இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 03, 2014

14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம dinamalar

    பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது

. காரணம் என்ன?

கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். 'இந்த அரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும்' என, அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும் முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதிய முறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக, கல்வித்துறை வெளியிட்டது. இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும், 40 மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

தடை: இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000த் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல், 2:00 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல், கல்வித்துறைக்கு கிடைத்தது.'புதிய ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், அவர்கள் பணியில் சேர, கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது' என, மதுரை கிளை, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உயர் அதிகாரிகளிடம் விளக்கினர்.தேர்வு பெற்ற, 14,700 பேரில், பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர்.

பணியில் சேர உடனடி தடை: கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:தற்போதைய நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும்.பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, பணி நியமன கலந்தாய்வு, தொடர்ந்து நடக்கும். ஆனால், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

முதல் கோணல் முற்றும் கோணலானது : ஆய்வுக் கூட்டம் நடத்துவதில், கல்வித்துறையை மிஞ்ச, வேறு ஒரு துறையும் கிடையாது. அந்தளவிற்கு, மாதத்திற்கு, 20 கூட்டங்களை நடத்துவர். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும், விளக்கமாக, ஆழமாக விவாதித்து, யாரும் ஆட்சேபனை எழுப்பாத வகையில், முடிவை எடுக்க மாட்டர்.'ஏனோ, தானோ' என, முடிவை எடுப்பதும், பின், அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாற்றுவதும் தான், கல்வித்துறையின் வாடிக்கையாக உள்ளது. ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறையை உருவாக்க, அமைச்சர் (அப்போது சிவபதி) தலைமையில், உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அமைப்பதற்கான அரசாணை, 2012, செப்., 14ல் வெளியானது. செப்., 14, 24 ஆகிய இரு நாட்கள் கூடி, ஆலோசனை செய்து, அக்., 5ம் தேதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுடன் கூடிய அரசாணையை வெளியிட்டு விட்டனர்.இந்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன் தான் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், கடந்த, மே 30ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்வி தரத்திற்கு 'ஸ்மைலி' குறியீடு

  மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்த... : இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் எழுதும் தேர்வுகளில், அவர்களுடைய செயல்பாடு குறித்து ஆசிரி யர்கள், 'வெரி குட், குட், புவர், வெரி புவர்' என, குறிப்பு எழுதி வந்தனர்.

இனிமேல், இதற்கு பதிலாக, ஸ்மைலிகளை (சிரித்த முகம்) பயன்படுத்த வேண்டும். தங்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான, சிறந்த சின்னங்களை ஒட்டி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். யாருக்கும், 'பேட், புவர்' என்று எழுதக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ., கட்சியின், ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தின் பல பள்ளிகளில், 'ஆசிரியர் குறிப்பு' என்ற பகுதியில், நட்சத்திரம் அல்லது 'கார்ட்டூன் கேரக்டர்' அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் செயல்திறனுக்கேற்ப, ஒன்று முதல் ஐந்து நட்சத்திர சின்னம் ஒட்டப்படுகின்றன. சில பள்ளிகளில், மாணவர்களின் கைகளில், அவர்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆழமான தாக்கத்தை... : ஆசிரியர் குறிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து, உளவியல் டாக்டர் குப்தா கூறியதாவது: நோட்டுப் புத்தகங்களில் ஆசிரியர்கள் எழுதும் குறிப்புகள், மாணவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 'வெரி குட்' அல்லது 'குட்' கிடைத்தால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, 'பேட்' அல்லது 'புவர்' போன்ற குறிப்புகளால், நாள் முழுவதும் அவர்களை கவலையில் ஆழ்த்தி, கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது. எதிர்மறையான குறிப்புகளை மாணவர்களுக்கு தரக்கூடாது. அது பெற்றோர் மத்தியிலும் மோசமான விளைவுகளை உருவாக்கும்.

சி.பி.எஸ்.இ.,யின் இந்த முடிவு போற்றத்தக்கது. குழந்தைகளுக்கு, 'ஸ்மைலி பேஸ்' வழங்குவதன் மூலம், அவர்களிடையே நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சி.பி.எஸ்.இ.,யின் இந்த புதிய முடிவை, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர்.

அரசு பிடித்தம் செய்த தொகை எங்கே? : பதில் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு


ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசிடம், தமிழக அரசு செலுத்தவில்லை என்ற தகவல், அரசு ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, அதிகாரிகள் முன்வராதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2003, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின், அரசுப் பணியில் சேருவோருக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, முதல் மாநிலமாக, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது

. கடந்த, 2006 ஜூன் 1ம் தேதியில் இருந்து, அரசு ஊழியர் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. இத்தொகையை, மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு செலுத்தாமல் உள்ளது. இது குறித்து, திண்டுக்கலை சேர்ந்த, பிரடெரிக் ஏங்கல்ஸ், மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, 'தமிழக அரசு பிடித்தம் செய்த தொகையை, ஆணையத்திடம் வழங்கவில்லை' என, தெரிவித்துள்ளது. இது குறித்து, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இத்தகவல், அரசு ஊழியர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, யாருக்கும் தகவல் தெரியவில்லை. நிதித்துறை சார்பு செயலர், இணை செயலர் ஆகியோரிடம் கேட்டபோதும், தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். செயலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. முதல்வர் அலுவலகத்திற்கு சென்று விட்டதாக, அவர்களின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள்| கோப்புப் படம்: ம.பிரபு
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 19 பேர் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை. ஆனால், கலந்தாய்வு நடத்தினாலும் பணி நியமனங்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.

