இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 29, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் நிலுவைத்தொகை:ஆகஸ்ட் சம்பளத்துடன் வழங்கப்படும்


ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஒரே தவணையாக, வரும் ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான அரசாணை கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை மாத சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.90,000ல் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 23.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த நிலுவைத் தொகையானது வரும் ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
ஊதிய உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 53 லட்சம் ஓய்வூதிய தாரர்களும் பலன் அடைவார்கள். அதே சமயம், 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல் செய்வதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* கடந்த 2014ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
* இக்குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.
* ஊதிய உயர்வின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 2.57 மடங்கு தொகை அதிகம் கிடைக்கும்.

Thursday, July 28, 2016

நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்


ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12, 13-ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் இந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நாடு முழுவதும் இன்று திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்


தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த, கணித உபகரணங்கள் வழங்கும் பொருட்டு ரூ.1.28 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரத்தால் செய்யப்பட்ட 31 உபகரணங்கள் உள்ளடக்கிய 9 தொகுப்புகள் வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டான்சி நிறுவனம் வழங்கும் இந்தக் கணித உபகரணங்களை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய வகையில் வைத்து, இருப்புப் பட்டியலை அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து பதிவேடு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரங்களையும் தொடக்கக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., படிப்பில் சேர நுழைவு தேர்வு கட்டாயம்


தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது.

இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முன்னாள் தலைவர் எம்.ஏ.சித்திக் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சார்பில், இரண்டு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அமைக்க வேண்டும் பி.எட்., படிப்புக்கு தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, உதவித்தொகை வழங்க வேண்டும் எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டில் இருந்து, ஓராண்டாக மாற்றப்படும். தொலைநிலை கல்வியில், எம்.எட்., படிக்க அனுமதிக்க வேண்டும் தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்களின் செயல்பாடுகளை, குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் கல்வியியல் படிப்பில் திருத்தங்கள் கொண்டு வர, ஆசிரியர் கல்வியியல் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்


'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது.இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@gov.in என்ற மத்திய அரசின் இ - மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்

GO.220 Dt.28.07.16 *Expert Committee on the demand for Continuing Old Pension Scheme *Modification in the Composition & Extension of three months-Orders Issued.

Click below

https://app.box.com/s/mk4ec2phcms0i1rbir17o09ltarkr1jn

ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ1 க்கு பயணக்காப்பீடு.செப் 1முதல் அமல்


ஐஆர்சிடிசி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக் காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல் படுத்துகிறது.

இந்த காப்பீடு திட்டம் வாயிலாக ரயில் விபத்து ஏற்படும்போது பயணி உயிரிழக்க நேர்ந்தாலோ அல்லது முற்றிலுமாக இயங்க முடியாது அளவுக்கு உடல் ஊனம் ஏற்பட்டாலோ அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ஓரளவு இயங்கக்கூடிய அளவு மட்டும் ஊனம் இருந்தால் அந்த பயணிக்கு ரூ.7.5 இழப்பீடும், காயமடைந்த பயணியின் மருத்துவச் செலவுகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும். அவர்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என எந்த வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். ஆனால், புறநகர் ரயில் பயணிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என ஐஆர்சிடிசி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ லோம்பார்டு பொது காப்பீடு நிறுவனம், ராயல் சுந்தரம், ஸ்ரீராம் ஜெனரல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி இந்த காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்கிறது.

ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டது. 19 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கின. இவற்றில் மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களும் சுழற்சி முறையில் காப்பீடு சேவையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஓராண்டுக்கு இந்த காப்பீடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?

இந்தத் திட்டம் வரும் செப்டம்பரில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காப்பீடு தொடர்பான சில முக்கியத் தகவல்கள் இருக்கின்றன.

ரயில்வே சட்டப் பிரிவுகள் 123, 124, 124A ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் விபத்து அல்லது ஏதாவது சதி வேலையால் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி வகுப்பு பேதமில்லாமல் இழப்பீடு வழங்கப்படும்.

