இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 23, 2013

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

.  இளநிலையில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு, பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி.-யில் கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைக்காலஜி, பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம்., பி.காம் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம்., சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும், முதுநிலையில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. (பிஎம் அன்ட் ஐஆர்), எம்.ஏ., (பிஎம் அன்ட் ஐஆர்) நேரடி 2-ஆம் ஆண்டு, எம்.ஏ., (எம்சி அன்ட் ஜே), எம்.ஏ., (சைல்டுகேர் அன்ட் எஜூகேஷன்),   எம்.எஸ்சி-யில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எம்.எஸ்சி (ஐ.டி), எம்.பி.ஏ. டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், எஜூகேஷன் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட், எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம். பைனான்ஸ் கண்ட்ரோல், எம்.காம், எம்.சி.எஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.ஜி.டி.சி.ஏ பி.ஜி டிப்ளமோ பிரிவுக்கும் தேர்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஹப்ஹஞ்ஹல்ல்ஹன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (ஆக. 3)மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க லாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் 1-க்கு ரூ. 400 வரைவோலை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதயசூரியன் தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.

கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871  தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது.

5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நடை மேடை வாசிகளையும் வாக்காளர்களாக சேர்க்க உத்தரவு

இருப்பிட சான்று இல்லாத, நடைமேடை வாசிகளையும், வாக்காளர் பட்டியிலில் சேர்க்க வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்?என, தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது. நிரந்தரமாக குடியிருப்புகளில் தங்காமல், வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து, நடைமேடைகளில் (பிளாட்பாரங்கள்), கூடாரங்களில் தங்கியிருப்பவர்களையும், காடுகளில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களையும், பட்டியிலில் சேர்க்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த பகுதி வாக்காளர் நிலை அலுவலர், அவர்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் பூர்வீகம். தற்போது செய்யும் தொழில் குறித்து கேட்டறிந்து வாக்காளர் பட்டியிலில் சேர்க்கவேண்டும். இவரிடம், இருப்பிட சான்று, வயது சான்று போன்றவற்றை ஆதாரமாக கேட்க வேண்டியதில்லை, என்றும் கூறப்பட்டுள்ளது.

Monday, July 22, 2013

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் தேர்வு 29 முதல் விண்ணப்பிக்கலாம்

  கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வாயிலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி, இசை ஆசிரியர், நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
கல்வி தகுதி, பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்சிஏ, பிசிஏ, பிஜி டிகிரி, டிப்ளமோ, இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி, இசை ஆசிரியர், நூலகர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அந்தந்த துறை சார்ந்த தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்ப கட்டணம் 750 வங்கி வழியாக செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை http://jobapply.in/kvs அல்லது www.kvsangathan.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்துதெரிந்துகொள்ளலாம்.

திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை: மாணவ, மாணவியருக்கு அழைப்பு

  மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், 2013, மார்ச்சில் வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண், மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள், "இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம், கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு நூல்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம் வாருங்கள்_ செந்தமிழ்பாலா

இரட்டைப்பட்டம் சார்பான நீதிமன்ற விசாரணையின் தற்போதைய நிலை?

பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்தார் எனவும், எனவே இந்த வாரம் கட்டாயம் விசாரணைக்கு வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன். இரகசியம் காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வழக்கை தலமையேற்று நடத்தி வரும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வழக்குரைஞர் திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாட இருக்கிறார்கள். விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்கு விசாரணையை எதிர்ப்பார்த்து பல்லாயிரக்கணக்காண ஆசிரியர்கள் பதவி உயர்வுகாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு குறித்து முகநூல் மற்றும் அலைபேசியில் விசாரிக்கும் தோழர்கள் இந்த பதிலை மற்றவர்களுக்கு பகிருமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வழக்கு விசாரணை பற்றி மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

ஆ.முத்துப்பாண்டியன்.
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை.

