இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 15, 2015

பி.எஃப் தொகையை அறியும் வழிமுறைகள்

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும்.  ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது. 

இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:

1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

2.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் மற்ற விவரங்களையும் அளித்து அதற்கான உறுதி செய்யும் கோடை அளித்தால் உங்கள் செல்போணிற்கு வரும் குறுங்செய்தியில் உள்ள OTPயை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.

3.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கனக்கில் லாக் இன் செய்து ''டவுன்லோடு'' என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும் அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.

இதன் மூலம் இனி அந்ததந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உங்கள் கணக்கில் உள்ள தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு

சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு, பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல், கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சத்துணவு ஊழியர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் சத்துணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க, கல்வித்துறை, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் விவரம்:

* சத்துணவு ஊழியர் வராமல் இருக்கும் பட்சத்தில், தலைமை ஆசிரியர் உடனடியாக, தற்காலிக ஊழியர்களை தயார் செய்து, சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், சத்துணவு தயாரான பின், அவற்றை சாப்பிட்டு பார்த்த பின்பே, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.

* சத்துணவு உரிய நேரத்துக்கு முன்பே தயார் செய்துவிட வேண்டும்; எக்காரணம் கொண்டும் தாமதிக்கக்கூடாது.

* பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவது, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு. அதில் புகார் எழுந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tuesday, April 14, 2015

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் நெட் தகுதி தேர்வு


அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறை சிபிஎஸ்இ ்) நடத்தியது. இதேபோல இந்த முறையயும் யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நெட் தகுதித் தேர்வு பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், மானுடவியல், கல்வியியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, சமஸ்கிருதம் உட்பட 84 பாடங்களுக்கு ஜூன் 28ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை (16ம் தேதி) முதல் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

மே முதல் வாரத்தில் இன் ஜினியரிங் விண்ணப்பம் விநியோகம்

என்ஜினீயரிங் படிப்பில் சேர 2½ லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து, மே முதல் வாரத்தில் வினியோகிக்க உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விண்ணப்பம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறை என்ஜினீயரிங் கல்லூரிகள், மண்டல என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட மொத்தம் 609 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர விண்ணப்பம் 2½ லட்சம் அச்சடிக்கப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணம் உயரவில்லை. இந்த வருடமும் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் தான் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு தொடங்கும். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:– புதிய கல்லூரிகள் பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த ஆண்டு மே 9–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் அதற்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. முடிவு வெளியிடப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நிரந்த அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகள் அந்தந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் பெறவேண்டும்.

இதற்காக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடித்துவிட்டனர். எந்த பாடப்பிரிவுக்கும் மாணவர்கள் சேர்ப்பதற்கான எண்ணிக்கை அதிகரிக்கவும், கூடுதல் பிரிவை தொடங்கவேண்டும் என்றாலும் என்.பி.ஏ. சான்றை சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பெற்றிருக்கவேண்டும். தமிழ்நாட்டில் 10 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. ஏ.ஐ.சி.டி.இ.க்கும் (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) விண்ணப்பித்துள்ளனர். புதிதாக கல்லூரிகள் தொடங்குவதற்கு 4 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

ஆசிரியர் பட்டய தேர்வு துவக்கம்

ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்: மே 18-இல் தொடக்கம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 19-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 18-ஆம் தேதியும்
தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு கால அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணை
மே 18 - திங்கள்கிழமை - இந்திய கல்வி முறை
மே 20 - புதன்கிழமை -- கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -2
மே 22- வெள்ளிக்கிழமை -- தமிழ் கற்பித்தல்-2, மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி-2
மே 26 - செவ்வாய்க்கிழமை -- ஆங்கிலம் கற்பித்தல் -2
மே 28 - வியாழக்கிழமை --- கணிதம் கற்பித்தல்-2
ஜூன் 1 - திங்கள்கிழமை - அறிவியல் கற்பித்தல்-2
ஜூன் 3 - புதன்கிழமை -- சமூக அறிவியல் கற்பித்தல் -2
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை
மே 19 --- செவ்வாய்க்கிழமை --- கற்கும் குழந்தை
மே 21 --- வியாழக்கிழமை --- கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும்-1
மே 25 -- திங்கள்கிழமை --- ஆங்கிலம் கற்பித்தல்-1
மே 27 -- புதன்கிழமை--- தமிழ் கற்பித்தல்-1, மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி-1
மே 29 -- வெள்ளிக்கிழமை -- கணிதம் கற்பித்தல் -1
ஜூன் 2 -- செவ்வாய்க்கிழமை --- அறிவியல் கற்பித்தல்-1
ஜூன் 4 -- வியாழக்கிழமை--- சமூக அறிவியல் கற்பித்தல் -1
தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில்www.ednnet.inபதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 22-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Monday, April 13, 2015

