click below
Monday, October 07, 2013
தொடரும் இரட்டைப்பட்டம் வழக்கு
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.
Sunday, October 06, 2013
Saturday, October 05, 2013
கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு
அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, புத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்ப, பிரித்து அடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படி, இருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு, நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, October 04, 2013
குருப்2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம் : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115 இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்' பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில், இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.
அக்டோபர் 7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது !
பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.
நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையல், பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு அக்., 7 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
Thursday, October 03, 2013
குரூப் - 2 தேர்வு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்
குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். துணை வணிக வரி அலுவலர், சார் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், 1,064 பணியிடங்களை நிரப்ப, குரூப் -2 தேர்வு அறிவிப்பை, செப்., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. செப்., 5ம் தேதி முதல், தேர்வாணைய இணையதளம் வழியாக, பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, 8ம் தேதிக்குள், செலுத்த வேண்டும். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 2 முதல் நிலைத்தேர்வு, டிசம்பர், 1ம் தேதி நடக்கிறது.
Wednesday, October 02, 2013
ஆன்-லைனின் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள அறிக்கை: அரசின் புது திட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது.
கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது.
முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள் இன்று திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. கடந்த மாதம், 21ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடந்தன. இதன்பின், 12 நாட்கள், தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று, வழக்கம்போல், அனைத்துப் பள்ளிகளும் துவங்குகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக, 2.5 கோடி புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி, அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, இப்பொருட்கள் சி.இ.ஓ.,- டி.இ.ஓ., க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
இதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. இலவச பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான, இலவச பொருட்களை, பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி, தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. "இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tuesday, October 01, 2013
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர் , தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால், தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்,'' என்றார்.
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கு உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Monday, September 30, 2013
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று
வரைவு வாக்காளர் பட்டியலில், திருத்தங்களை கண்காணிக்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. வரும், 2014 ஜன.,1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியாவோர், பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இதற்காக, இன்று முதல், அக்., 31 வரை, விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிகளில், 44 லட்சம் மாணவர்கள், 18 வயதில் உள்ளனர். இவர்களில், 2.5 சதவீதத்தினர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். எஞ்சியவர்களையும் சேர்க்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும், பேராசிரியர், இரண்டு மாணவ பிரதிநிதிகளை நியமித்து, முழு அளவில், பட்டியலில் சேர்க்கப்படுவர். இதன்படி, 2014 ஜன., 6ம்தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதற்கான உத்தரவை, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பிறப்பித்துள்ளார்.
தொழில் வரி இன்று முதல் உயர்வு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இன்றுமுதல் (அக்.,1) தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும்
. இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது. தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Sunday, September 29, 2013
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'
பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.
இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியை துவக்கியதால், தாய் மொழி கல்விக்கு "நெருக்கடி' ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சர்வே எடுத்து வருகிறது. இப்பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் கூறுகையில்,""ஆங்கில வழிக்கல்வியால், தாய்மொழி கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி, தமிழகம் முழுவதும் சர்வே செய்து, சில பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.