இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 27, 2015

பள்ளி கல்லூரி சான்றிதழ் தொலைந்தால் பெறுவது எப்படி?

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
           வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்.

         அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 கடைசி

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும். வயது வரம்பு 2015 ஆகஸ்ட் 1ல் 21-32. சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என்று இரண்டு தேர்வுகள் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 19 கடைசி நாள். மேலும் விபரங்களை www.upsconilne.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

ப்ளஸ் 2 விடைத்தாள் நகல்.இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரமாக அதிகரித்தது. விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பிற பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்: பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்குரிய முக்கியப் பாடமான இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக சரிந்தது. முந்தைய ஆண்டில் 2,710 பேர் முழு மதிப்பெண் பெற்ற நிலையில், அது இந்த ஆண்டு 124 ஆகக் குறைந்துவிட்டது.

பிற முக்கியப் பாடங்களான வேதியியல், உயிரியல் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துவிட்டது. பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம் என்பதால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு 87 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.

பி.இ விண்ணப்பம்;சான்றிதழை தனியாக அனுப்பலாம்

பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 29) கடைசியாகும். இந்த நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதிலும், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவர் சான்றிதழ் பெறுவதிலும் தாமதம் ஏற்படுவதால் பி.இ. விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், நிறைவு செய்த விண்ணப்பத்தை மட்டும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பித்தால் போதுமானது. பின்னர், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்ற உடன், சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடுவதற்கு (15-06-2015) முன்னதாக தபால் மூலம் அனுப்ப வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அனுப்பும்போது, கடிதத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு, சான்றிதழ்களை இணைத்து "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

இந்த ஆண்டு ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறுமா?விரக்தியில் ஆசிரியர்கள்

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர். அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

இன்னும் நான்கே நாள்...: இந்த ஆண்டு காலியாக உள்ள இடங்களுக்கு, பணியிட மாறுதல் உத்தரவு பெற, ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தனர். வரும் 1ம் தேதி, பள்ளி திறக்க உள்ள நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது, ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டில் தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்வர்.

குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும். மாணவர்களுக்கு பாதிப்பு: பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம் பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்கும். ஒரே சிக்கல்...:

பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், 'சீட்' பெற முடியாத நிலையும் ஏற்படும். மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டணங்கள் என்னென்ன செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குள் கிடைக்கும்?

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.
1. இருப்பிடத்திற்கான சான்றிதழ்
2. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம் நார்மல் பாஸ்போர்ட் 36 பக்கங்கள் கொண்டது ரூ.1500/- ஆகும். 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு ரூ.500/- கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்
* தக்கல் - ரூ.3,500
* மைனர் - ரூ.1,000
*  PCC - ரூ.500/
* டேமேஜ்  / லாஸ்ட் (Damage / lost) - ரூ. 3,000
போலீஸ் விசாரணை முடித்து, எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

Tuesday, May 26, 2015

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் புத்தகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் வினாக்கள் பகுதியில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும், பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படும். அதனால் இந்த ஆண்டு முதல் பாடத்தின் கடைசியாக இடம் பெறும் வினாக்கள் பகுதியில் கூடுதலாக கேள்விகள் கேட்கப்பட்டு அறிவியல் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியரிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இரு மடங்கு, ‘புக் பேக்’ வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து மதிப்பெண் வினா, 25ல் இருந்து, 108 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

Monday, May 25, 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செக்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின்  எண்ணிக்கை 20 ஆயிரம். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரிய  வந்துள்ளது.

இது மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி மிக கூடுதல் என்றும், இதனுடன் நிதியுதவி பள்ளிகளுக்கான பிற செலவினங்களும் அதிகம் என்றும் அரசு  கருதுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை தவிர்க்க தற்போது அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை  மிகதுல்லியமாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது

. எனவே, அரசு நிதியுதவி பள்ளிகளை நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள்,  சமுதாய அமைப்புகள் அனைத்தும் தங்கள் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க  வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திரும்ப பெறும் ஆசிரியர்கள் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில்  பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும் பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது. அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த (பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும், ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகிய பட்டப் படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும்.

மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர் பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார், அரசு கல்வியியல் கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இக் கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை w‌w‌w.cb‌s‌e.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சிபி.எஸ்.இ தேர்வில் 9வகையான மதிப்பெண்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர்.

இத்தேர்வில், பாட வாரியாக, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனியே கிரேடு முறை வழங்கப்படுகிறது. ஆங்கில எழுத்துக்களில், 'ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1, டி2, இ' என, ஒன்பது வகை கிரேடு முறை வழங்கப்படுகிறது. இந்த கிரேடு முறையில், டி2க்குக் கீழ், இ கிரேடு பெற்றால், அவர் தேர்ச்சி பெறாதவர் ஆவார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர், ஒரு மாத இடைவெளியில் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர், மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வில், அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதை மீண்டும் எழுதத் தேவையில்லை.

பழைய மதிப்பெண்ணே கணக்கில் எடுக்கப்படும். இல்லையென்றால், செய்முறை மற்றும் 'தியரி' தேர்வு இரண்டையும் மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டும். மதிப்பெண் பட்டியலுக்கான சான்றிதழில், பாடவாரியாக மதிப்பெண் மற்றும் தனியாக கிரேடு குறிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி? சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் கணிதத்துக்கு, 100; இயற்பியல், வேதியியலுக்கு தலா, 50 மதிப்பெண் கணக்கிடப்பட்டு, மொத்தம், 200க்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்கள் கணிதத்தில், 100க்கு பெற்ற மதிப்பெண் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும்.

இயற்பியல் மற்றும் வேதியியலில், அவர்கள், 100க்கு எடுத்த மதிப்பெண், தலா, 50க்கு என கணக்கிடப்படும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு கட்டாயமா?

ஆதார் எண் இணைக்கவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. வாக்காளர்களின் விவரங்களை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வாக்காளர்களின் ஆதார் எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியன வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சியை தவிர எஞ்சிய 30 மாவட்டங்களிலும் 100 சதவீத விவரங்கள் பெறப்பட்டுள்ளன. 
இந்ந்லையில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீடிக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது குறித்த முழுவிவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.