Sunday, July 21, 2013

ஆகஸ்டில் தேர்வு முடிவ

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு சரியான விடைகளை வைத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் முதல்வரால் கவுரவிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு சிறந்த செயல்பாடுகளுக்கான விருது மற்றும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் சிறந்த தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிறந்த தகுதிக்குரிய நபர்கள் குறித்த விவரங்களை தயாரிக்கும் படிவம் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்கள் துறைகளில் சிறந்ததாக கருதப்படும் ஊழியர்கள், ஆசிரியர்கள் இருந்தால் அவர்களது விவரங்களை உரிய பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் உள்ள சிறந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் (23ம்தேதி) பரிந்துரைத்து அனுப்ப தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார

். இதேபோல் அனைத்து துறைகளிலும் சிறந்த  ஊழியர்கள் குறித்த விவரங்கள் 24ம் தேதிக்குள் அரசால் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக தேர்வாகும் 3 நபர்களுக்கு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியருக்கு சீருடைசுதந்திர தினத்தன்று கிடைக்கும்

சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்' சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.மூன்றாவது, "செட்' சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்' சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்' சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்' சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவர்களின் வங்கி கணக்கிற்குகல்வி உதவித்தொகை தர ஏற்பாடு

"கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்' உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்' என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்வி உதவித் தொகைக்கான, "செக்கை' அரசு அனுப்பிவிடும்.

இவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர். சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய, கல்வி உதவித் தொகையை முறைகேடாக எடுத்துச் செலவு செய்ததாக, அரசுக்குப் புகார் சென்றது.இது போன்று, மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும் முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்தும் வகையில், "கோர் பாங்கிங்' வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""2013-14ம் கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகை செலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.

இதற்காகவே, "கோர் பாங்கிங்' வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்,'' என்றார்.

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வு 18ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சுருக்கெழுத்து தமிழ், ஆங்கிலம் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர் பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடக்கிறது. 19ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை அக்கவுன்டன்சி முதல் மற்றும் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.

இதே போல், வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை ஒன்று முதல் நான்கு பேட்ஜ் வரையிலான தேர்வு நடக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ் மாணவர்களுக்கும், சீனியர் பிரிவில் 1 முதல் மூன்று பேட்ஜ் மாணவர்களுக்கும் தேர்வு நடக்கிறது. அன்று காலை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹைஸ்பீடு தேர்வுகள், மாலையில் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் தேர்வுகளும் நடக்கிறது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை முன்னிட்டு 24ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட டைப்ரைட்டிங் தேர்வுகள் 31ம் தேதியும், 25ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் மாதம் 1ம் தேதியும் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தேர்வர்கள் இரண்டு தேர்வுகளையும் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கனமழை: கூடலூர்,பந்தலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை அடுத்து மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு:1.59 லட்சம் பேர் எழுதினர்

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் லட்சம் பேர் இன்று (ஜூலை 21) எழுதினர்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,914 பேர் வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சென்னையில் 12 ஆயிரத்து 908 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 1,019 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமின்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ், வணிகவியல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் எளிமையாக இருந்ததாகவும், வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் சற்றுக் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

DEE - CM AWARD - "BEST PERFORMANCE AWARD 2013" - APPLICATION CALLED REG PROC

Saturday, July 20, 2013

தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?

தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை முழுவதுமாக நிரப்பும் நோக்கில், விதிமுறையில் ஒரு சில தளர்வு காட்டலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நேற்று சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. தரம் உயர்ந்த ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 முதல் 9 முதுகலை ஆசிரியர் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்தந்த சி.இ.ஒ., அலுவலகங்களில் நேற்று உள் மாவட்ட முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை உட்பட ஒரு சில மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் உத்தரவு பெற்றனர். இந்நிலையில்,நாளை (ஜூலை22)மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும், மாறுதல் கோரும் மாவட்ட சி.இ.ஒ., அலுவலகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டத்தில் உள் மாவட்ட மாறுதலை சில ஆசிரியர்கள் விரும்பாததால்,தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமாறுதல் விதிமுறைகளை கடைபிடித்த போதிலும், தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பற்றாக்குறை தவிர்க்க,போட்டி இல்லாத இடங்களில் பணியில் சேர்ந்து, ஓராண்டு நிறைவு பெறாமல் இருந்தாலும்,தேவையின் அடிப்படையில் மாறுதல் பெற வாய்ப்பளிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, July 19, 2013

தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும

பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

பள்ளிகளில் சத்துணவு விநியோகிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத் தொடர் ந்து மாவட்ட கலெக்டர்கள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு தயாரிக்கும் பணியை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும். இந்த விதிமுறையை கடைப்பிடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை அமைப்பா ளர் சாப்பிட்டு பார்த்த பிறகுதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது நெய்வேலி சம்பவத்துக்குப் பிறகு, இந்த உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியரும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.