இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 10, 2015

TNPTF மாநில செயற்குழு

TNPTF மாநில அமைப்பு 18-1-2015 செயற்குழுவின் முக்கிய அம்சங்கள்

*TETOJAC கூட்டத்தில் முழுமையாக பங்கேற்பு

*இரண்டு கோரிக்கை மட்டுமே நம் இயக்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.CPS& ஊதியமாற்றம்

*அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரசு பணியாளர் சங்கம் உடன் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவது

*உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி சங்கங்களை TETOJAC உடன் ஒருங்கிணைப்பது

*CPS&ஊதிய மாற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய அணியாக செயல்படுவது

TNPTF மாநில நிர்வாகிகள் தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்தது குறித்து

*பின்னேற்பு குறித்து வெளியிட்டுள்ள செயல்முறையில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வார்த்தை திருத்தப்படுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை திருத்தி சிறு விளக்கம் மட்டும் இடம்பெறுமாறு செயல்முறை இந்த வாரம் வெளியிடப்படும்

*CRC க்கு சிறப்பு தற்செயல் விடுப்பு குறித்து சில மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தனர்

மாணவர் அடைவுத்தேர்வு

Friday, January 09, 2015

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.

எனவே, கல்லூரிகள் வரும் 2015-16 கல்வியாண்டில் இத் திட்டத்தை அறிமுகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

Thursday, January 08, 2015

Community certificate format

Click below

https://app.box.com/s/gb7ifqw0vf99rxp05aum

Ele director proceedings about to prepare panel as on 1-1-2015

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21VkduZV83dnVtYjA/view?usp=sharing

இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?


பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு, ஆலோசித்து வருகிறது.

அரசு மாணவர்களின் நலன் மற்றும் கல்வித்தரம் மேம்படுத்தும் நோக்கில், 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும், 2,557 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு நான்கு செட் இலவச சீருடை வினியோகிக்கபடுகிறது. இதற்கு, 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. 

தமிழகத்தில், 36 ஆயிரத்து 505 அரசு தொடக்க, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 8,266 அரசு உதவிபெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் சத்துணவு திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 40 லட்சம் மாணவர்கள் மட்டுமே, மதிய உணவு மற்றும் நான்கு செட் சீருடை போன்ற பலனை பெறுகின்றனர்.

பொதுவாக அரசு பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே, படிக்கின்றனர். இலவச சீருடை மற்றும் மதிய உணவு ஆகிய பலன்கள் கிடைக்காமல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, சில கிராம பகுதிகளிலும், மலை கிராம பகுதிகளிலும் இடைநிற்றல் ஏற்படுகிறது.இலவச சீருடை, மதிய உணவு திட்டத்தை பிளஸ்2 வகுப்பு வரை விரிவுபடுத்தவேண்டும் என, பல்வேறு கல்வி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது, அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்தும், நிதி அதிகரிப்பு குறித்தும் ஆலோசித்து வருவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், ’அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பொருளாதார சூழல், மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டுகளில், இலவச சீருடை வினியோகம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த, ஆலோசனையில் அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது’ என்றார்.

பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும் வழங்கிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

1. 2013-2014 ஆம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

2. ‘ஏ மற்றும் பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய  விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Wednesday, January 07, 2015

IGNOU- The list of eligible candidates to be called for M.Ed. Counselling January 2015

Click below

http://rcchennai.ignou.ac.in/Ignou-RC-Chennai/userfiles/file/MED2015-COUNSELLING-SCHEDULE.pdf

Bharathiar university b.ed anouncement

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை
           கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

          கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500க்கான வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பாராதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிப்.,28க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.