ஒரு பயணி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காப்பீடு தேர்வு செய்தால் அவரது டிக்கெட் கட்டணத்துடன் ரூ.1 சேர்க்கப்படும். டிக்கெட் முன்பதிவு முடிந்த பின்னர் அதே பக்கத்தில் காப்பீடுக்கான பரிந்துரை நபர் விவரம் கேட்டு ஒரு படிவம் திரையில் தோன்றும். அதில் அளிக்கப்படும் விவரத்தின் அடிப்படையில் உரியவர்களுக்கு இழப்பீடு சென்றடையும்.

ஒரு பிஎன்ஆர் எண்ணின் கீழ் எத்தனை நபர்கள் பயணிக்கிறார்களோ அனைவருக்கும் பயணக் காப்பீடு கோரி விண்ணப்பத்தில் ஒப்புதல் தெரிவித்தால் அதற்கேற்ப ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1 ப்ரீமியம் தொகை மொத்தக் கட்டணத்துடன் சேரும்.

அதேபோல், ஒரு வேளை பயணி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என விரும்பினால் டிக்கெட் பதிவு செய்யும் போதே குழந்தையின் விவரத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். குழந்தைக்கான பயணக் காப்பீடு பிரிமீயம் தொகையும் டிக்கெட் கட்டணத்துடன் சேர்க்கப்படும்.

Wednesday, July 27, 2016

*G.O.No.219* *Dt:27.07.16* PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued.

Click below

https://app.box.com/s/6qmffhiw12d17kg421iyhl2gguubqj68

ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி 2 பேருக்கு மேல் மியூச்சுவல் டிரான்ஸ்பர் கிடையாது


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கவுன்சலிங் நேரத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்–்க கல்வி இயக்குநர் அவசர உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, மனமொத்த மாறுதல் உத்தரவு வழங்கும் நேரங்களில் 7 வகையான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 2016-2017ம் கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள, பதவி உயர்வில் செல்ல உள்ள ஆசிரியர்களுக்கு தற்போதைய பதவியில் மனமொத்த மாறுதல் கேட்கக் கூடாது.

மனமொத்த மாறுதல் அடிப்படையில், மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிசெய்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்க கூடாது. மனமொத்த மாறுதல் கேட்கும் இரண்டு ஆசிரியர்களும் 1.6.15க்கு முன்னரே, தற்போது உள்ள பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது.

மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை 2.8.16ல் தொடக்க கல்வி இயக்ககத்துக்கு கொண்டு வந்து அதே நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய விண்ணப்பங்களை பெற்றுச் செல்ல வேண்டும். மனமொத்த மாறுதல் உத்தரவுஎன்பது அந்தந்த பதவிகளுக்கு பொதுமாறுதல் கவுன்சலிங் அட்டவணைப்படியே அதே நாளில் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

சின்னஞ்சிறு பாடல்கள்

Click below

https://app.box.com/s/0307a82eqzvzoebb5jmlvrvjepdkbje0

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், 'ஆன்லைன்' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

B.ed application issue -2016-17


பி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில், மனமொத்த மாறுதலுக்கு திருத்தம் செய்யப்பட்ட இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 26. 07. 2016

Tuesday, July 26, 2016

7வது ஊதியக்குழு ஊதியம் ஆகஸ்ட் முதல் அமல்

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வை ரத்து செய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர் களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்; இதைத் தொடருவதற்கு கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.

