இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 14, 2013

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு

   நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு,

் இன்று சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும், அனால் இன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற சங்கங்களுக்கு இடையே முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஒரு மாபெரும் பேரணி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது, அந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் எனவும்,  இதற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில் உடனடியாக டிட்டோஜாக் கூடி வேலை  நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கலாம் என்று பெரும்பாலான சங்கங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால் முன்னணி சங்கம் ஒன்று மட்டும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்திவிட்டோம் என்றும், இனி நடத்தமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் கூட்டத்தில் சுழற்சி முறையில் அனைத்து சங்க கட்டடத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. 

Friday, December 13, 2013

Ignou M.ED Entrance Result 2013

பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்

* உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196

*வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு  மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220

*பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214

*முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஏழு பேர் AEEO to உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு AEEO பதவி உயர்வ

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு.... அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ....14/12/2013 அன்று நடைபெறுகிறது ..... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் விவரம் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல் பட்டியலில் இடம் பிடித்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்

1.SUTHATHIRAM K         -  THENI 2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM
7.RAJAMAREES S          - 

இவ்வாறு    உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நன்றி :- திரு கணேசன்.

பணியிடங்களில் பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: அமலுக்கு வந்தது சட்டம்

    பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளி"ல ஈடுபடுவோருக்கு எதிராக கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. டில்லியில்,ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ,பாலியல் பலாத்காரத்திற்கு பலியான சம்பவத்தை அடுத்து, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் தொந்தரவுகள், பாலியல் வன்முறையை தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்துவதில், தாமதம் காட்டப்படுவதாக கூறி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மீது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு, பதிலளித்து பேசிய, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியதாவது: இந்த சட்டம் அமல்படுத்துவது குறித்த முறையான அறிவிப்பு, கடந்த 9ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. 10ம், அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்க்கும் அனைத்து அலுவலகங்களிலும் இந்த சட்டம் கட்டாயமாக்கப்படும். புகார்களை விசாரிக்க, கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்களை, 90 நாட்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். புகார் நிருபிக்கப்பட்டு, பாலியல் தொந்தரவில் தெரியவந்தால், பணி நீக்கம், பதவி உயர்வு ரத்து, சம்பள உயர்வு நிறுத்தம், அபராதம் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கல்வி உதவித்தொகை பெற தேர்வு: 16ல் இருந்து விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க, 16ல் இருந்து, 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு: வட்டார அளவில், பிப்., 22ம் தேதி, தேர்வு நடக்கும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், நடப்பு ஆண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பெற்றோரின், ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர், ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பள்ளி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு கட்டணமாக, 50 ரூபாயை, 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை, 23ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், தேர்வுத் துறை இணைய தளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ஏ.,ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், 385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது.

இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள். கடந்த 2000ல் துவங்கிய எஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையில், 3 ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கலைத்து, அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள் முடிய வேண்டும். சில காரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம். தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில், இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "" எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு ( பி.டி., தகுதி ஆசிரியர்) முக்கியத்துவம் அளிக்கப்படும்.இத்திட்டத்தில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளி காலியிடங்களில் நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும்,'' என்றார்.

NMMS student List. NEW FORMAT

முதுகலைப் படிப்பு இறுதி ஆண்டில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வு களுக்கான பாடத்திட்டத்தை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். அதேநேரத்தில், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியா முழுவதும் எந்த கல்லூரியிலும், எந்த பல்கலைக்கழகத்திலும் பணிபுரிய முடியும்.

படிக்கும்போதே தயார்படுத்த முடிவு தற்போது ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. முதுகலை பட்டப் படிப்பு முடித்து ஒருசில ஆண்டுகள் கழித்த பின்னரே இத்தகைய தகுதித்தேர்வுக்கு தயாராகிறார்கள். இந்த நிலையில், முதுகலை படிப்பு மாணவர்கள் படிக்கும்போதே அவர்களை ஸ்லெட், நெட் தகுதித்தேர்வுகளுக்கு தயார்படுத்த உயர்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வு பாடத்திட்டங்களை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.

