இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 08, 2016

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்


தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.

அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கான கமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களை சேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர் விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும்,'' என்றார்.

1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்


'ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. இது குறித்து, தமிழ்நாடு வட்ட மற்றும் சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே, திட்டத்தின் நோக்கம். அதனால் தான், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் - 249' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, தரைவழி கேபிள் மூலம் தரப்படும், 'பிராட்பேண்ட், இன்டர்நெட்' இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்கள், 300 ஜி.பி., வரை, இலவச டேட்டா பயன்படுத்தலாம். இதை கணக்கிட்டால், வாடிக்கையாளர்களுக்கு, ஒரு, ஜி.பி., ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் விபரங்களை, 1800 345 1500 என்ற, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் www.bsnl.co.in இணையதள முகவரி மூலம் அறியலாம்.

சென்னை வட்டத்தில், 6.5 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்; அதில், மூன்று லட்சம் பேர் மட்டுமே, பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர். புதிய சலுகை திட்டத்தை பயன்படுத்தி, மீதம் உள்ளவர்களையும், 'பிராட்பேண்ட்' வாடிக்கையாளராக மாற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி


முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார்.

இந்த படிப்புக்கு, முதற் கட்டமாக, நான்கு கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியில் உள்ள, டி.என்.சி.மணிவண்ணன் கல்லுாரி; ராசிபுரத்தில், ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லுாரி; திண்டுக்கல் ஸ்ரீசாய் பாரத் கல்லுாரி மற்றும் செஞ்சியில் உள்ள, ஸ்ரீ ரங்கபூபதி கலை, அறிவியல் கல்லுாரி என, நான்கு கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது.

Wednesday, September 07, 2016

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி


குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக(www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் வியாழக்கிழமை (செப். 8) ஆகும். கட்டணத்தைச் செலுத்த வரும் 11-ஆம் தேதி கடைசியாகும். இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை

சென்னை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 14ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 24ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 05, 2016

நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்


கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம். பணிக்காலத்தில் புகாருக்கும், துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியிருக்க கூடாது. மாணவர் நலனில் ஆசிரியர் பங்கு போன்றதகுதிகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் கொண்ட தேர்வுக் குழு, விண்ணப்பித்த மொத்த ஆசிரியர்களின் தகுதியை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, ஒன்று முதல் ஆறு வரை 'ரேங்க்' வழங்கிய பட்டியலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கும்.

இதில் இருந்து கல்வி மாவட்டம் வாரியாக உயர்நிலை மேல்நிலை, தொடக்கக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டு 379 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சில அமைச்சர்கள், அதிகாரிகள் சிபாரிசால் ௫,6வது, 'ரேங்க்' பெற்ற ஆசிரியரும், தேர்வுக் குழு பரிந்துரைக்காத ஆசிரியரும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நல்லாசிரியர் விருது தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் சிபாரிசு சர்ச்சை எழுகிறது. தேர்வு குழுக்கள் பரிந்துரைக்காத சிலரும் இடம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில், வருவாய் அலுவலரின் (டி.ஆர்.ஓ.,) பள்ளி நண்பர் என்பதால், அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரு மாவட்டத்தில், தகுதி இருந்தும் சங்க நிர்வாகி என்பதால் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது; இது எவ்விதத்தில் நியாயம். இப்பிரச்னை குறித்து சிறப்புக் குழு நியமித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.

அமைச்சர் மாற்றம் எதிரொலித்ததா : முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆக.,29ல் கல்வி அமைச்சர் பெஞ்சமின் மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக பாண்டியராஜன் ஆக.,30ல் பொறுப்பேற்றார். செப்.,2 மாலையில் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியல், தபால் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்.,3 காலை விருது பெற்றோர் விபரம் வெளியிடப்பட்டது. ஆக.,29 முதல் செப்.,2க்குள் இறுதி பட்டியலில் சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சிலர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Sunday, September 04, 2016

பாடப் புத்தகங்களில் முப்பரிணாமத் தொழில்நுட்பம்


தமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தரமான கல்வியையும், அதற்கேற்ப தரமான புத்தகங்களையும் ஆண்டுதோறும் மேம்படுத்தி பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) மேற்கொண்டுள்ளது.

இந்த கவுன்சில் தேசிய அளவில் மாணவர்களிடையே அறிவுக் கூர்மையைக் கண்டறியும் திட்டம் (NATIONAL TALENT SEARCH SCHEME) மூலம் அவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ஊக்கப்படுத்துகிறது.

