இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 27, 2014

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல-dinamalar

்ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

55 சதவீதம்:

டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர். டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கிட்டு, அரசாணை வௌ?யிட்டதில், தேர்வர்களுக்கு, மூன்று மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது. அதன் விவரம்:

* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)

* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதம் வரை - 36

இவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண் வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

பாதிப்பு:

ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில் வருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள் இருப்பவர்களுக்கு, மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்த தேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவித்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர் கேள்வி எழுப்புகின்றனர். தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூற முடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண் சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அறிவோம் அறிவியல் ஆற்றலை: இன்று தேசிய அறிவியல் தினம்

  
    அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான்.

வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான். இரண்டும் கலந்ததே: எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

TET Exam passed canditate -thanks teachertn

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி
ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.

தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Paper - CV finished + 55% relaxation = total
தாள் 1 ல் - 12596. + 17996. =30592
தாள் 2 ல் - 16932. + 24651. =41583

TOTAL. - 29528. + 42647. =72175

TET 2013 : district wise passed candidates PAPER 2


TET 2013 : district wise passed candidates PAPER 2
1. Chennai. 561

2. Ariyalur 361

3. Coimbatore 850

4. Cuddalore. 888

5. Dharmapuri 1284

6. Dindigul 983

7. Erode. 1157

8. Kanchipuram 540

9. Kanniyakumari 668

10. .Pudukkottai 547

11. Krishnagiri 756

12. Madurai 1257

13. Nagapattinam 473

14. Namakkal 893

15. Nilgiris 108

16. Karur. 509

17 Perambalur 339

18. Ramanatha 459
Puram

19. Salem 1570

20. Sivaganga 406

21. Thanjavur. 892

22. Theni 642

23. Thoothukudi 638

24. Thiruvarur 282

25. Tirunelveli. 1194

26. Tiruchirappalli 1086

27. Thiruvallur 616

28. Tiruppur. 401

29. Tiruvannamalai 1052

30. Vellore . 994

31. Villupuram. 1261

32. Virudhunagar. 984

THANKS TO MR. SENTHIL KUMAR. KILAKKARAI,

TET 2013 : district wise passed candidates PAPER 1


1. Chennai. 561

2. Ariyalur 219

3. Coimbatore 663

4. Cuddalore. 591

5. Dharmapuri 624

6. Dindigul 693

7. Erode. 905

8. Kanchipuram 531

9. Kanniyakumari 187

10. .Pudukkottai 436

11. Krishnagiri 574

12. Madurai 799

13. Nagapattinam 508

14. Namakkal 313

15. Nilgiris 93

16. Karur. 330

17 Perambalur 193

18. Ramanatha 404
Puram

19. Salem 1098

20. Sivaganga 335

21. Thanjavur. 676

22. Theni 540

23. Thoothukudi 517

24. Thiruvarur 390

25. Tirunelveli. 818

26. Tiruchirappalli 777

27. Thiruvallur 617

28. Tiruppur. 395

29. Tiruvannamalai. 680

30. Vellore . 896

31. Villupuram. 859

32. Virudhunagar. 774

THANKS TO MR ANANTHA KRISHNAN, THANJAVUR

Wednesday, February 26, 2014

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click Here for Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவ

   மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

Monday, February 24, 2014

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர். அரியலூர் மாவட்டம், குமிலியம் பகுதியைச் சேர்ந்தவர், உடற்கல்வி ஆசிரியர், திருஞானசம்பந்தம். இவர், 30வது வயதில், சேலம் மாவட்டம், மேட்டூர், மேல்நிலை பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 28 ஆண்டு, ஒரே பள்ளியில் பணி புரிந்த, ஆசிரியர் திருஞானசம்பந்தம், ஏராளமான மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளார்;

