இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 02, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ""ஆரம்ப கால மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி இருக்காது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம்'' என்று தெரிவித்தனர். இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12 முதல் 2 நாள்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

குரூப்-1: 79 காலியிடங்களுக்கு 1.8 லட்சம் பேர் போட்டி

   துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள். மூன்று துணை ஆட்சியர்கள் (ஆர்.டி.ஓ.), 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 33 வணிகவரி உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களை (மொத்தம் 79 இடங்கள்) நேரடியாக நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த டிசம்பர் 29-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதிலிருந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவர். எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களையும் மெயின் தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 70 பேருக்கு சிறப்பு அனுமதி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த 5 ஆண்டு பணிநியமன தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டதையும், அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வழங்கிய 5 ஆண்டு வயது வரம்புச் சலுகையை பயன்படுத் திக் கொள்ள முடியாததையும் குறிப்பிட்டு தங்களை குரூப்-1 தேர்வெழுத அனுமதிக்குமாறு வயது வரம்பை கடந்த சுமார் 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி 70 பேர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப் பித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு சில நிபந்தனைகளுடன் தற்காலி கமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, January 30, 2014

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி

  முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே நியமித்து வந்தார். குறிப்பிட்ட சில பள்ளிகளில், குறிப்பிட்ட தேர்வு பணியில் சிலர் ஈடுபடுவதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் சென்றுள்ளது

. மேலும் சீனியர் ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்காதவாறு, கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதிய ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில், தேர்வுக்கு பணியாளர் நியமிப்பதை, தேர்வுத்துறை இயக்குனரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்வு மையங்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு மையத்திலும் தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விபரம், ஆசிரியர்கள் விபரங்களை ஏற்கனவே தேர்வுத்துறையிடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல் விடைத்தாள் திருத்தும் பணியிலும் மாற்றம் செய்ய உள்ளது.

ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர் விபரம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலிருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் தேர்வுத்துறை இயக்குனரகம் ஒதுக்கீடு செய்த நாட்களில் கண்டிப்பாக,தேர்வுப்பணியாற்ற வேண்டும், என்றார்.

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு

இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும், குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள இந்த பிரிவினரை திருப்திபடுத்தும் விதத்தில், மேலும், 60 ஜாதிகளுக்கு, ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை அடுத்து, பிரதமர் தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.

வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும். என்னென்ன தகவல்கள்? வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள், வேலை பெறுவதற்கான உதவிகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை தமிழகம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

Wednesday, January 29, 2014

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாட

   அரசு பணிகளில், ஒருவர் சேர்ந்ததும், அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், 'சான்றிதழ்கள் உண்மையானது தான்' என, அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.
இவற்றை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில், தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம் செய்யப்படுவது, தள்ளிப் போகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத் துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால், பணி பளு, சற்று குறைந்துள்ளது. இதனால், பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு, சிறப்பு குழுக்களை, இயக்குனர் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

   தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.

நாளை (29.01.14) இரண்டு நிமிட மௌனமும் தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவ

ு. நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.

Tuesday, January 28, 2014

ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி பார்க்க இன்றே கடைசி

, 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது. வாரியத்தின் அறிவிப்பு:கடந்த ஆண்டு, ஆக., மாதம் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்கள், இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். 2012ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களும், இதில் பங்கேற்கலாம்; இதுவே, கடைசி வாய்ப்பு.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

எனவே, வரும் பட்ஜெட்டில், 20,ஆயிரம் கோடி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.இவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நிதியில், ஆசிரியர், அதிகாரிகளுக்கு, பெரும்பகுதி சம்பளம் அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள்,சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.

அறிவுசார் பூங்காகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கல்வித் துறைஅலுவலகங்கள் மற்றும் சென்னை, கோட்டூர்புரம்நுாலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா என்ற, பிரமாண்டமான கட்டடம் கட்டப் படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிப்பு அளவிலேயே நிற்கிறது

Monday, January 27, 2014

"டான்செட்' நுழைவுத் தேர்வு: அறிவிப்பு வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்யலாம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மார்ச் 23 ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். பிப்ரவரி 18 கடைசித் தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த விவரங்கள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):

அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர். சென்னை. பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை,சென்னை- திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர். நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர், சென்னை.

சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம். சென்னை- துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம்.

Sunday, January 26, 2014

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர்.

இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே பாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது

. பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "பணிநிரவல் என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றனர்.----

Wednesday, January 22, 2014

உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி நடக்கிறது.

அனைவருக்கும் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.சிவகங்கையில், ஆய்வுக்கு வந்த, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், " ஆசிரியர் தேர்வு வாரிய வழி காட்டுதல் படி, சான்று சரிபார்த்தல் பணி நடக்கிறது. கல்வி தகுதிப்படி, "வெய்ட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்கி, இறுதி பட்டியல் தயாரித்து ஒப்படைக்கப்படும். பின்னர் இனசுழற்சி முறையில் பணி நியமன பட்டியல் வெளியாகும். சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்று, இறுதி பட்டியலில் இடம் பெற்ற 80 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில், "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது.

வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி' சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்று, இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றோர், பல்கலைகளில், "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ் கேட்டு குவிந்தனர். "காணவில்லை' என, போலீசில் புகார் செய்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்து, பின், பல்கலைகளில் 3,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, "டூப்ளிகேட்' செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும் நிலை இருந்தது. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கேட்பதை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களின், "10+2+3' என்ற ஆர்டரில், ஆண்டுகள் மாறியிருக்கும் பட்சத்தில்தான் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுகள் தேவைப்படும். முறையான ஆர்டரில் படித்து, சான்றிதழ் பெற்றவர்களுக்கு "டிகிரி' மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்கள் போதுமானது' என்றார்.டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவால், ஜன.,23 ல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் பட்டதாரிகள், நிம்மதி தெரிவித்துள்ளனர்.