கூடுதல் விவரங்கள் அறிய பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வழிமுறைகள் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்விஅதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மூன்று நிலை மாணவர்கள்

தலைமை ஆசிரியர்களே, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பெற்ற 8 அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து மாணவர்களை முதல்நிலை மாணவன், இடைத்தர மாணவன், கடைநிலை மாணவன் என இனம் பிரித்துக் கொள்ளுங்கள். முதல்நிலை மாணவர்களும் இடைத்தர மாணவர்களும் தேர்ச்சி பெறுவது திண்ணம். இருப்பினும் அவர்களுக்கும் காலத்தின் அருமையை எடுத்துச் சொல்லி, நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலங்கரை விளக்கம்

மாணவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே திரும்பக் கூடாது என்பதனையும் வலியுறுத்த வேண்டும். தன்னுடன் பயிலும் நல்ல மாணவர்களுடன் மட்டும் நட்புக் கொள்ள வேண்டும் என்றும், பிற மாணவர்களின் நட்பு கூடாது என்றும் அறிவுரை கூறுங்கள். நீங்கள் மாணவர்களின் கலங்கரை விளக்கம் என்பதனையும், ஏற்றி விடும் ஏணி என்பதனையும் அறியாமைச் சுழலிலிருந்து காப்பாற்றும் தோணி என்பதனையும் உணர்ந்து செயல்படுங்கள்.

வெற்றி பெறச்செய்யவேண்டும்

அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களையே நாம் இங்கு கடைநிலை மாணவர்கள் என்று கூற விழைகின்றோம். அந்த மாணவர்களும் அரசுப் பொதுத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

காலையில் சிறப்பு வகுப்பு : மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு தலைமையாசிரியர்களிடமும் ஆசிரியர்களிடமும் தியாகத்தையும், சிறந்த கல்வித் தொண்டினையும் நான் எதிர்பார்க்கின்றேன். காலையில் 8 மணிக்கெல்லாம் பத்தாம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வருகை புரியச் செய்தல் வேண்டும். அன்றைய தினம் தலைமையாசிரியரால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆசிரியர்களும் வருகை புரிந்து மாணவர்களை வரிசையாக அமரச் செய்து அமைதியாகப் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். .

குழுவாகப் பிரித்து படிக்கச் செய்தல்

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6 முதல் 8 வரை இருக்கும் படியாகச் செய்தல் வேண்டும். இந்தக் குழுக்களுக்கு முதல் நிலையிலுள்ள ஆளுமை மிக்க மாணவர்களைத் தலைமைப் பொறுப்பேற்று செயல்படச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவிலும், இடைத்தர, கடைநிலை மாணவர்களும், தலைமைப் பொறுப்பேற்றது போக எஞ்சிய முதல்நிலை மாணவர்களும் இருத்தல் அவசியம். அன்றாடம் படிக்க வேண்டிய பகுதிகள் பாட ஆசிரியர்களால் பிரித்துத் தரப்பட வேண்டும். சிறுவினா, குறுவினா, பெருவினா, மனப்பாடப் பகுதிகள் படித்து ஒப்புவிக்கச் செய்தல் வேண்டும். ஒப்புவித்த பகுதிகள் இறுதியில் எழுதிக் காண்பிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும்.

சாப்பாட்டு நேரம்

மதிய உணவு இடைவேளை நேரம் : பத்தாம் வகுப்பு மாணவர்களை, பத்து மணித்துளிகளில் மதிய உணவு உண்ணச் செய்து, எஞ்சிய நேரத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் நேரம் சமமாகப் பிரித்து ஒதுக்கப்பட வேண்டும். அனைத்துப் பாட ஆசிரியர்களும் அந்த வாரநாள்களுக்கான தேர்வு பகுதிகளை முன் கூட்டியே பிரித்து மாணவர்களுக்கு அளித்திடல் வேண்டும். இதில் குழுக்கற்பித்தலில் குறிப்பிடப்பட்ட சிறுவினா, குறுவினா, பெருவினா மற்றும் மனப்பாடப் பகுதிகளும் கடிதம் மற்றும் கட்டுரைகளும் இடம் பெறுதல் வேண்டும். மாணவர்கள் எழுதிய விடைத் தாள்கள் அந்தந்தப் பாட ஆசிரியர்களின் மேற்பார்வையில் குழுக்கற்பித்தலில் தலைமைப் பொறுப்பேற்ற மாணவர்கள் போக எஞ்சிய முதல்நிலை மாணவர்களை வைத்துத் திருத்தப்பட வேண்டும்.