ஏழை மாணவர்களுக்கு, சொந்த செலவில் பயிற்சி அளித்துள்ளார். கபடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்தும் பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் சம்பந்தம், கடந்த, 22ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, பிரமாண்ட பாராட்டு விழா நடத்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் கூடினர். முன்னாள் மாணவர்கள் சார்பில், விழாவுக்கு வந்த அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில் நடந்த பாராட்டு விழாவில், ஆசிரியர் திருஞானசம்பந்தத்துக்கு, மாணவர்கள், புதிய, 'பேஷன் புரோ' பைக், ஒரு தங்க பேனா, 1 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை வழங்கினர். நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள், மூன்று பஸ்களில், அரியலூர் மாவட்டம், குமிலியத்தில் உள்ள வீட்டில், ஆசிரியரை கொண்டு விட்டு, பிரியா விடை பெற்றனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்

பி.எட். முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அரசாணையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தாள் மட்டுமே. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5 முதல் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது

. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY

அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல்:


1.திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்
2.வேலூர் - செங்குட்டுவன்
3.சேலம்- வி.பன்னீர்செல்வம்
4.தென் சென்னை- ஜெயவர்த்தன்
5.மத்திய சென்னை- விஜகுமார்
6.தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி
7.தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்
8.திருநெல்வேலி- பிரபாகரன்
9.கன்னியாகுமரி- ஜான் தங்கம்
10.விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்
11.சிதம்பரம் (தனி)- சந்திரகாசி
12.மயிலாடுதுறை- பாரதி மோகன்
13.நாகப்பட்டினம் (தனி)- கோபால்
14.காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்
15.மதுரை- கோபாலகிருஷ்ணன்
16.தேனி- பார்த்திபன்
17.விருதுநகர்- ராதாகிருஷ்ணன்
18.ராமநாதபுரம்- அன்வர்ராஜா
19.அரக்கோணம்- கோ.அரி
20.கிருஷ்ணகிரி- அசோக்குமார்
21.வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்
22.ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்
23.தர்மபுரி- மோகன்
24.திருவண்ணாமலை- வனரோஜா
25.ஆரணி- ஏழுமலை
26.கள்ளக்குறிச்சி- காமராஜ்
27.நாமக்கல்- சுந்தரம்
28.ஈரோடு- செல்வகுமார் சின்னையன்
29.திருப்பூர்- சத்யபாமா
30.கோவை- நாகராஜன்
31.நீலகிரி (தனி) - கோபாலகிருஷ்ணன்
32.பொள்ளாச்சி- மகேந்திரன்
33.திண்டுக்கல்- உதயகுமார்
34.கரூர்- தம்பிதுரை
35.திருச்சி- ப.குமார்
36.பெரம்பலூர்- மருதை ராஜன்
37.கடலூர்- அருண்மொழி தேவன்
38.தஞ்சை- பரசுராமன்
39.சிவகங்கை- செந்தில்நாதன்
40.புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்

Saturday, February 22, 2014

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள் புலம்புகின்றன. தேர்வுத்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க, "ஆன்-லைன்' முறையில், பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக, மாணவ, மாணவியர், "பிரவுசிங்' மையங்களில் குவிகின்றனர். பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவது, புகைப்படத்தை, "ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை, இணைய தள மைய பணியாளர்கள் செய்கின்றனர்.

இதற்காக, 200 ரூபாய் முதல், பலவாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2, "தட்கல்' திட்டத்திற்காக, தேர்வுத்துறை, புதிய நடவடிக்கை எடுத்தது. "தனியார் மையங்களில், பதிவு செய்யக்கூடாது. தேர்வுத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலமாக மட்டுமே, பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, 32 மாவட்டங்களிலும், தேர்வுத்துறையே, சிறப்பு மையங்களை அமைத்து, 50 ரூபாய் கட்டணத்தில், மாணவரின் விவரங்களை பதிவு செய்ய, நடடிக்கை எடுத்தது. இதனால், தனியார் இணையதள மையங்கள் வெறிச்சோடின. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர்,

