இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 17, 2017

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள். இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப அஞ்சல் தலையின் மாதிரியை ஏ4 தாளில் வரைந்து உதவி தலைமை இயக்குநர் (ஏடிஜி-அஞ்சல்தலை சேகரிப்பு), அறை எண்:108, டாக் பவன், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிகள் அஞ்சல் தலைகளாகவும், சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளியிட பயன்படுத்திக் கொள்ளப்படும். அஞ்சல்தலை மாதிரிகளை அக்.20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு


அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:

பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர், பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும்.

இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன் விபரம்:

● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்

● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்

● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்கள் வாயிலாக ஆய்வு செய்து, முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.

MODEL FIXATION







Monday, October 16, 2017

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு அறிவுரை


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் வட கிழக்கு பருவ மழை துவங்கும்; அடுத்த ஆண்டு ஜன., இரண்டாம் வாரம் வரை மழை நீடிக்கும்; தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும்.

புயல், வெள்ளம், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகள் வட கிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும்.அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சென்னை உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே பாடங்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழைக்கு விடுமுறை விட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்


பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில்,

''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.

பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

DEE & SSA புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் தகுதியுள்ள பள்ளிகள் Proposal அனுப்ப வேண்டி SPD அவர்களின் ஆணை!!

தொடக்கக்கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2017-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்



ஊதிய முரண்பாடு

திருப்பூருக்கு CCA allowence alloted

G.o 307

https://drive.google.com/file/d/0B35sUpVujcAdaE1tYzE2MTFjb28/view?usp=drivesdk

G.o 306

https://drive.google.com/file/d/0B35sUpVujcAdaE1tYzE2MTFjb28/view?usp=drivesdk

G.O 305

https://drive.google.com/file/d/0B35sUpVujcAdY0Y5Y2VCdktSMUU/view?usp=drivesdk

Sunday, October 15, 2017

இன்றைய தினமலர்-பட்டம் இதழில் எம் பள்ளி மாணவியின் அறிவியல் கேள்வி-பதில் பகுதியில்..

சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. தற்போது கேள்விகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபம் அல்லது தவறான விடைகள் இருந்தால், தேர்வு எழுதியவர்கள் 20ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள் அடங்கிய மனுக்கள் தபால் மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் போது, தகுந்த புத்தகங்கள் அல்லது வழிகாட்டிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்

9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!


தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர். இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.

சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும்.

இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும். அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார் அவர்.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை


தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர். மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர். எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது. தமிழ் கட்டாயம் :

இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்


தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை வரன்முறைபடுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

அதில், அரசின் அனைத்து சேவைகளும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் மூலமாக உடனுக்குடன் பதிவு செய்து உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், இசேவை மையங்கள் அமைக்கப்பட்டு பிறப்பு, இறப்பு, வருமான, சாதி, இருப்பிடம், மற்றும் வரி வசூலினங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மெயின் சர்வர் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

இதனிடையே சாப்ட்வேரில் திடீர் குளறுபடிகள் ஏற்பட்டது. சிக்னல் பழுது காரணமாக பிறந்த குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒருநாள் என தொடர்ந்த பிரச்னை ஒரு மாத்திற்கும் மேல் நீடித்ததால் அலுவலர்கள் பலரும் நிர்வாக குளறுபடியில் சிக்கித் தவித்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்நிலையில் இணையதள சாப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்யும் விதமாக சென்னையை தவிர்த்து ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் சேவை தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு என தனித்தனி சாப்ட்வேர்கள் உள்ளதால் அதனை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் விண்ணபிக்க தமிழகம் முழுவதும் ஒரே சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலமாக பிறப்பு சான்றிதழ் பெற வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என குழந்தைகள் எங்கு பிறந்திருந்தாலும், எந்த இடத்தில் இருந்தும் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தனி சாப்ட்வேர் இம்மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றனர்

Saturday, October 14, 2017

தொலைபேசி எண் TNPTF

TNPTF இயக்கத் தோழர்கள் கவனத்திற்கு:  TNPTF மாநில அலுவலகத்தின் புதிய தொலைபேசி எண்: 044 - 48581553.

NIOS exam

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது. மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன.

மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்

அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விபரம்:

கடன் விபரம் வட்டி சதவீதம் வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை 5 50 ஆயிரம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை 6.50 1.50 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை 8.50 ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் 9.50 கார் வாங்க பெறும் கடன் 11 டூவீலர் கடன் 8.50 சைக்கிள் கடன் 5 கம்ப்யூட்டர் கடன் 9.50 இதர கடன் 9.50 அபராத வட்டி 2.50 அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில், வளர்ச்சி பணிகளுக்கு வழங்கும் கடன் 11 முதலீட்டு கடன் 13 கூட்டுறவு வங்கி மற்றும் நில வள வங்கி 9.50