இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 29, 2015

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய 13 மாநிலங்கள் கோரிக்கை


பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமான இந்தக் கொள் கையால், மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத் தேர்வுகளை தீவிரமாகக் கருதுவதில்லை. இதனால், அவர்களின் கல்வித் தரம் குறைவதுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன.

இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை தொடர்பாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Saturday, November 28, 2015

GST மசோதா


��TNPTF MANI��

ஜி.எஸ்.டி மசோதா என்றால் என்ன?

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது அதற்கு சேவை வரி, கலால்வரி, நுழைவு வரி, மதிப்பு கூடுதல் வரி என பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால் வரி கட்டமைப்பு சீர்குலைவதுடன் மக்களுக்கு வரிச்சுமையும் ஏற்படுகிறது. பொருளாதா வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து விதமான வரிகளையும் ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் ஒரே வரியாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய, மாநில அரசுகள் தொழில் துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் நன்மை கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

நூற்றாண்டு கண்ட ஐன்ஸ்டினின் சமன்பாடு!


நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம் நுாற்றாண்டு காண்கிறது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார். 'தியரி ஆப் ஜெனரல் ரிலேட்டிவிட்டி' என்ற அந்த கொள்கை, நாம் இந்த வெளி, காலம், பருப்பொருள் மற்றும் பேரண்டம் ஆகியவற்றை பார்க்கும் விதத்தையும், சிந்திக்கும் விதத்தையும் அடியோடு மாற்றிவிட்டது.

மனித குலத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், இந்த பேரண்டத்தில் அதன் இடம் பற்றியும் நாம் சிந்திக்கும் விதத்தை, அவரது கொள்கை புரட்டிப்போட்டது.பெருவெடிப்பு (Big Bang), கருந்துளைகள் (Black Holes), காலவெளிக் குழிவு (Warped spacetime), பரவெளிகள் (Wormholes), கால இயந்திரங்கள் (Timemachines), அவ்வளவு ஏன் நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ்., (GPS) சாதனங்கள் என்று எல்லாமே ஐன்ஸ்டினின் அற்புதமான சார்பியல் கொள்கையை சார்ந்தே இயங்குகின்றன.

சிந்திக்க ஆரம்பித்தால்...: தனக்கு முன்பு இருந்த விஞ்ஞானிகளின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்தார் ஐன்ஸ்டின். காலம் வேறு, வெளி வேறு அல்ல என்றும், இரண்டுமே ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை தான் என்றும் தன் சமன்பாடுகள் மூலம் ஆணித்தரமாக சொன்னார் ஐன்ஸ்டின்.காலமும் வெளியும் நமது வாழ்க்கையையே நடத்தினாலும், நாம் அவற்றின் இயல்புகளை சிந்திக்க ஆரம்பித்தால் குழம்பி விடுகிறோம். ஏனெனில், காலம் மற்றும் வெளியின் ஊடாக, நம் வாழ்க்கை பயணித்தாலும், நம்மால் அவற்றை பார்க்க முடிவதில்லை. ஆனால், ஐன்ஸ்டின் அவற்றை தன் கொள்கையின் அடிப்படையிலான, 'சிந்தனைச் சோதனைகள்' மூலமாகவும், கணித சமன்பாடுகளின் ஆதாரத்தோடும் இயற்பியல் உலகினருக்கு விளக்கினார். புவி ஈர்ப்பு விசையை அடையாளம் கண்டு சொன்ன ஐசக் நியூட்டனின் காலத்திலிருந்தே, காலம் என்பது ஒரு நதி போல, சீரான வேகத்தில், பேரண்டவெளியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடியது என்று தான் விஞ்ஞானிகள் கருதினர்.

