Wednesday, December 05, 2012
Tuesday, December 04, 2012
பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்? : அரையாண்டு தேர்வில் நடைமுறை-Dinamalar
கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட, பாடப் புத்தகத்தில் இல்லாத, கட்டாயமாக்கப்பட்ட வினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது;
மாணவ, மாணவியர் பலர், கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது, மாணவர்களின் நலன் கருதி, கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட உள்ளது. வாய்மொழி உத்தரவு, எழுத்துப் பூர்வமாக வரும் வரை, ஏதுவும் சொல்ல இயலாது' என்றார்.
கோவை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில், ஐந்து மதிப்பெண் ஒன்றும், இரண்டு மதிப்பெண் ஒன்றும், கட்டாய வினாக்களாக கேட்கப்பட்டன. இதனால், சதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. வரும், 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டது குறித்து, தகவல் சார்ந்த அறிக்கை ஏதும், இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி
10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்: பாடம் முந்தைய காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் இப்போதைய காலியிடங்கள் 1. தமிழ் 2,298 1,815 483 2. ஆங்கிலம் 4,826 3001 1,825 3. கணிதம் 2,664 1,365 1,299 4. இயற்பியல் 1,454 410 1,044 5. வேதியியல் 1,453 643 810 6. தாவரவியல் 625 62 563 7. விலங்கியல் 622 74 548 8. வரலாறு 4,304 1,182 3,122 9. புவியியல் 1,076 75 1,001 10. சிறுபான்மையின மொழிப்பாடங்கள் 110 91 19 மொத்தம் 19,432 8,718 10,714
குரூப் 4 கலந்தாய்வு டிசம்பர் 17 முதல் தொடக்கம்
குரூப் 4 பிரிவின் கீழ் வரும் இளநிலை உதவியாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 6-ம் தேதி நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் கோரியுள்ளபடி மூலச்சான்றிதழ்கள் மற்றும் அவைகளுக்கான சான்றொப்பமிடப்பட்ட நகல்களை கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு படிப்பை தமிழ்வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் சான்றிதழ் பெற்று கலந்தாய்வுக்கு வரும்போது கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இந்தச் சான்றிதழ் அவர் விண்ணப்பிக்கும்போது, தமிழ் வழியில் பயின்றார் எனக் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும், தட்டச்சர் பதவிக்கான அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சரிபார்ப்பின்போது கட்டாயம் அளிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, December 03, 2012
25 ஆண்டுகள் பணி நிறைவு பொதுத்துறை ஊழியர்களுக்கும் பணப்பரி”
அரசுப் பணியில், 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்களின் பணியாளர்களுக்கும், நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப்பணியில், 25 ஆண்டுகள், எவ்வித குறையும் இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், பாராட்டுச் சான்றிதழும், "கிசான் விகாஸ்' பத்திரமும் வழங்கப்பட்டு வந்தது. கிசான் விகாஸ் பத்திரம் வழங்குவதை சமீபத்தில், மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து, கிசான் விகாஸ் பத்திரத்திற்குப் பதில், 2000 ரூபாய் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆண்டுக்கு இருமுறை, இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் கீழ் வரும், அரசுக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், இத்திட்டத்தை நீட்டித்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் மழை நீடிப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அறிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், மணவாளநகர், வேப்பம்பட்டு, கடம்பத்தூர், திருப்பாச்சூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் லேசான அளவில் மழை பெய்து கொண்டே இருந்தது.மழை காரணமாக இன்று (4–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கே.வீரராகவ ராவ் உத்தரவிட்டு உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:– கும்மிடிப்பூண்டி– 40, ஊத்துக்கோட்டை– 21, திருவள்ளூர்– 20, அம்பத்தூர்– 19, பொன்னேரி– 14.6, செங்குன்றம்– 14, தாமரைப்பாக்கம்– 13, பூண்டி– 10.6, சோழவரம்– 9, திருவாலங்காடு– 8, பள்ளிப்பட்டு– 4, பூந்தமல்லி, திருத்தணி, செம்பியம்– 3.மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
இனி ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே
இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்தது.
ஆனால் ஆணையத்தின் இந்த முடிவுக்கு டில்லி ஐகோர்ட் தடை விதித்தது. கட்டுப்பாடு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில், சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மீண்டும் எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Sunday, December 02, 2012
Saturday, December 01, 2012
குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், ணிகவரித் துறை உதவி ஆணையர்,மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம் தேதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
மெட்ரிக் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்குள் வராது ஐகோர்ட்டு உத்தரவ
மெட்ரிக் பள்ளிகளை தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்குள் கொண்டு வர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வாரியத்தின் கீழ் வந்தன முன்பிருந்த விதிமுறைகளின்படி, தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகத்தின் இணைப்பை பெற்றிருக்க வேண்டும். பின்னர் இந்த விதி மாற்றப்பட்டு, மெட்ரிகுலேஷன் வாரியம் உருவாக்கப்பட்டது.
பின்னர் இந்த வாரியத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் மெட்ரிக் வாரியத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் தொகை செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெட்ரிக் பள்ளிகளை தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுக்கள் தள்ளுபடி இந்த வழக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்த நீதிபதி ப.சதாசிவம் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி), மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் பின்னர் இந்த வழக்கை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி) விசாரித்து, நீதிபதி சதாசிவத்தின் உத்தரவுக்கு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.சுப்பையா ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகளை கொண்டு வர முடியாது. மெட்ரிக் வாரியத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி, கல்வி கட்டண கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. எனவே நீதிபதி ப.சதாசிவத்தின் உத்தரவை பின்பற்றி, மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
Friday, November 30, 2012
பி.எப்., சந்தாதாரர்களுக்குஇ - பாஸ்புக் அறிமுகம
் :தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரங்களை, ஆன்-லைனில் தெரிந்து கொள்ளும் வகையில், இ-பாஸ்புக் சேவை, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள, சந்தா மற்றும் வட்டி விவரங்கள் அடங்கிய ரசீது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.
இதை, மின்னணு ரசீதாக பார்க்கும் வசதி, இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தங்கள் மாதாந்திரா கணக்கு விவரங்கள் அடங்கிய, மின்னணு ரசீதை, இ.பி.எப்., இணையதளத்தில் பார்க்க, வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது, இந்த கணக்கு விவரங்களை, மாதாந்தோறும் டவுன்லோடு செய்து கொள்ளும், இ-பாஸ்புக் வசதியை, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், ஆர்.சி.மிஸ்ரா, நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதியை, www.epbõindia.gov.in இணையதளத்தில் பெறலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், இந்த இணையதளத்தில், தங்களது போட்டோவுடன் கூடிய அடையாள எண் உள்ள, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். பாஸ்வேர்டாக, மொபைல் போன் எண்ணை பதிய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்த பிறகு, தங்கள் கணக்கு எண்ணை செலுத்தி, பாஸ்புக்கை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
Thursday, November 29, 2012
உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் படி, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம், 7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது.
அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Wednesday, November 28, 2012
கூட்டுறவு துறையில் 3,589 பேரை நியமிக்க புதிய பணியிடம் உருவாக்கி உத்தரவு
தமிழக கூட்டுறவு துறையில், 3,589 பேரை நியமிக்க, புதிய பணியிடத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பத்து ஆயிரத்து, 442 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில், 2012 மார்ச், 31ம் தேதி வரை, கடன் நிலுவை அடிப்படையில் பணியாளர்களின் பணிநிலை திறனில் திருத்தம் செய்து, கூட்டுறவு பதிவாளர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடன் நிலுவை, 10 கோடி ரூபாய்க்கு மேலுள்ள, ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கும், ஒரு உதவியாளரை நியமனம் செய்து கொள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் சங்கங்களில், குறைந்தது, 25 கோடி ரூபாய் முதல், அதிகபட்சம், 50 கோடி ரூபாய் வரை, கடன் நிலுவை உள்ளது. இதில், 25 கோடி கடன் நிலுவை எனில், 10 கோடி ரூபாய் போக, மீதமுள்ள, 15 கோடியில், ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கு, ஒருவர் வீதம், ஐந்து பேரும், அதன் அடிப்படையில், 50 கோடி கடன் நிலுவைக்கு, 13 பேர் வீதம், புதிதாக நியமித்து கொள்ளலாம். தற்போது, கூட்டுறவு துறையில், 3,589 பணியிடங்கள் நிரப்ப, ஆளெடுக்கப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர், கடன் சங்கங்களில், உதவியாளராக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனத்தை, 50 சதவீதம், நேரடியாகவும், பதவி உயர்வு மூலமும் பூர்த்தி செய்து கொள்ள, புதிய திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடன் சங்கத்தில் பணியாற்றும் சிற்றெழுத்தர், ரேஷன்கடை சேல்ஸ்மேன் ஆகியோர் உதவியாளராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு, உருவாகி உள்ளதால், ரேஷன்கடை பணியாளர்கள், பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர் இதற்கு முன், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல், எவ்வளவு கடன் நிலுவை இருந்தாலும், இரு உதவியாளர் பணியிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்களோடு சேர்ந்து, சங்க செயலர், உதவி செயலர், சீனியர் கிளர்க், அலுவலக உதவியாளர், சிற்றெழுத்தர் என, ஏழு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். புதிய திருத்தத்தின் மூலம், குறைந்தது, 12 பேர் முதல், அதிகபட்சம், 20 பேர் வரை பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. ஆளெடுப்பு காரணமாகவே, பணிநிலை திறனில் திருத்தம் செய்து, புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் மார்ச்சுக்குள் முடிக்க கல்வித்துறை தீவிரம
் நிலுவையில் உள்ள மாணவ, மாணவியருக்கான இலவச திட்டங்களை, மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு, கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கலர் பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணபெட்டி திட்டங்களை, விரைவில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பார் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. இவற்றில், இலவச பாடப் புத்தகங்கள், சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில திட்டங்கள் பழையவை. நோட்டுகள், "அட்லஸ்' , கலர் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, லேப்-டாப், ஊக்கத்தொகை, கணித உபகரணப்பெட்டி, காலணி ஆகியவை, புதிய திட்டங்கள். புதிய திட்டங்களில், நோட்டுகள், லேப்-டாப், ஊக்கத்தொகை திட்டங்கள் துவங்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 92.28 லட்சம் மாணவ, மாணவியருக்கு, புத்தகப் பை வழங்கும் திட்டம், 1 முதல், 10ம் வகுப்பு வரை, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, காலணிகள் வழங்கும் திட்டம், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான, 35 லட்சம் பேருக்கு, கலர் பென்சில்கள் வழங்கும் திட்டம் ஆகியவை, தொடக்க கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.
புதிய திட்டங்கள் செயல்பாடு குறித்து, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த முன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, பொருட்கள் தயாராகி வருகின்றன. மிக விரைவில், வினியோகம் துவங்கும்' என, தெரிவித்தன. இதேபோல், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 16.11 கோடி ரூபாய் செலவில், கணித உபகரணப்பெட்டி வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இத்திட்டமும் தயார் நிலையில் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகப் பை, பென்சில் மற்றும் கணித உபகரணப்பெட்டி திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான, 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, அட்லஸ் வழங்கும் திட்டம் துவக்கப்படும் எனவும், இத்திட்டம், 23 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்திட்டம், பாடநூல் கழகம் சார்பில், செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டங்கள் செயல்பாடு குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா கூறியதாவது: விலையில்லா திட்டங்கள் அனைத்தையும், மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மாணவ, மாணவியருக்கான, மூன்று ஜோடி சீருடைகள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. நான்காவது ஜோடி சீருடைகளும், மிக விரைவில் வழங்கப்படும். கல்வியாண்டு முடிவதற்குள், நான்கு ஜோடி சீருடைகள், வேறு எந்த மாநிலத்திலும் வழங்கவில்லை. தமிழகத்தில் தான், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கியதும், அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் வழங்க, இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, சபிதா கூறினார்.
64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவ., 30 கடைசி-28-11-2012
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.