பாடத்திட்டத்தில் சேர்ப்பு ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவர உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ள நிலையில், முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை சேர்ப்பதில் எவ்விதமான பிரச்சினையும் எழாது. மேற்கண்ட தகுதித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்தில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பி.எட். மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். பாடத்தில் தகுதித்தேர்வு குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ: 2015ல் வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளி இயங்கும்

் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரத்தில் 6 நாட்களும் பள்ளி இயங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறையின்றி வாரத்தில் தொடர்ந்து 6 நாட்களும் பள்ளி இயக்கப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக, வாரத்திற்கு சுமார் 45 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். 2015ம் கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும

். இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு


இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு
தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா ' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு  பிறபித்தார்.

இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

Thursday, December 12, 2013

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்புத் தேர்வு: திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டுத் தேர்வில் இந்தப் பிரிவுக்காக கூடுதலாக 30 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.டி.சுதர்சன ராவ் கூறினார். வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு மாற்றாக மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் வகையில் திறந்த புத்தகத் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. ஒன்பதாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், பிளஸ் 1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகியப் பாடங்களிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது.

திறந்த புத்தக தேர்வு முறை பிரிவுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வின்போது இந்தப் பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டுவிடும். கேள்விகளுக்குத் தகுந்தபடி சரியான பதில்களை அவர்கள் எழுத வேண்டும். கேள்விகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இடம்பெறும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 9, 11 ஆம் வகுப்புகளில் திறந்த புத்தக தேர்வு முறையை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என டி.டி.சுதர்சன ராவ் கூறினார்.

வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்: பிளஸ் 1 வினாத்தாள் மாற்றம் தொடர்பாக பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அமைப்பு செவ்வாய்க்கிழமை (டிச.10) சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் விவரம்: பிளஸ் 1 வகுப்பில் திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடைபெறும். இந்தப் பாடங்களில் திறந்த புத்தக தேர்வு முறை என்ற பிரிவு மட்டும் கூடுதலாக இடம்பெறும். அந்தப் பிரிவுக்கு தலா 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்தப் பகுதிக்குரிய விடைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிளஸ் 1 வகுப்புக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பும் இந்தச் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கும் இதேபோன்ற வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைக்கு கிடைக்கும் வரவேற்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பொருத்து பிற வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.

தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில்கேள்வித்தாளில் தமிழ் வழியில் ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், கேள்வியே தவறாக கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட கோவை தேர்வர் விஜயலட்சுமி கூறுகையில், "" டி.இ.டி., இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில், " பி' வரிசை கேள்வித்தாளில் 113 வது கேள்வியில் "மனிதன் மண்வளத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சி ' என்று கேட்கப்பட்டுள்ளது. அதே கேள்வி ஆங்கில வழியில், "மண் அரிமானத்தை தடுக்க மனிதன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி' என்று கேட்கப்பட்டுள்ளது. மண்வளபாதுகாப்பு என்பதை மண் அரிமானத்துடன் ஒப்பிட இயலாது, இரண்டும் வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது

. மேலும், இக்கேள்விக்கான பதில், "ஆப்சன் பி' "வேளாண்மை செய்தல்' என்பதற்கு பதிலாக "ஆப்சன் டி' "தாவரங்களை வளர்த்தல்' என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சரியான பதில் நான்கு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் தெளிவாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பினோம். மேலும் நேரடியாக சென்று அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. தற்போது, 89 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஒரு மதிப்பெண்ணில் என் வாழ்க்கை பாதித்துள்ளது. என்னை போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்

   பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. ஒரே தகுதி உடைய பட்டதாரி ஆசிரியரில், பள்ளி கல்வி துறையைச் சேர்ந்தவர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்துவதும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியரை, கண்டுகொள்ளாத நிலையும், இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

"இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, December 11, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம

கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள். மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும். ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர்.

அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன். அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.

அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.