அதே நேரத்தில் இதில் சில மாற்றங்கள் செய்து, கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பாக வேலை செய்யாவிட்டாலும், சம்பளம் உயரும் என்ற மனநிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். சிறப்பாக பணியாற்றும்

ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, அரசு ஊழியர்கள் தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கே சம்பள உயர்வு, பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, முதல், 20 ஆண்டுகளில், சிறப்பாக பணிபுரியாத ஊழியர்களுக்கான, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும், நன்று என்பதில் இருந்து மிகநன்று என்று உயர்த்த வேண்டும்.இவ்வாறு கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'இனி சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது' என, நிதித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

'தகவலை மறைத்தால் வேலையிலிருந்து நீக்கலாம்'

''பணியில் சேருவதற்கு முன்போ, பணியில் இருக்கும்போதோ, தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கைது செய்யப்பட்டது, விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவலை, ஊழியர்கள் மறைத்தால், அவர்களை பணியில் இருந்து நீக்கும் அதிகாரம் வேலை அளிப்போருக்கு உள்ளது,'' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அவ்தார் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல பந்த் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில்கூறியுள்ளதாவது:

பணியில் ஒருவர் சேரும்போது அல்லது பணியில் இருக்கும்போது, தன் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை மறைக்கக் கூடாது. இவ்வாறு மறைத்து பெறும் பணி உத்தரவு செல்லாது என்று உத்தரவிடுவதற்கு வேலை அளிப்போருக்கு அதிகாரம் உள்ளது.

அதே நேரத்தில், ஊழியரால் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படக் கூடிய பாதிப்பு, அதன் தன்மை, அது நடந்த காலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த முடிவை வேலை அளிப்போர் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

அடுத்த மாதம் முதல்புது சம்பளம் கிடைக்கும்:

#ஆகஸ்ட் முதல் ஊதியம்

#குறைந்தபட்சம் 7000முதல் 18000வரை
#ஊதிய உயர்வு ஜனவரி அல்லது ஜூலை 1ம் தேதி.3% ஊதியம்

#2.57மடங்காக இருக்கும்

1ம் வகுப்பிலிருந்தே 'ஆதார்' விபரம் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு


தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின், 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், ஆசிரியர் பணியிடத்தை தக்கவைக்கவும், இலவச பொருட்களை, 'அபேஸ்' செய்யும் வகையிலும், போலி பெயரில் மாணவர்கள் இருப்பதாக, கடந்த ஆண்டுகளில் கணக்கு காட்டினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுதோறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், சேரும் பள்ளி, முன்பு படித்த பள்ளி, ஆதார் எண், ரத்த பிரிவு வகை சேர்க்கப்படுகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின், விபரங்களை பதிவு செய்து அதை மாநில கணினித் தொகுப்பில் இணைக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை ஆசிரியர்கள், ஆக., 7க்குள் முடிக்க, கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நவ., 30 வரை இலவச 'அட்மிஷன்' : மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு


'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

இந்த சட்டத்தில் மற்றொரு விதியின் படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், எல்.கே.ஜி., எனப்படும் பள்ளி நுழைவு வகுப்பிலும்; மெட்ரிக் பள்ளிகள் என்றால், 1ம் வகுப்பிலும், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் இலவச இடஒதுக்கீடு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், 8,000 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இந்த சட்டப்படி, 89 ஆயிரம் பேருக்கு இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், பலர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பள்ளிகளை நாடுகின்றனர். ஆனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக கூறி, பெற்றோரை திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, 'வரும் நவம்பர், 30 வரை இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்

IBPS model question paper

Click below

http://www.ibpsexamguru.in/?m=1

TNPTF news

சுற்றறிக்கை
தோழர்களே,
                மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள TR சுப்ரமணியம் குழுவின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடத்திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், மாணவர்அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் வரும் 30/07/2016 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கல்வி நலன் காப்பதில் அதிகமான பங்கு உள்ளதால் நடக்கவிருக்கும் சென்னை கருத்தரங்கத்தில் வட்டாரச்செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்திட வேண்டும். கலந்து கொள்ள வரும் தோழர்கள் சென்னை மாநில அலுவலகத்தில் வருவதை கூடுமானவரை தவிர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செ. பாலசந்தர், பொதுசெயலாளர். TNPTF.