இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 27, 2015

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த முறை, கவுன்சிலிங் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கவுன்சிலிங்குக்கான புதிய விதிமுறைகளை, 10 நாட்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்டது.

அதில், 'ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்; அதற்கு முன் நிர்வாக நலன் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டது. 'இந்த விதிமுறைகள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. 'விதிமுறைகளை மாற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பின. சில சங்கங்கள் சார்பில், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கவுன்சிலிங் விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்சிலிங் குறித்த தேதி அறிவிப்பு, நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் விதி முறைகளில், மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

பள்ளிகளின் காலியிட விவரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல், ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு, கட்டாய மாறுதல் இருக்காது என்ற விதி இடம் பெற வாய்ப்புள்ளது கல்வித்துறை அதிகாரிகள்.. ஆதிதிராவிடர் பள்ளி பொதுமாறுதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திடம், இடமாறுதல் கோரி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார்.

உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sunday, July 26, 2015

Inspire award register

Click below

http://www.inspireawards-dst.gov.in/UserC/login.aspx?to=1

INSPIRE award registeration

Click below

http://www.inspireawards-dst.gov.in/UserP/school-authority.aspx

தனியார் பள்ளி வாகங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி.பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும். முழுத் தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஓட்டுநர் விடுப்பில் செல்லும்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது கிளீனர் போன்றவர்களை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்துத் துறையின் உத்தரவுப்படி, பள்ளி வாகனப் பராமரிப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர் செல்லிடப்பேசியில் பேசுவது, தண்ணீர் அருந்துவது, குழந்தைகளுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி வாகனத்தை இயக்கினால் புகார் தெரிவிக்க வசதியாக, பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாக அலுவலர் ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களை பள்ளி வாகனத்தில் எழுதிவைக்க வேண்டும். பாலம், நீர்நிலைகளைக் கடந்து செல்லும்போதும், பிற வாகனங்களை முந்திச் செல்லும்போதும் ஓட்டுநர் மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரைகளை அனைத்து தனியார் பள்ளி, சுயநிதிப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37500 பேர்

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் மாவட்டங்களில்தான் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயரும் தொழிலாளர்கள் காரணமாக விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர்.

இவர்களுக்காக ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக தெலுங்கு மொழியிலும் பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து சேலம், ஈரோடு பகுதிக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்கள் பருத்தி சீசனில் ஆண்டுக்கு 3 அல்லது 4 மாதங்கள் தங்களது குழந்தைகளுடன் சென்றுவிடுவதால், அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,250-ஆக உள்ளது. கட்டுமானப் பணிகள், சாலையோரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை. இந்தக் குழந்தைகளில் 33,000 பேரை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆதார் அட்டையில் பிழையிருந்தால் தபாலில் விண்ணப்பிக்கலாம்

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தபால் மூலமாக அனுப்பி, திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாக அச்சாகி இருந்தாலோ பெயர், வயது போன்றவை பிழையாக இருந்தாலோ 'ஆன்-லைன்' மூலம் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அலைபேசி எண் தவறாக இருந்தால் திருத்தம் செய்ய இயலாது.uidai.gov.in/update&your &aadhaar.data.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ளலாம்.

அனைத்து வகையான திருத்தங்களுக்கும் அலைபேசி எண் முக்கியம். 'ஆன்---லைன்' மூலமாக பதிவு செய்ய, அலைபேசி எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஒருவரது ஆதார் விவரங்களை திருத்த முடியும். பெயர், முகவரி திருத்தம் செய்ய, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 'பான்' கார்டு, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

பிறந்த தேதியை திருத்தம் செய்ய:பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், 'குரூப்- ஏ' நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்து சரி செய்யவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: ஆதாரங்களுடன்அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களை, UIDAI, Post Box No.99, Banjara Hills, Hyderabad - 500 034, India என்ற முகவரிக்கு அனுப்பினால், விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, அலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். கம்ப்யூட்டர் மையங்களில் படிவம் பெற்று, ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து அனுப்பலாம்,' என்றார்.ழக்கு பதிவு செய்தனர்.

மதுவின் தீமைகளை மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிகழ்வு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களின் உடல்நலம், கல்வி பாதிக்கும். எனவே, பள்ளி, வகுப்பறைகளில் நடத்தப்படும் காலை இறைவணக்க கூட்டத்தின் போதும், நீதிபோதனை கல்வி பாட வேளையின் போதும் மாணவர்களிடம் மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறி நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

TNPSC GROUP II tentative answer key

Click below

http://www.tnpsctricks.com/2015/07/tnpsc-group-2-exam-answer-key-2015.html?m=1

Saturday, July 25, 2015

காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அரசுப்பள்ளிகளுக்கு பரிசு

காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய அரசு பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறை மூலம் பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மாநில அளவில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்விழா கடந்த 15-ம் தேதி அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. இதில், ஒவ்வொரு பள்ளியிலும் இவ்விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வைத்தல், தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த வளாகம் ஏற்படுத்த சூளுரைத்தல், மாணவ மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பேச்சுபோட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தபட்டன.

