இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 21, 2014

ஜி.பி.எப்., கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல

     தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். அப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்கள் துவங்கப்படவில்லை.

இதுகுறித்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால் தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது. ஆசிரியர்கள் தற்போது கருவூலம் மூலம் சம்பளம் பெறவும், ஜி.பி.எப்., கணக்கு எண் முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. 'அந்த கணக்கு எண் இல்லை என்றால் சம்பளம் வழங்க முடியாது' என கருவூலங்களும் கைவிரித்துவிட்டன. இதனால், இனி வரும் மாதங்களில் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், 'அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் நீடிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை


மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும். மாணவர்கள் காப்பி அடிப் பதை தடுக்கும் வகையில் இப்பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்களில் ‘ஜம்ப்ளிங்’ என்ற முறை கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறையில், எல்லா வினாக்களும் ஒன்று தான் என்றாலும், அவை மாறி மாறி இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட ஒரு வினா, ஒரு மாணவ ருக்கு 7-வதாகவும் இன்னொரு வருக்கு 20-வது இடத்திலும் இருக்கலாம்.

கேள்விகள் இடம் மாறி இருப்பதால் மாணவர்கள் காப்பி அடிக்க இயலாது. ‘ஜம்ப்ளிங்’ முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினா தொகுப்புகள் அச்சிடப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வின்போது, விடைத்தாளில் ரகசிய குறியீடு (பார்கோடு), மாணவரின் பதிவு எண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக் கும் தனித்தனி வினா கட்டு என தேர்வுத்துறை பல புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தியது. அதனால், ஜம்ப்ளிங் முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினாக்கள் வழங்கும் முறை கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப் பட்டது. இதற்கிடையே, ஒருசில இடங்களில் அறிவியல், கணிததேர்வுகளின்போது ஒரு மதிப்பெண் வினாக்களை சில மாணவர்கள் காப்பி அடித்த தாக புகார் எழுந்தது

. இதையடுத்து, ஏற்கெனவே இருந்ததைப்போல பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங் கியல், கணிதம் ஆகிய 6 பாடங்களில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மீண்டும் ஜம்ப்ளிங் முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்த மாதம் நடக்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வில் இருந்தே இந்த முறையை நடைமுறைப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட் டுள்ளது.

Friday, September 19, 2014

நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்: அக்டோபர் 2-ந் தேதி முதல் ஒருவாரம் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்குவதற்கும் மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து பரிசுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ‘ மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் ‘ கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத படிக்கத்தெரியாதவர்களுக்கு உதவலாம்

1. மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.

2. மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் வாழும் இயலாதோர்களுக்கு இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம்.

3. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றிட உதவலாம்.

5. பயன்தரும் செய்திகளை, படித்தவர்கள் அதனை படிக்காத நண்பர்களும் படித்திட செய்திடலாம்.

6. மாணவர்கள், அரிய நிகழ்ச்சிகள் குறித்து பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதிடச் செய்திடலாம்.

7. மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினைப்பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.

8. பயணத்தின் போது மற்றவர்களுக்கு தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையினை கொடுத்து உதவிடலாம்.

9. பெரியோர்களிடம் தங்களது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை கலந்துரையாடலாம்.

சாலையை கடக்க உதவவேண்டும்

10. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையினை கடப்பதற்கு உதவி செய்யலாம். உதவி செய்வது நல்லது.

11. அருகாமையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

12. போக்குவரத்து காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித உறை

13. பாலிதீன் பைகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கு பழைய காகிதங்களை கொண்டு உறைகள் (கவர்கள்) செய்யலாம்.

14. சின்ன சின்ன பரிசுப் பொருட்களை அருகாமை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழலாம்.

15. சிறந்த பத்து பொன்மொழிகளை எழுதி பொது இடங்களில் பார்வைக்கு வைக்கலாம்

16. தங்களுக்கு தெரியாத புதிய ஐந்து நபர்களுக்கு புன்னகையுடன் வாழ்த்துச் சொல்லலாம்.

17. முதியவர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்துக் காட்டலாம்.

18. தங்களது பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை


ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப் பட்டன. இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை. இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் அக்.,15ல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்தப்பணிகளும் துவங்குகின்றன.இந்தாண்டு ஜன.,10ல் புதிய வாக்காளர் பெயர்பட்டியல், லோக்சபா தேர்தலையொட்டி ஏப்.,5ல் வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட்டன.