ஆனால் ஐன்ஸ்டினோ, காலமும் வெளியும் பிரிக்கவே முடியாதவை என்றும், நான்கு பரிமாணங்களைக் கொண்ட ஒரு பருப்பொருளைத் தான் நாம் காலவெளியாக அனுபவிக்கிறோம் என்றும் நிரூபித்தார். அதுமட்டுமல்ல; 'காலவெளி என்பது வெற்றிடமோ, ஏதுமில்லாததோ அல்ல; அது ஒரு பருப்பொருள்' என்று அழுத்தமாக அவர் நிரூபித்தார். அதேபோல, காலவெளி அசையாத ஜடப்பொருள் அல்ல என்றும், இந்த பேரண்டத்தில் இயங்கும் தன்மையுள்ள ஒன்று என்றும் அவர் விளக்கினார்.ஐன்ஸ்டினின் கொள்கைப்படி நாம் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பினால், பூமியில் இருப்பவரை விட, அவருக்கு வயதாகும் வேகம் மாறுபடும்! காலம் எப்படி செல்கிறது என்பது, ஒருவர் ஒரு பெரும் பருப்பொருளுக்கு எத்தனை அருகாமையில் இருக்கிறார் என்பதைப் பொருத்து மாறுபடும் என்பது, ஐன்ஸ்டினின் வாதம்.

இதன்படி, நீங்கள் தரைத் தளத்திலும், உங்கள் நண்பர், 150வது மாடியிலும் இருக்கிறார் என்றால், உங்கள் இருவருக்கும் காலத்தின் போக்கு சற்று மாறுபடும். இயற்பியல் மற்றும் விண்வெளித் துறையினருக்கு பேரண்டத்தை துல்லியமாக புரிந்து கொள்வதில் இந்தக் கருத்து மிகவும் உதவிகரமானதாக கருதப்படுகிறது. பொது சார்பியல் கொள்கை விளக்கும் தன்மைகள் பேரண்டத்தில் இல்லாவிட்டால், நாமெல்லோரும் திக்குத் தெரியாமல் அலைய வேண்டியிருக்கும்.இன்று மொபைல்பேசி உட்பட பல சாதனங்களில், 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்று அழைக்கப்படும், 'ஜி.பி.எஸ்.,' தொழில்நுட்பம் இருக்கிறது. இது பூமியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை, துல்லியமாக வரைபடத்தில் குறித்துக் காட்டக் கூடியது. வேகத்தில் வித்தியாசம்: இது துல்லியமாக இயங்க, பொது சார்பியல் கொள்கை அவசியம். அது துல்லியமாக இயங்குவதற்கு முக்கிய காரணம், கால இடைவெளியை அது கணக்கிலெடுத்துக் கொள்வது தான். பூமியிலிருக்கும் நமக்கு, விண்வெளியில் பல நுாறு கி.மீ., உயரத்திலிருக்கும் செயற்கைக்கோள்கள் சமிக்ஞைகளை அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கின்றன. நமக்கும், செயற்கைக்கோளுக்கும் காலம் போகும் வேகத்தில் வித்தியாசம் இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், ஜி.பி.எஸ்.,சின் துல்லியம் போய்விடும். எந்த அளவுக்கு துல்லியம் கெடும் தெரியுமா! நாள் ஒன்றுக்கு, 45 மைக்ரோ வினாடிகள்! இது பெரிய வித்தியாசமில்லை என்று பலர் நினைக்கலாம்.

ஆனால், ஜி.பி.எஸ்., சமிக்ஞை அனுப்பிய பின், ஒரு வாரம் கழித்து செயற்கைக்கோளிலிருந்து பதில் சமிக்ஞை வருவதாக வைத்துக் கொள்வோம். நிரூபணம்: அப்போது, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து, 5,000 மீட்டர் தள்ளியிருப்பதாக தான், உங்கள் ஜி.பி.எஸ்., சாதனம் காட்டும்! தன் கொள்கை மிகச் சரியானது என்று, அது சோதிக்கப்படுவதற்கு முன்பே முழுமையாக நம்பினார் ஐன்ஸ்டின். நாள்பட அவரது கொள்கை துல்லியமானது என்பது நிரூபணமாகி வருகிறது.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள், பிற கிரகங்களை கடந்து பூமிக்கு வருகையில் சற்றே வளைந்தே வருகின்றன. அதிக ஈர்ப்பு சக்தி உள்ள இடங்களில் காலம் மெதுவாகவே போகிறது. ஐன்ஸ்டினின் இதுபோன்ற நிரூபணங்கள், அவர் காலத்தை வென்ற மேதை என்பதையே காட்டுகின்றன. தனது கொள்கை முழுமையானதல்ல என்பதை ஐன்ஸ்டினே ஒப்புக்கொள்வார். உலகமே அந்த கொள்கையின் நுாற்றாண்டினை கொண்டாடும் இந்த வேளையில், அவரது கொள்கைகள் குறித்த பல கேள்வி களுக்கு இன்னும் பதில்கள் இல்லை. அவர் உயிரோடிருந்தால், அந்த கேள்விகளுக்கு விடை காண்பதில் இந்நேரம் மெய்மறந்திருப்பார்.