எனவே இவ்விழாவை மாநில அளவில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய பள்ளிகளை தேர்வு செய்து ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலைமையாசிரியர்கள் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், வித்தியாசமான முறையில் கொண்டாடிய பள்ளிகளை கல்வித்துறை அலுவலர் குழுவினர் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தேர்வு செய்யப்படும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரமும், தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்க பரிசாகவும், பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. இத்தொகையை பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்கு தலைமையாசிரியர்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

அரசு தொடக்கப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை காட்டிலும், 20 சதவீதம் வரை, மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மீதும் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதால், கிராமப்புறங்களில் கூட, மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அனுமதி:தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நர்சரி பிரைமரி பள்ளிகளில், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதால், அரசு தொடக்கப்பள்ளிகளில், படிக்க ஆள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இதை தடுக்க, கடந்த கல்வியாண்டில், வாய்ப்புள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆங்கிலவழிக்கல்வி துவக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், ஆங்கிலவழிக்கல்விக்கென தனியாக ஆசிரியரோ, வகுப்பறையோ, பாடத்திட்டமோ வகுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஓராண்டு ஆங்கிலவழிக்கல்வியில் படித்த மாணவர்களிடம், பெற்றோர் எதிர்பார்த்த அளவுக்கு மாற்றமும் காணப்படவில்லை.

இதனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி மீதான நம்பிக்கையை பெற்றோர் இழக்க துவங்கியுள்ளனர். இதனால், நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை யில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறை யின் போதே, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை கணக்கெடுத்து, பள்ளியில் சேர்க்கஅறிவுறுத்தப்பட்டனர். தெருத்தெருவாக ஆசிரியர்கள், கேன்வாஸ் செய்ய அலைந்தும், முன்னேற்றம் எதுவும் எட்டமுடிய வில்லை. நகர்பகுதிகளில் உள்ள பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில், ஏற்கனவே ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை இருந்து வரும் நிலையில், கிராமப்பகுதிகளிலும், அந்த நிலையை நோக்கி, அரசு தொடக்கப்பள்ளிகள் சென்று வருகிறது. ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவிகிதம் வரை, மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.கடந்த ஆண்டு எண்ணிக்கையில் வழங்கப்பட்ட பை, புத்தகம், நோட்டு உள்ளிட்ட பொருட்கள், மாணவர் எண்ணிக்கை குறைவால், மீதமாகி, திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. ஆதிக்கம்:இதுகுறித்து அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:தமிழக அரசு ஆண்டுதோறும், சுயநிதி நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

போதிய வசதியில்லாத பள்ளிகளும் கூட, துணிவுடன் செயல்படும் நிலை காணப்படுகிறது. நகர்ப்பகுதி களில், அதிகம் காணப்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள், தற்போது, கிராமப்பகுதிகளிலும், ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.அங்கு மாதாந்திர கட்டணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, அங்குள்ள மாணவர்களை சேர்த்துவிடுகின்றனர். இதனால், கிராமப்பகுதிகளிலும், மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துவிட்டது. ஆங்கிலவழிக்கல்வி துவக்கிய ஆர்வத்தில், சேர்த்த பெற்றோர்களும் கூட, தற்போது, 'டிசி' வாங்கி, தனியார் நர்சரிக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இதே நிலை நீடிப்பதை தடுக்கவே முடியாது. இவை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் படிக்க ஆள் இல்லாத நிலை உருவாகிவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. பள்ளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 2 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மானிய நிதியில் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். பராமரிப்பு நிதியில் கழிப்பறை வசதி, கூடுதல் கட்டடம், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்தது. இவ்வாண்டுக்கான பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதார மேம்பாடுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் போதிய கழிப்பறை வசதி, இரு பாலர் பள்ளிகளில் தனித்தனி கழிப்பறை, பழுதான கழிப்பறைகளை பழுது பார்த்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், தரை மட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 'செப்டிக் டேங்க்' ஏற்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கல்வித்திட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையில் ஆசிரியர் பணிநிரவல் செய்ய TNPTF எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும்போது முந்தைய ஆண்டு அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டு மாணவர்கள் வருகை அடிப்படையில் பணிநிரவல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் அமல்ராஜ் கூறியதாவது: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டு அடிப்படையில் பணிநிரவல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 24, 2015

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளில் மாற்றம்

இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏராளமான மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குமுன் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் வினாத்தாளில் மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் சில மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. இவ்வாறு கூறினார் . ஆக.,1ல் கலந்தாய்வு ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற அந்த நிபந்தனையை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து துறை செயலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு குறித்து அவர் பரிசீலனை செய்வார் என கண்ணப்பன் தெரிவித்தார்.

TNPSC தேர்வு விபரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

குரூப் - 1, 1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.