இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 26, 2017

பி.எட்., பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி


தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர்.

பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அக்டோபர், 3ல் வரைவு வாக்காளர் பட்டியல்


அனைத்து மாவட்டங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, அக்., 3ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், இளவயது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. அதில், 18 முதல், 20 வயது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 3ல், வெளியிடப்பட உள்ளது. அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்படும்.

PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.*


மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (136% to 139%) அகவிலைப்படி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது*

Monday, September 25, 2017

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை


தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார்.

தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார். கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்.

இலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை, 82 ஆயிரத்து, 909 குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், காலியாக உள்ள, 41 ஆயிரத்து, 832 இடங்களில், குழந்தைகளைச் சேர்க்க, இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 10 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

தொலைந்த சான்றிதழ் பெற ஆதார் போதும்'


தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது.

இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார். பின், நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாவட்ட கல்வி அலுவலர் பட்டியல்

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி


பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாயில் இருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் ஓய்வூதியதார்களுக்கும் குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை ஆணை



Sunday, September 24, 2017

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்


தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து விபத்து காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும். அரசின் இலவச பொருட்களை கொண்டு செல்ல வாகன வாடகை அரசே வழங்குகிறது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். அதற்கான பயிற்சியாளர் தேர்வு நடந்து வருகிறது.

அதன்பின் புத்தங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 2.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு தமிழ் பாடபுத்தகங்கள் வழங்குவது குறித்து இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் ஒரு லட்சம் பிரதிகள் இலங்கைக்கு அனுப்பப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'


பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும்.

அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐஏஎஸ் பயிற்சி

Saturday, September 23, 2017

Depatment exam time table

திறந்தநிலை பல்கலையில்பி.எட்., 'அட்மிஷன்'


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.பல்கலையின் பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில்,2018-க்கான பி.எட்., பொது; பி.எட்., சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டு உள்ளது. பி.எட்., பொது படிப்பில் சேர, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், இளநிலை பட்டம் பெற்று, தற்போது, ஆசிரியராக பணியாற்ற வேண்டும். பி.எட்., சிறப்பு கல்வியில் சேர, இந்திய மறுவாழ்வு கழக நெறிமுறைகள் - ௨௦௧௫ன் படி, தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப நகல் மற்றும் விளக்க கையேட்டை, பல்கலையின், www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல்விபரங்களுக்கு, 044 - -2430 6600, 2430 6617 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இனி ரெயில் டிக்கெட்டுள் முன்பதிவு செய்ய புதிய விதிகள்


இனி குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு சேவை கட்டணம் என பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்தது.

இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிவித்துள்ள்ளது.

Friday, September 22, 2017

25 லட்சம் மாணவர்களுக்கு விடுப்பு கால சிறப்பு வகுப்பு


தமிழக பாடத்திட்டத்தில், நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. இன்று, அரசு பள்ளிகள் மட்டும் இயங்குகின்றன. நாளை முதல் அக்., 2௨ வரை, காலாண்டு மற்றும் சரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களுக்கான விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வகையில், தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 25 லட்சம் மாணவர்களுக்கு தினமும் அரை நாள் மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' போராட்டம் நடத்தியதால், வகுப்புகள் நடத்தாமல் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பை, சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடுகட்ட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ௧௫ ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாதம் தோறும், ௨௫ முதல், ௩௦ம் தேதிக்குள், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மின்னணு முறையில் பெற்று, ௫ம் தேதிக்குள் வழங்கி விட்டு, அறிக்கை தர வேண்டும். '

தாமதமாக சம்பளம் வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துறைத்தேர்வு டிசம்பர் 2017

பழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்


நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக அளித்தார். ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது.

இதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஓராண்டு ஆன பிறகும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தமிழகத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவல் குழு அமைக்கப்பட்டு செப்டம்பர் 30க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைத்தவுடன் 4 அல்லது 5 மாதங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது.

அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள், அக்டோபர் 8ஆம் தேதி மாவட்டம் தோறும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறியுள்ளர்.

சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு எதிராக இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளுக்கும் வெவ்வேறு தகுதிகளை என்.சி.டி.இ 2001 விதிப்படி நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறாவிட்டால் மத்திய அரசின் விதிமுறையை மீறியதாக அமையும். எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்காலத்தடை விதித்தும், பள்ளி கல்வித்துறை தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரித்த நீதிபதிகள் தனிநீதிபதியின் இடைக்காலத்தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, முன்னர் அறிவித்திருந்தபடி நாளை ( 23-ம் தேதி ) சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது.

Thursday, September 21, 2017

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கம்: அரசு பணியாளர்களிடம் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பங்களிப்பாக அடிப்படை ஊதியம், அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு அதற்குச் சமமான பங்குத் தொகையைச் செலுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலத்தில் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனப் பணியாளர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்பு, வட்டி உள்பட மொத்தம் ரூ.18 ஆயிரத்து 16 கோடி பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் அவரது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள், பணிதுறப்பு, இறந்த 3 ஆயிரத்து 288 பேருக்கு இறுதியாகச் சேர வேண்டிய ரூ.125.24 கோடியை வழங்க அரசு அனுமதித்துள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களின் பங்குத் தொகை, அரசு பங்களிப்பு ஆகியன வட்டியுடன் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை


அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது. பின், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த வழக்கில், நேற்று அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். இதையடுத்து, அக்., 23க்கு, வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம், இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, மதுரையில் நடக்கிறது. அதில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப் படுகிறது.

SSA-SPD PROCEEDINGS-கிராமக்கல்விக் குழுவை பள்ளிமேலாண்மைக் குழுவாக மாற்றித் தலைவர்களை நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுரை!!