முப்பரிமாணத்தில் பாட விளக்கம்: அந்த வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் பாடங்களை எளிதாகவும், முழுமையாகவும் கற்கும் விதத்தில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்துடனும் (3D), படக் காட்சிகள் வாயிலாகவும் அறிந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

உடல் உறுப்புகளின் செயல்பாட்டை புத்தகத்தில் உள்ள படத்திலிருந்து முப்பரிமாணத் தோற்றத்தில் தத்ரூபமாகத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அறிவியல் பாடப் புத்தகம் அச்சிடப்பட்டு நிகழாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் புதிய செயலி: இதுதொடர்பாக புதிய செயலியையும் (மொபைல் ஆப்) பள்ளிக் கல்வித் துறை ஏற்படுத்தியுள்ளது. டிஎன் ஸ்கூல்ஸ் (TN SCHOOLS LIVE ONLINE) என்ற இந்தச் செயலியை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தங்களது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

செல்லிடப்பேசியில் இந்தச் செயலியை இயக்கினால், 10 ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பு புத்தகத்தை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்கள் படிக்கும் வகுப்பைத் தேர்வு செய்து தங்களது புத்தகத்திலுள்ள படத்தின் அருகில் செல்லிடப்பேசியின் கேமரா மூலம் ஸ்கேன் செய்வது போன்று கொண்டு சென்றால், அந்தப் படம் முப்பரிமாணத் தோற்றத்தில் புத்தகத்துக்கு மேலாக செல்லிடப்பேசி திரையில் துல்லியமாகத் தெரியத் தொடங்குகிறது.

உதாரணமாக, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட படங்களின் மேல் செல்லிடப்பேசியை வைத்துப் பார்க்கும் போது அவை பல்வேறு வண்ணங்களில் முப்பரிமாணத்தில் தெரியத் தொடங்குகிறது.

இதுவரையிலான நிகழ்வுக்கு செல்லிடப்பேசியில் இணைய இணைப்பு தேவையில்லை. அதன்பிறகு, விடியோவில் காண்பிக்கப்படும் விரிவான விளக்கத்துக்கு இணைய இணைப்பு வேண்டும். அந்த விடியோவில் ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்ட அறிவியல் விளக்கங்களை மிகவும் எளிமையாவும், தெளிவாகவும் படக் காட்சிகளுடன் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் விளக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் சுமார் 20 பாடங்களும், பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களில் சுமார் 20 பாடங்களும் இந்த விடியோ தொகுப்பில் முதல் கட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் மாணவர்களுக்கு படத்தை மட்டுமே வரைந்து காட்டி ஆசிரியர் விளக்கமளிக்காமல், வித்தியாசமான முறையில் மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் காட்டி கற்றுத் தருவது பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

மருத்துவ மாணவர்களுக்கான புத்தகங்களில்கூட, இதுபோன்ற முப்பரிமாணத் தோற்றத்தைக் காண முடியாது. இந்தச் செயலியும், அதற்கான முன்னேற்பாட்டுடன் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ள குறுந்தகட்டை மாணவர்களும், ஆசிரியர்களும் மடிக்கணினியிலோ, கையடக்கக் கணினியிலோ (டேப்லெட்) நிறுவிக் கொண்டால் விடியோ விளக்கங்களைக் காண இணைய இணைப்பு தேவையில்லை.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி: இந்தத் திட்டத்தின் மூலம் ஆசிரியர் பாடம் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, ஆசிரியர்களுக்கு இந்தச் செயலியை கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலம் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பள்ளிக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் வீதம் (பத்தாம் வகுப்பு, பிளஸ் 2) பங்கேற்றனர்.

இந்தத் திட்டம் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா. மார்ஸிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 345 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். இந்தச் செயலி தொடர்பாக ஆசிரியர்கள் நன்கு அறிந்த பிறகு, மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விளக்கத்துடன்

புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கை கலெக்டர்களுக்கு கமிஷன் கெடு


'புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடுவது குறித்து, ஆகஸ்ட், 8ல், மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, தேர்தல் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்கள் மூலம் முடுக்கி விடப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.

இதுகுறித்த அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

 வாக்காளர் பட்டியல் வரைவு பிரதிகளை, 12ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும்; பட்டியல் அச்சுப்பணிகளை, 16க்குள் முடிக்க வேண்டும்

 வாக்காளர் பட்டியலை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; முடிவு அறிக்கையை, வரும், 19க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஆசிரியர் தினம்-முதல்வர் வாழ்த்து செய்தி


ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது; ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டது; மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்; ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Saturday, September 03, 2016

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், 770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா, புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இணையதள வசதியை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறியதாவது: தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதள பயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மாணவர்கள் பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில் பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 02, 2016

Free english grammer book

Click below

https://app.box.com/s/0up8eqmgukxa82kv8x9zjynt6b1t027f

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்


பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

2011--12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன. 2015--16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம், தொடர் மதிப்பீடு, அதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில்; கல்வித்துறை உத்தரவால் குழப்பம்


தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.

பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை

பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.

கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில்

கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.