1 முதல்9 ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும்

முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் மாவட்டங்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் அனுப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் அவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையைவிட ஒரு சதவீதம் அதிகமாகவே புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளதால், புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் தொடங்கிய பிறகே பாடப்புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதி நிறைவடைகின்றன. தேர்வுகள் முடிந்த பிறகு, அந்த மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு புத்தகங்கள் இந்த மாதத்திலேயே விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக அனைத்துப் புத்தகங்களும் பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதல் பருவத்துக்கு 1.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கான புத்தகங்கள் மே முதல் வாரத்தில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். மாவட்டங்களிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எதிரான விசாரணை 21ம் தேதி வருகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக, இது தொடர்பான மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத், "இவ்வழக்கில் தற்போது மனுதாரர் லாவண்யாவின் மனுவுக்கு மட்டும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மற்ற மனுதாரர்களுக்கான பதிலை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்று கேட்டுக் கொண்டார். அதையடுத்து நீதிபதிகள், "

இந்த விவகாரத்தில் தமிழக அரசு லாவண்யாவின் மனுவுக்கு தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானதாகக் கருதுகிறோம். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்' என்று கூறினர்.

திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம்.சத்துணவு ஊழியர் சங்கம்

மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கும்' என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 15 முதல், கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது. வேலைநிறுத்த கடிதம், பிப்., 18ம் தேதி, அரசுக்கு வழங்கப்பட்டது. நேற்று தலைமைச் செயலகத்தில், அவர்களுடன் பேச்சு நடந்தது. இதில், போராட்டம் அறிவிக்காத சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஊழியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் வளர்மதி, பழனியப்பன், வீரமணி, ஆகியோர் பேச்சு நடத்தினர். சில கோரிக்கைகளை மட்டும் ஏற்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை சில சங்கங்கள் ஏற்றன; போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்தன.

ஆனால், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என, அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்க தலைவர் பழனிச்சாமி கூறும்போது, 'பிரதான கோரிக்கைகளான, வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்து, அமைச்சர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை,'' என்றார். 'போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் விண்ணப்பம் தயார்

கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன; இந்த ஆண்டு முதல், திருநங்கையர் தனியாக விண்ணப்பிக்க அண்ணா பல்கலை வசதி செய்துள்ளது. அடுத்த வாரம் அறிவிக்க...:

இந்த விண்ணப்பங்களை நேரிலும், அஞ்சல் மூலமும் பெறலாம். விண்ணப்பக் கட்டணம் மற்றும் வழங்கும் தேதியை, அடுத்த வாரம் அறிவிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், அரசு கல்லூரி கள் உட்பட பல மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், 25 கவுன்டர்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு, தனி கவுன்டர்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு, விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. படிப்புகளிலும், ஒன்றிரண்டு பாடங்கள் மட்டுமே புதிதாக இடம் பெறும் என்று தெரிகிறது.

விண்ணப்பத்தில், இந்த ஆண்டு புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஆண், பெண் மாணவ, மாணவியர் தவிர, திருநங்கையர் தனியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக...: விண்ணப்பத்தில், 'ஆண் / பெண்' என்ற இடத்தில், கூடுதலாக, 'திருநங்கையர்' பகுதி சேர்க்கப்பட்டு உள்ளது. திருநங்கையர் தங்களை தனியே குறிப்பிட்டு, 'அட்மிஷன்' பெறலாம். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'திருநங்கையருக்கு தனியாக, விண்ணப்பத்தில் இடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு வழக்கமான, 'கட் - ஆப், ரேங்கிங், ரேண்டம்' எண் மற்றும் சாதி வாரி அடிப்படையில் தான், 'சீட்' ஒதுக்கீடு செய்யப்படும்; தனி ஒதுக்கீடு கிடையாது.

அவர்களுக்கு சான்றிதழில், 'திருநங்கையர்' என்பதை குறிப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என்றனர். இன்ஜி., கல்லூரிகள் எத்தனை? பொறியியல் கல்லூரிகள் 596 அண்ணா பல்கலை 16 மாணவர் சேர்க்கை இடங்கள் 2.25 லட்சம் அரசு ஒதுக்கீடு, தனியார் சிறுபான்மை கல்லூரிகளில், 50 சதவீதம்; மற்ற கல்லூரிகளில், 65 சதவீதம்.

