இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 03, 2014

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சீர்திருத்தம் குறித்து ஆய்வு :

பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித் துறை இயக்குனர்கள் உட்பட, பலர் இடம் பெற்று உள்ளனர். செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து, தமிழக அரசுக்கு சமர்ப்பித்து உள்ளது. 'கோப்பு, முதல்வரிடம் செல்வதற்கு முன், இயக்குனர்கள் பார்வைக்கு, வரைவு அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான ஆலோசனையை பெற வேண்டும்' என, குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

வரைவு அறிக்கை விவரம் : அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மெட்ரிக் கல்வி இயக்குனர், பிச்சை ஆகியோருக்கு, வரைவு அறிக்கை விவரம், நேற்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது:

பூஜா குல்கர்னி மட்டும், 'அறிக்கையின் விவரங்களை, முழுமையாக படிக்க வேண்டும். எனவே, சில நாட்கள் கால அவகாசம் வேண்டும்' என கேட்டுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குப் பின், மாற்று கருத்து இருந்தால், அது குறித்து ஆலோசித்து, வரைவு அறிக்கையில் சேர்க்கப்படும். தேர்வு சீர்திருத்தக் குழு, 100 பக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் பரிந்துரைகள் மட்டும், 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. 'பொதுத்தேர்வுக்கான விதிகள், அரசாணைகள், தற்போது, தனித்தனியாக உள்ளன. இப்படி இல்லாமல், அனைத்து விதிகள், அரசாணைகளை பரிசீலனை செய்து, தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கான சட்ட விதிமுறைகளாக தொகுத்து வெளியிட வேண்டும்' என, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள், அப்படியே, 'ஈ' அடிச்சான் காப்பி போல், பொதுத்தேர்வுகளில் கேட்கக் கூடாது.

பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், வெளியில் இருந்து, கேள்விகளை கேட்க வேண்டும்; மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16) இருந்து, சீர்திருத்த விதிமுறைகள் அமலுக்கு வரும். இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.

Sunday, November 02, 2014

210 அரசு பள்ளிகளுக்கு கட்டடம்'நபார்டு' வங்கி ரூ.247 கோடி கடனுதவி

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'நபார்டு' வங்கியின் கடனுதவியை பெற, ஓராண்டாக முயற்சித்தது. தற்போது, இத்திட்டத்திற்கு, 247 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, 'நபார்டு' வங்கி ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, நீலகிரி மற்றும் சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள, 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'நபார்டு' வங்கி கடனுதவி மூலம், வேலுார் மாவட்டத்தில், 34; விழுப்புரம், திருப்பூரில், தலா, 14; திருச்சியில், 13; திருவள்ளூர், தஞ்சாவூரில், தலா, 12; புதுக்கோட்டையில், 11 பள்ளிகளில் இப்பணிகள் நடக்க உள்ளன.மற்ற மாவட்டங்களில், ஒன்பதுக்கும் குறைவான பள்ளிகளில் இப்பணி மேற்கொள்ளப்படும். வகுப்பறை கட்டடங்களுக்கு, 147 கோடி; ஆய்வகங்களுக்கு, 56 கோடி; கழிப்பறைகளுக்கு, 26 கோடி; குடிநீர் திட்டத்திற்கு, இரண்டு கோடி; தடுப்பு சுவர் கட்ட, 16 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.கட்டுமானப் பணிகள் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படும்.

விரைவில், தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப்பணி துவங்கும்.அடுத்த கல்வி ஆண்டுக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, November 01, 2014

கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள் எண்ணிக்கை :

பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பான வழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள் என, 2,000த்திற்கும் அதிகமான வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமாண்ட் பேட்ரிக் கூறியதாவது:
*எந்த ஒரு வழக்காக இருந்தாலும், கடைசி பிரதிவாதியாக, மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரி தான் இருப்பார். பெரும்பாலும், பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், வழக்குகள் வருகின்றன.
*இந்த பிரச்னைகள் வராத அளவிற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. மேலும், வழக்கில், பதில் மனு தயாரிக்கும் பணி, மாவட்ட
அதிகாரியிடமே தரப்படுகிறது.திணறுகின்றனர் எவ்வித சட்ட அறிவும், அனுபவமும் இல்லாத மாவட்ட அதிகாரிகள், பதில் மனுவை தாக்கல் செய்ய திணறுகின்றனர்.
*யாரையாவது பிடித்து, பல ஆயிரம் ரூபாயை, எப்படியோ செலவழித்து, பதில் மனுவை தாக்கல் செய்கின்றனர். இதிலும், பல ஓட்டைகள் இருக்கும். வழக்குகளின் நிலையை, தொடர்ந்து கண்காணிக்கவும், ஆள் கிடையாது.
இதனால், அவ்வளவு எளிதில், வழக்கு முடிவுக்கு வருவதில்லை. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் அளவிற்கு, நிலைமை முற்றுகிறது. அப்போது தான், விஷயம், உயர் அதிகாரிகள் வரை செல்கிறது.
*ஒவ்வொரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஒரு சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், கல்வித்துறையை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்படி செய்தால், ஓரளவு, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நில

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?