அதன்பின் தொடர் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அக்.,10ல் அப்பணி முடிகிறது. இம்மூன்று பட்டியல்களும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அக்.,15ல் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் பெயர் இடம்பெறாதவர்கள் அன்று துவங்கி 20 நாட்கள் வரை நடக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்த பட்டியல் பணிகளில் பெயர் சேர்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்களை பட்டியலில் புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிக்கான மனுக்களை தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி மாணவர்களை இப்பட்டியலில் சேர்க்க மாணவ பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்,என்றார்.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு


'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர். திருப்தியில்லை:அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தியது.

இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, 'மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், கூடுதலாக, சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சாந்தி அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும், கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர்களின், இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக, கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும், ஆசிரியர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது: கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது, கிராமப்புறங்களில், காலை 9:30 மணிக்கு, பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும்.

மாலையில், 5:30 மணி வரை, வகுப்பில் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர், காலையில் சாப்பிடாமல் கூட, பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.இருட்டிவிடும்:எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மிகவும் சிறியவர்கள். இவர்களை, காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால், சோர்வடைவர். மேலும், காலை 7:00 மணிக்கு, கிளம்பினால் தான், 8:30 மணிக்கு, பள்ளிக்கு வர முடியும். அதேபோல், மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு, நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு, சிற்றுண்டி தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன் தெரிவித்தார்.-

Wednesday, September 17, 2014

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டைகள் ஓரிரு நாளில் வழங்கப்படும்


  போலி அட்டைகளை தயாரிக்க இயலாத வகையில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இப்போது தயாரிக்கப்பட்ட அட்டைகள், ஸ்மார்ட் கார்டு போல இருக்கும். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் வாக்காளர்களுக்கு அவை வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சிக்கும், திருவள்ளூர் மாவட்டத்துக்கும் வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன. மேலும் 20 மாவட்டங்களுக்கு இன்னும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு விடும். இந்த மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாளில் புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கும். மீதமுள்ள மாவட்டங்களுக்கு 15 நாள்களுக்குள் வண்ண அடையாள அட்டைகள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர்.

மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

EMIS STUDENT height,weight details

EER report FORM

Tuesday, September 16, 2014

சென்னை நீதிமன்றத்தில் TET வழக்கு விசாரணை -

 சென்னை நீதிமன்றத்தில் நீதியரசர்கள்அக்னிஹோத்ரி எம்.எம் சுந்தரேஸ் ஆகியோரடங்கிய அமர்வுக்குமுன் TET வழக்குகள் மீது வாதம் தொடர்ந்து நடைபெற்றது துவங்கியது.வாதிகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்அரசு சார்பாக அட்வகெட் ஜெனரல் சோமயாஜி. வாதாடினார்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.5% தளர்வினால் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது,வெயிட்டேஜ் முறையினால் பாதிப்பு ஏற்பட்ட நிலை,பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆசிரியர் தேர்வு முறைகள், வேலைவாய்ப்பக பதிவுக்கு ,பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படவேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் போன்ற வெவ்வேறு விதமான வாதங்களை முன்வைத்தனர். அனைவரும் ஒரே விதமான வாதங்களை முன்வக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் சோமயாஜி.5% தளர்வினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போதைய வெயிட்டேஜ் முறை நீதிமன்றத்தின் பரிந்துரைப்பட்யே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. அதிகம்பேர் தேர்ச்சிபெற்று காலிப்பணியிடங்கள் குறைவாக உள்ளநிலையில் பணிநியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி  அவர்கள் 5%தளர்வானது,  அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு  வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி  அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

இருதரப்பினரும் நேரடி வாதங்களை முடித்த நிலையில்,இனி எழுத்துப்பூர்வ வாதங்களை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்.

தீர்ப்புக்குப் பின்னரே பணிநியமனம் நடைபெறக்கூடும் எனவும் அதுவரை பணிநியமனம் நடைபெற வாய்ப்பில்லை என நீதிமன்ற நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்றும், நாளையும் நடைபெற இருந்த காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு வாசிக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஒரே அட்டவணையின்படி நடத்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 15–ந் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ளது.