Saturday, April 11, 2015

இணையதளம் மூலம் மணியார்டர் சேவை

‘மணியார்டர்’ சேவை தகவல் தொழில்நுட்ப வசதியை தபால் துறையில் கொண்டு வருவதற்காக கடந்த 2012–ம் ஆண்டு அனைத்து தபால் நிலையங்களிலும் இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தபால் அலுவலக சேவைகள் விரைவு படுத்தப்பட்டன.

குறிப்பாக 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை முடிவுக்கு வந்தது. தற்போது இணையதளம் மூலம் ‘மணியார்டர்’ அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:– தவறான தகவல் 160 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தந்தி சேவையை கடந்த 2013–ம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது தபால் நிலையங்களில் ‘மணியார்டர்’ சேவையும் நிறுத்தப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல் தவறானதாகும். விரைவான சேவைக்கு இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய முறையில் இணையதளம் மூலம் நாம் அனுப்பும் பணத்துடன், கூறவேண்டிய தகவல்கள் சுருக்கமாக, கணினியில் நகல் எடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மறுநாளே விநியோகம் செய்யப்படும். பழைய முறை தற்போது நடைமுறையில் இல்லை. இன்ஸ்டன்ட் மணியார்டர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சத்து 70 ஆயிரம் மணியார்டர்கள் கையாளப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வு ஊதிய தொகைகள் அதிகளவு ‘மணியார்டர்’ மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்ஸ்டன்ட் மணியார்டர் எனும் பிரிவின் மூலம் குறிபிட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். இந்த முறையில் தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 16 இலக்க எண் வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று 16 இலக்க எண்ணுடன், இருப்பிட சான்று நகலையும் காட்டி தொகையை பெற்றுக் கொள்ளலாம். ரூ.50 ஆயிரம் அனுப்புவதற்கு கமிஷனாக ரூ.120 வசூலிக்கப்படுகிறது. 2013–14–ம் ஆண்டு தமிழத்தில் உள்ள 12 ஆயிரம் தபால் நிலையங்கள் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பில் ‘மணியார்டர்’கள் கையாளப்பட்டு உள்ளன.

‘மணியார்டர் விதேஷ்’ என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் முறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளம் மூலம் மணியார்டர் சேவை

‘மணியார்டர்’ சேவை தகவல் தொழில்நுட்ப வசதியை தபால் துறையில் கொண்டு வருவதற்காக கடந்த 2012–ம் ஆண்டு அனைத்து தபால் நிலையங்களிலும் இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தபால் அலுவலக சேவைகள் விரைவு படுத்தப்பட்டன.

குறிப்பாக 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை முடிவுக்கு வந்தது. தற்போது இணையதளம் மூலம் ‘மணியார்டர்’ அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:– தவறான தகவல் 160 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தந்தி சேவையை கடந்த 2013–ம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது தபால் நிலையங்களில் ‘மணியார்டர்’ சேவையும் நிறுத்தப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல் தவறானதாகும். விரைவான சேவைக்கு இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய முறையில் இணையதளம் மூலம் நாம் அனுப்பும் பணத்துடன், கூறவேண்டிய தகவல்கள் சுருக்கமாக, கணினியில் நகல் எடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மறுநாளே விநியோகம் செய்யப்படும். பழைய முறை தற்போது நடைமுறையில் இல்லை. இன்ஸ்டன்ட் மணியார்டர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சத்து 70 ஆயிரம் மணியார்டர்கள் கையாளப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வு ஊதிய தொகைகள் அதிகளவு ‘மணியார்டர்’ மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்ஸ்டன்ட் மணியார்டர் எனும் பிரிவின் மூலம் குறிபிட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். இந்த முறையில் தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 16 இலக்க எண் வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று 16 இலக்க எண்ணுடன், இருப்பிட சான்று நகலையும் காட்டி தொகையை பெற்றுக் கொள்ளலாம். ரூ.50 ஆயிரம் அனுப்புவதற்கு கமிஷனாக ரூ.120 வசூலிக்கப்படுகிறது. 2013–14–ம் ஆண்டு தமிழத்தில் உள்ள 12 ஆயிரம் தபால் நிலையங்கள் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பில் ‘மணியார்டர்’கள் கையாளப்பட்டு உள்ளன.

‘மணியார்டர் விதேஷ்’ என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் முறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மே முதல் வாரம் ப்ளஸ் 2 ரிசல்ட்

பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 31ம் தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்தது. பிற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது 50 முதல் 65 சதவீத விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன.

முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 16ம் தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவடையும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 20ம் தேதி முதல் 10ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியை செய்ய உள்ளனர். இம்மாத இறுதிக்குள் 10ம் வகுப்பு விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.