இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 19, 2016

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்: டி.இ.டி தேர்வு நடக்காத பின்னணி என்ன


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.

23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு


தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது. அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST

Click below

http://www.deetn.com/

Wednesday, August 17, 2016

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.

'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு


பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

செப்.,1 ல் வாக்காளர் பெயர் சேர்ப்பு


செப்.,1 முதல் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. செப்.,10 மற்றும் 24ல் வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டங்களில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். இதே போல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஓட்டுச்சாவடிகள் அளவில் செப்.,11, 25ல் சிறப்பு முகாம் நடக்கிறது. நவ., 11ல் புதிய பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஜன.,5ல் இறுதி சுருக்க திருத்தப் பட்டியல் வெளியிடப்படும்.

புதிய கல்விக்கொள்கை - பி ரத்தினசபாபதி

Click below

https://app.box.com/s/2k3cqwv3yek8w7sljhiyn7uwj1hxoxys

Tuesday, August 16, 2016

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்த பிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி ஆக. 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்

சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் ஆணையர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்த தேவையான நிதி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சேலம் மாவட்டத்திற்கு நிதி கோரப்பட்டுள்ளது. சிக்கனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை, கடந்த தேர்தலை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 4,119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. குடிநீர், மின்சாரம் மற்றும் மழைநீர் உள்ளே புகாத வகையில் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தகுந்தவாறு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். பெண்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து மாநில அரசு முடிவுசெய்யும். தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி ஆக. 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்


சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது.

இதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் ஆணையர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்த தேவையான நிதி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சேலம் மாவட்டத்திற்கு நிதி கோரப்பட்டுள்ளது. சிக்கனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை, கடந்த தேர்தலை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 4,119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. குடிநீர், மின்சாரம் மற்றும் மழைநீர் உள்ளே புகாத வகையில் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தகுந்தவாறு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். பெண்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து மாநில அரசு முடிவுசெய்யும். தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு-பள்ளிக்கல்வித் துறை


உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.

இதில் சமூகஅறிவியல் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள் ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங் மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: அரசாணைப்படி முதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும்.

ஆனால் சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமே சமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு


தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3 முதல், கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை என, தனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது. அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும்.

மாறாக, புதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயலி


10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் "பாடசாலை" திரு.மதன் அவர்கள் உருவாக்கிய செயலி!

செல்பேசியில் தான் உருவாக்கிய செயலி படத்தோடு ஆசிரியர் மதன் மோகன் | உள்படம்: செயலி லோகோ
அனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இச்செயலியின் சிறப்பம்சங்கள்

* ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.

* அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்

* ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.

* முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.

* கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

* மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.
* பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.
முழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்தம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.

* மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.

* மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.

* தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் மதன் மோகன், ''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.
அதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.
செயலியைப் பதிவிறக்கம் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.tnschools.tamilquize

RBSK programme

Sunday, August 14, 2016

புதிய கல்வி கொள்கை குறித்து செப் 15வரை நீட்டிப்பு


புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க, செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது

L.P.C

Click below

https://app.box.com/s/pucj5y94q71nruj8238or3r7e0vq2czn

பணி விடுவிப்பு படிவம்

Click below

https://app.box.com/s/xxut7j1kgrlb3bflziw3o7r3od4anhku

Saturday, August 13, 2016

MHRD- Swachh Vidyalaya Puraskar 2016 results

Click below

http://216.151.168.101/login.aspx

பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

'அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது. சென்னை மாவட்டத்தில், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, செப்., 7 வரை அனுப்பலாம் என, சென்னை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்


தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது.

வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி


அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம். 'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு


தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர். கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்

பட்டதாரி/இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் சென்று பணியேற்காமல் இருந்தால் மாவட்ட மாறுதலில் கலந்துகொள்ளலாம் இயக்குநரின் செயல்முறைகள்