இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 22, 2016

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு


உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர்.

சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட் அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்


உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு:

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும். மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மழைக்காலம்: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மழைக் காலங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறைகளை யாரும் பயன்படுத்தாத வகையில் பூட்டி வைக்க வேண்டும். பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, கசிவு ஏதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கோளாறுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர் தேங்கக் கூடிய பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தால் அவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும்.

மாணவர்கள் விடுமுறை நாள்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஏரிகளில் உடைப்பு ஏற்படும் நேரங்களில் வேடிக்கை பார்க்கச் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்க வேண்டும். வெள்ளப்பெருக்கு சமயங்களில் ஆற்றைக் கடக்கக் கூடாது. பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்து, அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக் கூடாது, இடி-மின்னல் நேரங்களில் மரத்தின் அடியில் ஒதுங்கக் கூடாது. சாலைகளில் மழைநீர் கால்வாய் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.

ஆசிரியர்கள் யாரும் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது, பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணி, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Wednesday, September 21, 2016

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை


ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1 ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல் அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களை நியமிக்க கூடாது.

அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்த கூடாது. அதிக வாக்காளர்கள் அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள் நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால் வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tuesday, September 20, 2016

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு


உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சித் தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம் தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி, பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தப் பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன், திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலை வரும் 26-ஆம் தேதிக்குள் தயார் செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில் சேர்த்து வெளியிடப்படும்.

வாக்குச்சாவடி சீட்டுகள் ("பூத் சிலிப்'): உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை வரும் 27-இல் தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்


பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது. 'சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்' என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.'செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்


அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள்.

இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர்.

அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Sunday, September 18, 2016

பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம்


பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

« சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு ரூ.3 கோடி செலவில் தனியே விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடி செலவில் மாணவியர் விடுதி கட்டப்படுகிறது.

« பழங்குடியினர் நல 306 உண்டி உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ மெட்ரிக் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டம் ரூ.1 கோடியே 54 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

« பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியே 29 லட்சம் செலவில், 25 பள்ளிகளில் ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்


தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய எரிசக்தி மேலாண்மை இயக்குநரகம் சார்பில் எரிசக்தியை சேமிப்பதில் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள் அளவிலான ஓவிய போட்டி, 4, 5 மற்றும் 6ம் வகுப்புக்கு ‘ஏ’ என்ற பிரிவிலும், 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பி’ என்ற பிரிவிலும் நடத்தப்பட வேண்டும். ‘ஏ’ பிரிவில் ‘ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரத்தை சேமிப்போம்’, ‘வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரத்தை சேமிப்போம், முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆவோம்’. ‘விழிப்புணர்வு கொண்டவர்களாக திகழ்ந்திடுங்கள், எரிசக்தியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்திடுங்கள்’ என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடத்த வேண்டும்.

‘பி’ பிரிவுக்கு ‘எரிசக்தி சேமிப்பு ஸ்மார்ட் நகரங்களை நோக்கி ஒரு ஸ்மார்ட் படி’, ‘கார்பன் தடத்தை குறைத்திடுங்கள்’, ‘போலாரை பாதுகாக்க சோலார் பயன்படுத்துங்கள்’ ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு பள்ளி அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு படைப்புகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சென்னை, தி.நகரில் உள்ள பவர் கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியாவின் பொதுமேலாளருக்கு(எச் ஆர்) அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி


பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை. இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'

English book for slow learners

Click below

https://app.box.com/s/uza57nk71we4zxuxk7kpcl4r3zhvaykt

Saturday, September 17, 2016

எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு


பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பல தனியார் வங்கிகள், இத்தகைய கார்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. தேசிய வங்கிகள், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க கோரின; ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

வரும், 30ல் கெடு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வங்கிகள் கோரின; அதை ஏற்க மறுத்து, ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கை: பாதுகாப்பு அம்சம் பொருந்திய, ஏ.டி.எம்., கார்டுகளை வழங்குவதற்கான காலக்கெடு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டது; இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. அதனால், ஏற்கனவே கூறியபடி, 2018 துவக்கத்தில், 'சிப்' பொருந்திய ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தேர்வுத்துறை சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன. இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும், 'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும். இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது

Department exam-december

TNPSC DEPARTMENTAL EXAM NOTIFICATION DOWNLOAD

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.

அறிவிக்கை நாள் :
01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி :
30.09.2016 , 5.45 பி.ப.

தேர்வு தேதிகள் :
23.12.2016 முதல் 31.12.2016 வரை.

Friday, September 16, 2016

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'


அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும்.

இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார் எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.