வருமான வரி  செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.

இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

அவசியம் தேவை

* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.
* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.
* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.
* வெளிநாட்டு பயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.
* வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.
* 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு  செய்யும்போது தேவைப்படும்.
* காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.
* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.

கறுப்புப் பணம் தடைபடும்

மேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும் அவசியம் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம் வகிப்பதற்கு மிக முக்கிய காரணம் கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடை செய்வதற்காகத்தான்.

நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச் செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும் அலட்சிய போக்கு காரணத்தால் இன்றைய நிலையில் கறுப்புப் பணம் களையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.

பான் கார்டு இருந்தால்...

சரி, ஒருவர் பான் கார்டு வாங்கியதால், அவரும் வருமான வரி கட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

- செ.கார்த்திகேயன்

ஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்தகடில் அளிக்க இயக்குனர் உத்திரவு

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxcVFodzF1Tlc5aEU/view?usp=sharing

Thursday, October 30, 2014

10&12ம் வகுப்பு PTA QUESTION BANK கிடைக்குமிடங்கள்

பத்தாம் வகுப்பு ப்ளஸ் டூ அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17    புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18    வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22    திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17    புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - கணிதம்

டிசம்பர் 22    திங்கள்கிழமை - அறிவியல்

டிசம்பர் 23     செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

Tuesday, October 28, 2014

தமிழகத்தில் 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!


தமிழகத்தில் உள்ள 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு திட்டக்குழுவின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு  கடந்த ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு,  2011-2012 ஆம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என விதி எண் 110 ன் கீழ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, டிசம்பர் 2011 ல் தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டார்.

அவற்றில் 552 பள்ளிகள் மட்டுமே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது. மற்ற 158 பள்ளிகள் அந்த விதிமுறைகளை மட்டும் மட்டுமல்லாமல், மாநில அரசின் சார்பில் தரம் உயர்த்துவதற்கான 1 லட்சம் பொது மக்கள் நிதி அளிக்கும் விதியையும் கூட பூர்த்தி செய்யவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது  2009-10 ம் கல்வியாண்டில் 200 பள்ளிகளும், 2010 -11 ம் ஆண்டில் 344 பள்ளிகளும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனுமதியுடன் உயர்நிலைப்பள்ளிகளாக துவக்கப்பட்டன. அவற்றில் 200 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் பள்ளி ஒன்றுக்கு தலா 58 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் துவக்கப்பட்டன. பெற்றோர் சங்கங்களின் தலைவர் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை 170 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. 30 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது. 

இது மட்டுமின்றி 344 பள்ளிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 300 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. ஆனால் பழைய கட்டுமான பணிகளுக்கான விலையிலேயே கட்ட வேண்டும் என கூறியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதியுதவியை பெற்று கட்டுமானப்பணிகளையும் துவக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

கணிசமான எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதை அறிந்த அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மட்டுமே அமைச்சரிடம்  கோரிக்கை வைத்து பெற்று சென்றுள்ளனர். அதன் பிறகு அந்தப் பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் முயற்சியால் இதுவரை 160 முதல் 170 பள்ளிகளுக்கு மட்டுமே தேவையான இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.



இந்த நிலையில்  2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா 2011-12 ம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் தங்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளின் பெயர் இடம் பெற்று, தரம் உயர்த்துவதில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் குறியாக இருந்தனர். பள்ளியை தரம் உயர்த்த தேவையான அனைத்து விதிமுறைகளும் சரியாக நிறைவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்து அளிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை.

பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை மீறி, 158 பள்ளிகளை தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

இருப்பினும் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அனுமதி அளிக்கும் கூட்டத்தில், மொத்த மாநிலங்களில் 1096 புதிய பள்ளிகளில் கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் உள்ளதனால், இந்தாண்டு புதிதாக கட்டுமானப்பணிகளுக்கான நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்து இந்த 158 பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

-எம்.கார்த்தி

வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை

  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது.

இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம், எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்


    ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல் வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

600 பள்ளிகள் : தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர். மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு உருவாக்கிய, 'ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009'ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன. கற்பித்தலில் புதிய யுக்தி : வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில், புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன. கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது.

முதல் ஆண்டிற்கு, ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு, ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன. வரைவு பாடத்திட்டம் தயார் : ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும்.

அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துறை திட்டமிட்டுள்ளது. மதிப்பீடு முறை மாறுகிறது : இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர், அய்யப்பன் கூறியதாவது: தற்போதைய பாடத் திட்டம், எழுத்து தேர்வின் அடிப்படையில், மாணவர்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது. புதிய பாடத்திட்டத்தில், தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு குறைவாகவும், உளவியல் ரீதியிலான மதிப்பீடு, கவனிக்கும் ஆற்றலின் அடிப்படையிலான மதிப்பீடு, பேச்சுத் திறன் அடிப்படையிலான மதிப்பீடு என, பல வகையான மதிப்பீட்டின் கீழ், மாணவர்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் பயன்பாடு, கற்பித்தலில், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெறும். இவ்வாறு, அய்யப்பன் தெரிவித்தார்.