தேவராஜன் கூறியதாவது: பணத்தை வசூலிப்பது மட்டுமே, பிரவுசிங் சென்டர் களின் குறியாக உள்ளது. மாணவரின் விவரங்களை, சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில், அக்கறை இல்லை. பிறந்த தேதியை மாற்றி பதிவது, புகைப்படத்தை, சரியான முறையில், "ஸ்கேன்' செய்யாதது, முகவரியை பதிவு செய்வதில் தவறு என, பல குழப்பங்களை செய்கின்றனர். இதனால், மாணவர் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கவே, நேரடியாக, நாங்களே, சிறப்பு மையங்களை அமைத்தோம். இதன்மூலம், மாணவர் விவரங்கள், சரியாக பதிவு செய்வது உறுதிப்படுத்தியது உடன், மாணவர்களுக்கான செலவு, 50 ரூபாயில் முடிந்து விடுகிறது. இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார். தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ மையங்களில், பதிவு நடப்பதும், அதற்காக, குறைந்த கட்டணம் வசூலிப்பதும், மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது. இனி, வரும் தேர்வுகளிலும், இதேபோன்று, சிறப்பு மையங்கள் அமைக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

டிட்டோஜாக் 6.3.14 வேலை நிறுத்ததிற்கான செயல்முறைகள்

Friday, February 21, 2014

NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது

முதல் தாள்        - 2.00 PM to 3.30 PM

இடைவேளை     -3.30 PM to 4.00 PM

இரண்டாம் தாள் - 4.00 PM to 5.30 PM

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

 எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு விடைத்தாள்கள், உறைகள், போன்ற எழுதுபொருட்கள் அனைத்து எழுது பொருள் விநியோக மையங்களுக்கு கடந்த 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடைத்தாள்கள் சரியாக கிடைத்துள்ளதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், தேர்வுகள் சம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு தேர்வுகள் தொடர்பாக தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடைத்தாளுடன் முதல் பக்கத்தில் தைக்கக் கூடிய முதல் பக்க தாளை (டாப் ஷீட்) பெற்றுக் கொள்ள வேண்டும். விடை எழுத உள்ள தாள்கள் தலைமை ஆசிரியர்கள் உயிரியல் பாடம், கணக்கு பதிவியல் மற்றும் ஏனைய பாடத்திற்கான விடைத்தாள்கள், விடைத்தாள் இடப்பட வேண்டிய உறைகள், வரைபடங்கள், கிராப் ஷீட்கள் ஆகியவை சரியாக கிடைத்து விட்டதை உறுதி செய்ய வேண்டும். விடைத்தாளின் முகப்பு தாள்கள் அந்தந்த பாடத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். மாற்றி வைக்கக்கூடாது. அவ்வாறு மாற்றி தைத்தால் பிரச்சினை எழும். அது மட்டுமல்ல விடைத்தாள்களை அதற்கு உரிய உறைகளில் வைக்க வேண்டும். எனவே இந்த பணியில் தலைமை ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.

ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியை பறிக்க முடிவ

    குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அரசு மிக முக்கியமான பிரச்னையாகப் பார்க்கிறது. இத்தகைய புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆசிரியர்கள் இவ்வாறு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியிலிருந்து நீக்கப்படும் இந்த ஆசிரியர்கள் வேறு எங்கும் பணிபுரியாத வகையில் அவர்களை ஆசிரியர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும், அவர்களது பி.எட். பட்டத்தைப் பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

குழந்தைகளிடம் விழிப்புணர்வு: பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களின் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச நோட்டுப் புத்தகங்களின் அட்டைகளிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய சாஃப்ட்வேர்: இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10 ஆயிரம் பேர் இந்த ஆண்டு புதிதாகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில் இடையில் நின்றுவிடாமல் பள்ளிப் படிப்பை முடிப்பதை உறுதிசெய்யும் வகையில் புதிதாக சாஃப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். மத்திய அரசு பதில் தரவில்லை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் ரூ.25 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் சபிதா.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு

  பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், இன்று நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும், கடந்த ஆண்டு களில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல், 2:30 மணிக்கு, முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 6,917 ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அந்தப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்காக ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இதைப் படிக்கும்போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில் வழிகாட்டி கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி கையேட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார். தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்காக ரூ.1.80 கோடி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தந்தை, தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகையில் நிரந்தர வைப்புத் தொகை நிதியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.

2011-12, 2012-13 ஆம் கல்வியாண்டுகளில் 720 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 360 மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.

செஸ் விளையாட்டு: மாணவ, மாணவியரின் சிந்திக்கும் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்காக 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 628 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு பிரிவுகளில் 24 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1,200-ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.800-ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.400-ம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு ரூ.1,200 பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு


நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.