மனு விவரம்:

முன்னதாக, உயர் நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவர் தனது மனுவில், "நான் பி.லிட்., பி.எட். பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளேன்.

தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமின்றி பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படுகிறது.

கடந்த 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000-க்கும் குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. ஆனால், இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு உள்ள பாடத் திட்டங்கள் கடினம், கல்வித் தரம் போதிய அளவு இல்லை போன்ற சூழ்நிலை இருந்தது.

நிலைமை அப்படியிருக்க, அப்போதைய மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால், எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே ஆசிரியர்களின் குற்றச்சாட்டு.

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark List of Candidates after Oral Interview

Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)- Click here for TNTET Certificate

click below

http://tntet.in/

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது. 

Tuesday, September 02, 2014

பாரதியார் பல்கலை: பி.எச்டி படிப்புக்கு தேர்வு செய்தோரின் பட்டியல் வெளியீடு

கோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.எச்டி., படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பி.எச்டி.,யில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. பட்டியலை காண விரும்புவோர் http://www.b-u.ac.in/news.asp?shownews=763 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் மாவட்டங்களுக்குள் பணி நியமனம


இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் அவரவர் மாவட்டங்களுக்குள்ளாகவே பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற்றனர். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு ஆன்-லைன் மூலமாக தமிழகம் முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற மாவட்டங்களுக்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 795 பேர் பணி நியமனம் பெற்றனர். இரண்டாம் நாளில் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றதாகத் தொடக்கக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, பெரம்பலூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என தொடக்கக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சார்பில் 377 பேருக்கு நல்லாசிரியர் விருது


ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் என மொத்தமாக 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். சென்னையில் வரும் 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஆசிரியர்களுக்கு இந்த விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்க உள்ளார்.

இடைநிலை ஆசிரியர் 850 பேர் பணி நியமனம்

சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமன உத்தரவை பெற்றனர். தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர், பணி நியமன உத்தரவு பெற்றனர்.நேற்று, வெளி மாவட்டங்களில் சேர்வதற்காக கலந்தாய்வு நடந்தது. இதில், சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத, 854 பேர், வெளி மாவட்டங்களில் சேர, பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

TNPTF ஆர்ப்பாட்ட குறிக்கோள்


Department exam

தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு

பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு


https://www.box.com/shared/p77lc0fukp66s76szcel

DEPT exam december 2014

Monday, September 01, 2014

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– நடைபெற உள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர்–2014, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்–லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 2–9–2014 செவ்வாய்கிழமை (இன்று) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘‘SSLC SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION HALL TICKET’’ என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்து, தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும்.

அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

2,000 உதவி பேராசிரியர் பட்டியல் மூன்று மாதங்களுக்குள் வெளியீடு

'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது. முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும், நடத்தியது.

இந்நிலையில், மொத்த காலி பணிஇடங்கள் எண்ணிக்கை, 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், '2,000 உதவி பேராசிரியர் பணிக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, தெரிவித்தார்.

ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை : கல்வித்துறை திட்டவட்டம்

'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில், 'குரு உத்சவ்' என, மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக, தகவல் வெளியானது.

மாநில அரசுகளும், புதிய பெயரில், விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வரும், 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், 'பெயர் மாற்றம், தமிழகத்தில் அமலுக்கு வருமா?' என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்ததாவது:

பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித்துறைக்கு, எவ்வித உத்தரவை யும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம் போல் தான், விழா நடக்கும். வரும், 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர், வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

ஐந்து மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை. எனவே, நாளை (3ம் தேதி), மாவட்டத்திற்குள் நடக்கும் கலந்தாய்வுக்கு, ஐந்து மாவட்டங் களுக்கு, யாரும் செல்ல வேண்டாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறையில், புதிதாக, 10,444 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணி நியமன கலந்தாய்வு, நாளை (3ம் தேதி) துவங்குகிறது.

நாளை, மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. இதில், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லாததால், நாளைய கலந்தாய்வுக்கு, மேற்கண்ட ஐந்து மாவட்டங்களுக்கு, யாரும் செல்ல வேண்டாம். வேறு மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங் களுக்கு, 4ம் தேதியும், 5ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இந்த தேதிகளில், தங்கள் மாவட்டத்தில் உள்ள கலந்தாய்வு மையத்திற்கு, புதிய ஆசிரியர் செல்லலாம். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, தொடக்கக் கல்வித் துறையில், மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது. 1,649 இடங்களில், நேற்று, 795 இடங்கள் நிரம்பியதாக, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இன்று, வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடக்கிறது.

Department exam december -2014-notification

*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14

*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ12 சேர்த்து விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து

*தேர்வு நுழைவுச்சீட்டு 17-12-14 முதல் 31-12-14

*தேர்வு முடிவு 7-3-15&16-3-15