தகுதி தேர்வுவிண்ணப்பம் நாளை வெளியீடு


தமிழகத்தில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு, தகுதி யான மாணவர்களை தேர்வு செய்ய, அனைத்து வட்டார அளவில், தேர்வு மையம் அமைக்கப்பட்டு, ஜன., 23ல், தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பம், நாளை, www.tndge.im என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது; டிச., 11ம் தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு


ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை. இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது

New education policy

Click below

http://mhrd.gov.in/relevant-documents

புதிய கல்வி கொள்கை மக்கள் கருத்து கேட்கும் மத்திய அரசின் கேள்விகள் தமிழில்

Click below

http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/he/Tamil.pdf

Friday, November 27, 2015

மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது

.அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என, எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில்,

பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா


மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர்.

பணிநிரவலில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு செய்யும் பள்ளியே, இறுதி செய்யப்படுகின்றன. இதில் பாரபட்சம் இருப்பதால் சிலருக்கு அருகில் உள்ள பள்ளிகளிலும், சிலருக்கு தொலைவிலுள்ள பள்ளிகளிலும் பணிமாற்றம் கிடைக்கிறது என சர்ச்சை எழுந்தது.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவதுபோல் கலந்தாய்வு மூலம் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்தாண்டு கோரிக்கை எழுந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தாண்டும் கல்வி அலுவலர்களே பள்ளிகளை முடிவு செய்ய உள்ளனர்.

இதனால் பட்டியலில் உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "உதவிபெறும் பள்ளிகளில், பொதுவாக ஆசிரியர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தான் பணியில் சேருகின்றனர். இவர்களை, 'உபரி' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்கின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், இந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றனர்.

அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை குனிவை ஏற்படுத்தியது. அதனால், இந்த ஆண்டு தேர்வுகளில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளிகள் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற வேண்டும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும், உறுதி எடுத்துள்ளனர்.அதன்படி, தனியார் பள்ளிகளைப் போல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், அரையாண்டுத் தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும் என, கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுக்குப் பின், பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர்.

இதில் மாணவ, மாணவியர், மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் பெறுவது குறித்தும்; சராசரி மாணவர்களுக்கு, 80 சதவீத மதிப்பெண் பெறுவது குறித்தும்; தேர்ச்சிக்கே தடுமாறும் மாணவர்களுக்கு, எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தேர்ச்சி அடையலாம் என்பது குறித்தும், மூன்று வகைகளில் பயிற்சி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்


பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதையொட்டி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, அனைவரும் தெரிந்து, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்து, கல்வித் தரத்தை உயர்த்த, 'சரன்ஷ்' என்ற இணைய இணைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை, அனைத்து பள்ளிகளும் பயன்படுத்துமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதன் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மண்டலங்களின், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதத்தை அறியலாம்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர், தனியாக, 'லாக் இன்' செய்து, தேர்வு மதிப்பெண்ணை பார்க்கலாம்.மேலும், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பின்பற்றி, பாடங்கள் நடத்த பள்ளிகள் முன்வரலாம் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

Thursday, November 26, 2015

cps account statement website

Click below

http://cps.tn.gov.in/public/

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'


கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு, தமிழக அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக, பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். அப்போது, 'எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை; ஆசிரியர்களின் பணி போதுமானதாக இல்லை' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சில தலைமை ஆசிரியர்களை எழுந்து நிற்க சொன்ன, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி எச்சரிக்கை விடுத்தார். இதை எதிர்த்து, வாக்குவாதம் செய்த தலைமை ஆசிரியர்கள், வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசிய தலைமை ஆசிரியர்கள், 22 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'சஸ்பெண்ட்?' 'சர்ச்சையில் சிக்கி உள்ள தலைமை ஆசிரியர்கள், நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்; அதில் திருப்தி இல்லையென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'


மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன. இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள் அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்

SMC training

Wednesday, November 25, 2015

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை


அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.