click below
Wednesday, June 18, 2014
Tuesday, June 17, 2014
சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள
் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்படாது. ஆசிரியர்கள் கூறுகை யில், 'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.
ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் முறையில், வரும் ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேர வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி சேர்க்கை என, 9,971 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கு, மாணவர் சேர்க்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, June 16, 2014
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்
பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஒரே நாளில் 4 போட்டித் தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குரூப்–2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற 29–ந் தேதி குரூப்–2 தேர்வினை தமிழகம் முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்–2 தேர்வை கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளி விட்டு தற்போது வருகிற 29–ந் தேதி நடத்துவதால், இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், குரூப்–2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில் (ஜூன் 29–ந் தேதி) மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது.
ஒரேநாளில் 4 போட்டி தேர்வு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29–ந் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் இதே நாளில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இதனால் இந்த 4 தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் ஏதாவது ஒரு தேர்வினை மட்டுமே எழுதக்கூடிய நிலையில் உள்ளனர். இந்த 4 போட்டி தேர்வுகளில் எதில் பங்கேற்பது என்ற மிகப்பெரிய குழப்பம் பட்டதாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால், குரூப்–2 தேர்வு தேதியை தள்ளி வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பலர் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வருகின்றனர். சிலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தள்ளிவைக்க வேண்டும்
வங்கி அதிகாரி பணி, மத்திய உளவு துறை அதிகாரி பணி மற்றும் குரூப்–2 ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள சிலர் நிருபரிடம் கூறும்போது, ‘இந்த 3 தேர்வுகளுமே எங்களுக்கு முக்கியமானது. ஆனால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் வருவதால், எங்களால் எந்த தேர்வில் பங்கேற்பது என்று தெரியவில்லை. எனவே குரூப்–2 தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று வேதனையை தெரிவித்தனர்.
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை-TNPTF
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை. ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே
ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை.
பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்-tnptf
Sunday, June 15, 2014
பொறியியல் தரவரிசை நாளை வெளியீடு
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் நாளை(ஜூன் 16) வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.உடனடியாக அனைத்து விவரங்களும் www.annauniv.edutnea2014 இணைய தளத்தில் மாணவர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்படும்.
Friday, June 13, 2014
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு
:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை
. ஏ.இ.ஓ., பதவி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை. எங்களுக்கு மேல் பணியிடம் கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மேற்பார்வையாளர் சம்பளம் ஐகோர்ட் உத்தரவுப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு கிடையாது. தமிழக அரசு 2011 அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க வேண்டும்.
தேர்வு நிலை பணிக்கான நோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
Thursday, June 12, 2014
மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
நாள் கிழமை நிகழ்ச்சி
ஜன.,4 ஞாயிறு மிலாடிநபி.
ஜன.,26 திங்கள் குடியரசுதினம்
ஏப்.,2 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்.,3 வெள்ளி புனிதவெள்ளி
மே4 திங்கள் புத்த பவுர்ணமி
ஜூலை18 சனி ரம்ஜான்
ஆக.,15 சனி சுதந்திர தினம்
செப்.,25 வெள்ளி பக்ரீத்
அக்.,2 வெள்ளி காந்திஜெயந்தி
அக்.,22 வியாழன் விஜயதசமி
அக்.,24 சனி மொகரம்
நவ.,10 செவ்வாய் தீபாவளி
நவ.,25 புதன் குருநானக் பிறந்தநாள்
டிச.,25 வெள்ளி கிறிஸ்துமஸ்
மேற்கண்ட நாட்கள் தவிர மேலும் 3 நாட்களை தங்கள் மாநிலம் தொடர்பான விசேஷங்களுக்காக விடுமுறையை அறிவிக்கலாம். இதனை மத்திய
அரசு பணியாளர் நலன் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்யும்.அவை வருமாறு: பொங்கல், ஓணம், மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, ஹோலி, தசரா, கிருஷ்ணஜெயந்தி.இவற்றில் தமிழகத்திற்கு பொங்கல் (ஜன.,15, வியாழன்), விநாயகர் சதுர்த்தி (செப்.,17, வியாழன்), கிருஷ்ணஜெயந்தி (செப்.,5, சனி) அறிவிக்கப்பட்டுஉள்ளது.
Wednesday, June 11, 2014
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு
. மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்ற மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.