இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 30, 2013

குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு

குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4 தேர்வு மூலம், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 516 காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. நான்காவது கட்ட கலந்தாய்வு மூலம், இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

செப்., 4, 5 தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில், காலை, 8:30 மணி முதல் கலந்தாய்வு நடக்கும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், எந்த தேதியில் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட இரண்டு, "செட்' ஜெராக்ஸ் பிரதிகள் ஆகியவற்றை, கலந்தாய்வுக்கு வரும் போது, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மறியல்

            தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போர் திருப்பூர் குமரன் சிலை முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பாலமுரளி தலைமை வகித்தார்.

  செயலர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.அரசு ஊழியர் சங்கம்,BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர்.710 ஆசிரியர்கள் கலந்துகொண்டர்.புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் உட்பட
       3பேருந்துகளில் ஆறுமுறை அழைத்து சென்றனர்.கே.எஸ்.ஆர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.ஆரஞ்சு,வாழை முதலியவை பொறுப்பாளர்கள் வாங்கி கொடுத்தனர்
       பத்து பேர் கனகராஜா,மோகன்,பாலு,முத்துச்சாமி,சுரேஷ்,மணி உட்பட பஸ் மறியல் செய்தோம். காவலர்கள் இழுத்துச் சென்றனர்

திருப்பூர் ஆர்ப்பாட்டம் 700 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர் பங்கேற்பு





Thursday, August 29, 2013

TNPTF Paper News


தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

: பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள், தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை வலியுறுத்தி உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த பொதுத் தேர்வுக்குப்பின் நடந்த உடனடித் தேர்வில் பங்கேற்று, அதன்பின், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விண்ணப்பித்த, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், அதற்குரிய கட்டண செலானை, தேர்வுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை, கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்கள், "கூடுதல் செயலர் (மேல்நிலை), தேர்வுத்துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரியில், நேரிலோ, தபால் மூலமோ, செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்படாது; மறுகூட்டல் முடிவும், வெளியிடப்படாது. இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

IGNOU B.ed Hall ticket 2013

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றுபுற மன்ற செயல்திட்டம் ECO CLUB

Wednesday, August 28, 2013

"தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா,

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், முதல் வாரத்தில் துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும். இதன்படி தான், பல ஆண்டுகளாக, தேர்வுகள் நடந்து வருகின்றன. இரு தேர்வுகளுமே, தனித்தனியாகத் தான் நடக்கின்றன. அப்படியிருக்கும் போதே, பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. கடந்த பொதுத்தேர்வில் கூட, 10ம் வகுப்பு தேர்வில், பல குளறுபடிகள் நடந்தன.

இது போன்ற நிலையில், "பிளஸ் 2 தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறை நாட்களில், 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாம்' என, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், "வரும் பொதுத்தேர்வு, ஒன்றாக நடத்தப்படலாம்' என, தகவல்கள் வெளியாயின. இது குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை, இயக்குனரிடம் கூறியுள்ளனர்; அவ்வளவு தான். தற்போதைய தேர்வு நடைமுறையில், எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அது போன்ற எண்ணமும், துறைக்கு இல்லை. மாணவர்கள், தேவையில்லாமல் குழப்பம் அடைய வேண்டாம். பொதுவாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். தேவராஜன் கூறுகையில்,

""10ம் வகுப்பு தேர்வை, ஒரு மாதம் முன்கூட்டியே நடத்துவது குறித்து, தேர்வுத் துறை, எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தான், இந்த ஆண்டும் தேர்வு நடக்கும்,'' என்றார். இரண்டு தேர்வுகளையும், ஒன்றாக நடத்தினால், பெரும் குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேர்வு மையத்தில், பிளஸ் 2 கேள்வித்தாள்களும், 10ம் வகுப்பு கேள்வித்தாள்களும் இருந்தால், தேர்வின் போது, கேள்வித்தாள்களை, மாற்றி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், நடைமுறை ரீதியாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, August 27, 2013

ஆறாம் வகுப்பிலேயே "லேப்' அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்

""ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்,'' என, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார். கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆர்.எம்.எஸ்.ஏ., மாநில இயக்குனர், சங்கர் பேசியதாவது:

மாணவர்கள், பல வகையாக இருப்பர். அனைத்து மாணவர்களுக்கும், ஒருவித தனித்திறமை இருக்கும். அதை, கண்டறியும் பணியை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். சில மாணவர்கள், பாடத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், விளையாட்டுகளில், ஆர்வம் அதிகம் இருக்கும். இதுபோன்று, மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதில், மாணவர்களின் திறமையை மேலும் வளர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான், மாணவர்கள், "லேப்'களுக்கு, அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவர்களை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியலை விளக்க வேண்டும். மாதிரிப் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு, சங்கர் பேசினார்.

ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் உத்தரவு

   லோக்சபா தேர்தலுக்காக, 2014 ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, புது வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ஜன., 6ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் லோக்சபா தேர்தலில், தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 2014 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.

நீக்கம், திருத்தம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்படும். அக்டோபரில், ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். "இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின், ஏஜன்ட்கள் பங்கேற்று, வாக்காளர்கள் விடுபடாமல், தேர்தல் கமிஷனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகளுக்கு பின், இறுதிப் பட்டியல், 2014 ஜன., 6ல் வெளியிடப்படும்.

ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

பெயர் பழைய பதவி புதிய பதவி

1. பிரபாகர் முதன்மைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை

2. ராமச்சந்திரன் மேலாண் இயக்குனர், ஆவின் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை
3. சுனில் பாலீவால் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மேலாண் இயக்குனர், ஆவின்
4. இறையன்பு முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை
5. அனிதா பிரவீன் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் (டுபிசெல்) முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை
6. அபூர்வா திட்ட இயக்குனர், சுனாமி திட்ட அலாக்கப் பிரிவு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
7. பூஜா குல்கர்னி இணை செயலர், தொழில் துறை மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் 8. விவேகானந்தன் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' கழகம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்ட இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்
9. மகேஸ்வரன் மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.

சிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிசம்பர் -1ம் தேதி முதல் துவக்கம

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் முதன்மைத் தேர்வு (மெயின்), டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த மே மாதத்தில் யுபிஎஸ்சி(பிரிமிலினரி தேர்வு) நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் செப்டம்பர் 10ம் தேதிக்குள் http://upscdaf.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்த படிவத்தை, நகல் எடுத்து Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு செப்டம்பர் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவத்துடன், கல்வி சான்றிதழ்கள், வயதுக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின், அவர்களுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.

www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அவர்களுக்கான அனுமதிக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு யுபிஎஸ்சி வலைதளத்தை அணுகலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன.இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுநேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது முக்கிய விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள்  அமைக்கப்படும்.

அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Click Here for Tentative Answer Key Paper I and Paper II

Monday, August 26, 2013

என்.சொக்கன் எழுதிய தமிழ் இலக்கணம் பகுபத உறுப்பிலக்கணம்.கூட்டணி குறித்து தமிழ் என்ன சொல்கிறது?

TNPSC Group IV Answer keys GK,General tamil&general English

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிறைவு பெறாத மாணவர்களுக்கு "சிக்கல்'

. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும். இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய"சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.

பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர். இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு

"ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி, சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து, தமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, அரசு வழங்குகிறது.
மாநிலத்தில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளி கல்வித் துறை தரப்பில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, இருவர் வீதமும், தொடக்க கல்வித் துறையில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, மூன்று பேர் வீதமும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட வேறு சில துறைகளில் இருந்தும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தத்தில், 360 ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி, விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில், அதிகாரிகள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது

. மாநிலக் குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 360 ஆசிரியரை, தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, இந்த வார இறுதிக்குள், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.செப்., 5ம் தேதி மாலை, சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித் துறை, மும்முரமாக செய்து வருகிறது.

குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு

குரூப் 4 தேர்வுக்கான விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று முன்தினம், குரூப் 4 தேர்வு நடந்தது. இதில், 12 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், (www.tnpsc.tn. gov.in) நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

Sunday, August 25, 2013

கல்விச் சோலையின் கையேடு 2013-14

TNPSC Group IV tentative answer.key tamil

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதுகுறித்து, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, தமிழக நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், எட்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் தினமும், 60 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுடன், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, பிரசார வழிகாட்டு பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளில், மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட உள்ளனர்.

என். சொக்கன் எழுதும் இலக்கணத் தொடரில் உச்சரிப்பு குறித்து இந்த தொகுப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.‌என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.