மாலை நேரப் படிப்பு

மாலை நேரப்படிப்பின் போதும் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து அமைதியாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருதல் வேண்டும். மதிய உணவு இடைவேளையின் பொழுதும் நடத்தும் தேர்வுக்கான பகுதியைப் படிக்கச் செய்தல் வேண்டும். இந்த மாலைப் பொழுதிலும் பிற்பகுதியை குழுக்கற்பித்தலுக்கு ஒதுக்கலாம். ஆனால் மாணவர்கள் அமைதி காத்து செவ்வனே செய்யும் படி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த நேரத்தில் அனைத்துப் பாட ஆசிரியர்களும் பங்கேற்று கற்றல் பணி செம்மையாக நடக்க உறுதுணை பு

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதியிலிருந்தும் தொடங்குகிறது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மூன்று நிலைகளாகப் பிரித்துக்கொண்டு அவர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில்லாத மாணவர்களையும் பொதுத்தேர்வில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களிடம் சிறந்த கல்வித் தொண்டு ஆற்றிட வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு காலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக மாணவர்களை காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். தலைமையாசிரியரால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து மாணவர்களை வரிசையாக அமரச் செய்து படிக்க வைக்க வேண்டும். அன்றாடம் படிக்க வேண்டிய பகுதிகள் பாட ஆசிரியர்களால் பிரித்துத் தரப்பட வேண்டும். சிறு வினா, குறு வினா, பெரு வினா, மனப்பாடப் பகுதிகள் படித்து ஒப்புவிக்கச் செய்தல் வேண்டும். ஒப்புவித்த பகுதிகள் இறுதியில் எழுதிக் காண்பிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளை நேரத்திலும் உணவருந்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் மாணவர்களைப் படிக்க வைக்க வேண்டும்.

பள்ளிக்குப் பிறகு மாலை நேரத்திலும் மாணவர்கள் படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். இந்த நேரத்தில் அனைத்துப் பாட ஆசிரியர்களும் பங்கேற்று கற்றல் பணி சிறப்பாக நடக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். மாலை 6 மணிக்கு மேற்பார்வைப் படிப்பு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்கள் 6 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்களை, பிப்., 2 முதல், 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனித்தேர்வர்கள், தேர்வுக்கு கூட அனுமதி சீட்டுக்களை (ஹால் டிக்கெட்), இணையத்தில், பிப்., 2 முதல், 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்விற்கு, அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது, சிறப்பு அனுமதி திட்டமான, தத்கல் திட்டத்தின் கீழ், பிப்., 5 முதல், 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.

மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை 400 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' கல்வித் துறையை கலங்க வைத்துள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:

தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. அதிகாரிகள் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடிக்கின்றனர். இதில் கல்வித்துறை உரிய வழிகாட்ட வேண்டும்.

திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களின் தவறான அணுகுமுறையால் தேர்வுப் பணி நியமனத்தில் சில மாற்றங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளி கல்வியின் முக்கிய அங்கமான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவுரவத்தை காக்கும் வகையில் பணிகள் வழங்காவிட்டால் இனிவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் புறக்கணிப்போம் என்றார். மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மை மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பணி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், துறை அலுவலர்கள் பொறுப்பு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கும், அறை கண்காணிப்பாளர் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இம்முறை துறை அலுவலர் பணியை உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கி அதற்கு கீழ் உள்ள அறை கண்காணிப்பாளர் பணியை முதுகலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கியுள்ளனர். உரிய 'கேடர்'படி பணிகள் ஒதுக்காததால் டி.ஆர்.பி., தேர்வுப் பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

திருவள்ளுவர் குறித்த கட்டுரை போட்டி

திருவள்ளுவர் குறித்த கட்டுரைப் போட்டியை இம்மாத மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்துமாறு சிபிஎஸ்இ பள்ளிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி டெல்லியில் இதனைத் தெரிவித்தார். திருவள்ளுவர் தொடர்பாக பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிருதி இராணி, இந்த கட்டுரைப் போட்டியின் மூலம், திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்தும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் இந்த ஆன்லைன் கட்டுரைப் போட்டி, பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரின் படைப்புகள் தேசிய கல்விக் குழும பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இராணி, புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் பெருமிதங்களையும் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் கூறினார்.