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களிடம் இது தொடர்பாக உறுதிமொழியும் பெறப்படும் என்றார் அவர்.

அனைத்து வகை  அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்மழை நீர்  சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30 குள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துவக்க முதல் மேல்நிலை வரை, அனைத்துப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, கண்டிப்பாக சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டுமென, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில், கடந்த கல்வியாண்டில், பள்ளி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படுவது தெரியவந்தது. அப்பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை மூலமாக, போதிய நிதி ஒதுக்கி, கட்டுமானப்பணிகள் நடந்தன. இந்நிலையில், அடுத்தமாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதிகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரி கூறுகையில்,"பள்ளிகள் துவங்கிய பின், இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதில் குறைபாடு இருப்பின், உடனடியாக சரி செய்ய, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கப்படும். அனைத்துப்பள்ளிகளிலும், குடிநீர்,கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதே இத

Tuesday, May 27, 2014

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்-தினகரன்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும். 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட். பதிவு செய்யாமல்  ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் மீண்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-வது பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.  பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்துவருவது வழக்கம்.  ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.  இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது, தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு