இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 11, 2012

1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைதோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு

அரசு மேல்நிலை பள்ளிகளில், 11 மற்றும், 12ம் வகுப்புகளில் உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.தற்போதுள்ள, 4,393 பள்ளிகள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட, 544 பள்ளிகள் என, மொத்தம், 4,937 பள்ளிகளுக்கு, தலா ஒரு ஆய்வக உதவியாளர் வீதம், 4,937 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இதில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், 1,764 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, ஒரு இளநிலை உதவியாளர் வீதம், பணியிடங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசுக்கு, 109 கோடி ரூபாய் செலவாகும். மேலும், 131 பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம் போன்ற, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, 152.73 கோடி ரூபா# நிதி ஒதுக்கீடு செய்தும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 10, 2012

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்கீடு: முதல்வர

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் பள்ளி பொதுத் தேர்வு பணிகள் துவங்கின : 30ம் தேதிக்குள், பட்டியலை இறுதி செய்ய முடிவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.

பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது. இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுத்துறை பணியாளர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

கல்வித்துறையில், ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்குவது போல், தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் அல்லாத பணிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தகுதி உடையவர்களுக்கு, 2 சதவீதம் அளவில், ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது

. இவ்வாறாக, பல ஊழியர்கள், ஆசிரியராக பணி மாறுதல் பெறுகின்றனர். இந்த வாய்ப்பு, தேர்வுத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் தகுதியுடன் பலர், தேர்வுத் துறையில், சாதாரண நிலையில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்வுத்துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தான், தேர்வுத்துறையும் வருகிறது; இதர கல்வித் துறைகளும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும், ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கி, எங்களுக்கு மறுப்பது, எந்த வகையில் நியாயம் என, தெரியவில்லை. தகுதி வாய்ந்த தேர்வுத்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வுத்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தன.

Friday, November 09, 2012

செல்போன் 'சிம் கார்டு' வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்!

செல்போன் 'சிம் கார்டு' வாங்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம்  கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி  வைக்க, மத்திய தொலைதொடர்புத்துறை செல்போன் சேவை இணைப்புகளைப்  பெறுவதற்கு அறிவித்துள்ள புதிய வழிமுறைகள் வருமாறு:

* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர்  பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு  வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால் அதற்கு செல்போன் சேவை  நிறுவனங்களே பொறுப்பு

. * செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர்,  விண்ணப்பதாரரையும், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும்  ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில் பார்த்தேன், விண்ணப்பத்துடன்  ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.

* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று  விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக  செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில்  புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.

* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல்  சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து, சில்லறை  விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.

* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை  நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று  சான்றளிக்க வேண்டும்.

* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி  மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை  விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு  தொடர வேண்டும்.

* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மீது செல்போன்  சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கத்தவறினால், செல்போன் சேவை நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU Term end exam time table dec-2012

கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி

தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லை என்றாலும், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளும் தங்களது கிளை வங்கிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 18ம் தேதி கலந்தாய்வு

் தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தியது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 08, 2012

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவருக்கு வாய்ப்பு

டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மாவட்ட தலைமை இடங்களில், கடந்த மாதம், 31ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

கடும் மழை காரணமாக, நீண்ட தொலைவில் இருந்ததேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பது குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், நேரடியாக, டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம். அவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை' என, தெரிவித்துள்ளன.

குரூப் - 1 காலி பணியிடம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

:குரூப்-1 பணியிடங்களில், நிரம்பாமல் உள்ள, 664 காலி இடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தேர்வாணைய செயலரின் அறிவிப்பு:

குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது.

இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் இருந்து 9ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி

""முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டம், அடுத்த கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கு நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி பேசியதாவது:கல்வி மேம்பாட்டிற்காக, தமிழக முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக, 15 அரசாணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

முதன்முதலாக கணினி அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி, முதன்முதலாக, பேப்பர் இல்லாத ஒரு தேர்வை, டிசம்பர் 9ம் தேதி நடத்தவுள்ளது. பயோமெட்ரிக் முறையில் தேர்வர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இத்தேர்வின் மூலம், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் புதிய முறையைப் பற்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் கூறியதாவது:

கேள்வித் தாளானது, தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக லோட் செய்யப்படும். தேர்வெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட பாஸ்வேர்ட் மூலமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தேர்வருக்கும் ஒரு கணினி வழங்கப்படும் மற்றும் கேள்வித்தாள் திரையில் தெரியும். இதை எழுதுவதற்கு ஒரு தேர்வர், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. Objective முறையில் இருக்கும் கேள்விக்கு, சரியான விடையை Mouse -ஐ நகர்த்தி கிளிக் செய்தால் போதும். அதேசமயம், ஒருவர் அளித்த பதிலை மாற்றவும் முடியும். தேர்வெழுதி முடித்தப் பின்னர் ஒருவர், பதிலளித்த கேள்வித்தாளை பிரின்ட் எடுத்துக் கொள்ளவும் முடியும்.

இத்தேர்வுக்கான Key answers, தேர்வு முடிந்த மறுநாள் வெளியிடப்படும். தேர்வரின் அடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு, முதன்முறையாக, பயோமெட்ரிக் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இத்தேர்வில், சில ஆயிரம் தேர்வர்கள்(candidates) கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். தேவைப்படும் கணினிகளை வழங்க, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணினியில் வரும் கேள்வித்தாளுக்கு பதிலளிக்கும் பொருட்டு, தேர்வர்களுக்கு பயிற்சியளிக்க, www.tnpsc.gov.in வலைத்தளத்தில், மாதிரி கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இதுகுறித்து தெளிவுபெற, 18004251002 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தேர்வு முடிந்தவுடன், பதிலளிக்கப்பட்ட ஆன்லைன் தாள்கள், TNPSC -க்கு மாற்றப்படும். இதன்மூலம், தேர்வு முடிந்த அதேநாளிலேயே, முடிவுகளை வெளியிட முடியும். இப்புதிய தேர்வு முறை வெளிப்படையானது மட்டுமின்றி, எளிமையானதும் கூட. இதன்மூலம் தேர்வெழுதுபவரின் நேரமும் மிச்சமாகிறது.

மேலும், பிரின்ட் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் மற்றும் பதிலளிக்கப்பட்ட தாள்களை இடமாற்றம் செய்கையில் ஏற்படக்கூடிய முறைகேடு அபாயங்களை முற்றிலும் தவிர்க்க இயலும். இந்த கணினி அடிப்படையிலான தேர்வில், அறிமுகத்தை ஏற்படுத்த, ஒரு மாதிரித் தேர்வை டிஎன்பிஎஸ்சி கமிஷன் நடத்தவுள்ளது. இத்தேர்வானது, தோட்டக்கலை அலுவலர், உதவி பொறியாளர், முதுநிலை ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

Wednesday, November 07, 2012

குரூப்-2 தேர்வுக்கு"கீ-ஆன்சர்' வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், குரூப்-2 தேர்வு, "கீ-ஆன்சர்' நேற்று வெளியிடப்பட்டது.தேர்வாணையம், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, 4ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 3.8 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.

2.7 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு பதவிக்கு, 103 பேர் போட்டி, என்ற நிலை உள்ளது.இந்நிலையில், தேர்வின் உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.tn.nic.in), நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபணைகளை, 14ம் தேதிக்குள், தேர்வர்கள் தெரிவித்த பின், நிபுணர்களின் ஆய்வுக்குப் பின், இறுதி விடைகள் வெளியிடப்படும்.

Tirupur TNPTF Arpattam

Our General secretary Mr.Muruga Selvarasan participate




TNPSC Group II General Tamil Answer key

GO 388 Festival advance for Govt Employees

Tuesday, November 06, 2012

டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது

  டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.

உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

B.Ed. Entrance Result , 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

் ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடங்குகிறது. ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் நவ.,2ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 6.56 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 10,397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் வெற்றி பெற்றனர்.

நவம்பர் 6, 7 ஆம் தேதிகளில் இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நவம்பர் 8, 9 தேதிகளில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Monday, November 05, 2012

தேசிய அடையாள அட்டைப்பணி தீவிரம் : மார்ச்சில் நிறைவு செய்ய உத்தரவு

   ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, "ஸ்மார்ட் கார்டு' மூலம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பணியை நிறைவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், எட்டு கோடி மக்கள் தொகை உள்ளது. 10 ஆண்டுக்கு, ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் அனைத்தும், மத்திய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை, மாநில வாரியாக, பொதுமக்களின் விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு, ரேஷன் கார்டு முறையை மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக ஆலோசித்து வருகிறது

. தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அடிப்படையாகக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருள் வினியோகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, தேசிய அடையாள அட்டைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன், அதைக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தனியார் நிறுவனம், இந்த பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும், போட்டோ, கைரேகை, கருவிழி பதிவு செய்வதற்கான முகாம், வருவாய்த் துறையால் அறிவிக்கப்படும். அந்த நாளில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பாளர்கள் வழங்கிய ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும்.

அந்த ரசீதுடன் சேர்த்து, தேசிய அடையாள அட்டைக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டும். பதிவு முடிந்தவுடன், சம்மந்தப்பட்ட படிவம் முத்திரையிடப்பட்டு, தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் மாதத்துக்குள், அடையாள அட்டை பதிவு பணியை முடித்து, அரசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.