இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 07, 2012

வாகன கட்டணம்: அரசே நிர்ணயிக்க பெற்றோர் வலியுறுத்தல்-08-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக, மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பள்ளி வாகனக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை முடிச்சூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிச் சிறுமி சுருதி, பள்ளி வாகனத்தில் இருந்த துவாரம் வழியாக கீழே விழுந்து உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனையடுத்து, பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கண்காணிப்பை தீவிரமாக்கிய தமிழக அரசு, தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பு கருதி குறைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளி வாகனக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்தால் தான் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சில பெற்றோர் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதங்கள்.... வாசுதேவன், முடிச்சூர்: பள்ளி வாகனங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால், பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். ஜோதி, கிழக்கு தாம்பரம் : விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு எதிராக, கடந்த பத்து நாட்களாக அரசு அதிகாரிகள் செய்யும் பணிகளை, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் எதிர்த்து வருகின்றனர். திடீரென நேற்று அறிவித்த வேலை நிறுத்தத்தால், பள்ளிக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னையில் அரசு தலையீட்டு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணன், சைதாப்பேட்டை: எனது பேத்தி, தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருகிறார். இரண்டு நாட்கள், பள்ளி ஆட்டோ ஓட்டுனர்களின் வேலை நிறுத்ததால், பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனது பேத்தியை, இரண்டு நாட்களும் வேறு ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன். இதற்கு ஒரு நாளைக்கு, 100 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். வசந்தா, நங்கநல்லூர்: என் மகள் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். தினமும் பள்ளி வாகனத்தில் தான் சென்று வருவார். நேற்று அறிவிப்பின்றி, வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நானும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், மகளை பள்ளிக்கு கொண்டு விட்டு சென்றதால், பணிக்கு காலதாமதமாக சென்றேன்

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வக கையேடு வினியோகம்-08-08-2012 எழுத்தின் அளவு : Print Email ராமநாதபுரம்: தமிழக கல்வித்துறையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வக கையேடு இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. கடந்தாண்டு முதல், பத்தாம் வகுப்பிற்கும் அறிவியல் ஆய்வக பயிற்சி துவங்கப்பட்டது. மாணவர்களுக்கு தனியாக பயிற்சி புத்தகம் வழங்கவில்லை. ஆசிரியர்களுக்கு மட்டும் புத்தகம் வழங்கப்பட்டது. இதை வைத்து ஆய்வக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தாண்டு முதல், அறிவியல் ஆய்வகத்திற்கு தனியாக, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வழங்கப்பட்டு வரும் புத்தகத்தில் ஆய்வக வசதிகள், பயன்படுத்தும் முறை, செய்முறை பயிற்சி குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் உள்ளவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரங்கநாதன் கூறியதாவது: கடந்தாண்டில் ஆய்வகம் குறித்து, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் தெளிவா புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது மாணவர்களின் கையில் புத்தகம் இருப்பதால், ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சந்தேகங்களை உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள முடியும், என்றார்.

CCE Implement

9,10ம் வகுப்புகளுக்கு 2012- 13ல் முப்பருவ கல்விமுறை அமல்-08-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013௧4) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: வரும் 2013௧4ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும். பாடப் புத்தகங்கள் எழுதும் பணிக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், அரசுக்கு, இயக்குனர் கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில், பாட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு சபிதா தெரிவித்து உள்ளார்.

ஜூன் 2012-இல் நடைமுறை படுத்தப்பட்டதை போல் மார்ச் 2013ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் மாதத்திலேயே +2 தேர்வு இல்லாத நாட்களில் வைத்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை. ஜூன் 2012-இல் நடைமுறை படுத்தப்பட்டதை போல்  மார்ச் 2013ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் மாதத்திலேயே +2 தேர்வு இல்லாத நாட்களில் வைத்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை.

பள்ளி வாகனங்களில் கூடுதல் மாணவர்களை அனுமதிக்க கோரிக்கை-07-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, அதிகமான நபர்களை பள்ளி வாகனங்களில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அதற்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம், நேற்று நடந்தது. இதில், தமிழக உள்துறைச் செயலர் ராஜகோபாலை சந்தித்து, தனியார் பள்ளி வாகன கட்டணம் உயர்வு, பள்ளி வாகனங்களுக்கான நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவது உட்பட சில கோரிக்கைகளை மனுவாக அளிக்க, முடிவு செய்தனர். அதன்படி, தலைமை செயலகத்தில், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், தங்களுக்கான வாகன வரியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்காமல், ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த அனுமதிக்க வேண்டும்; பள்ளி வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான, "12+1&' என்பதை,"20+1&' என்ற அளவிற்கு நபர்களை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தி உள்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்    தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு பருவத்துக்கும் 2 புத்தகங்கள் அச்சடித்து வழங்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.     இப்போதுள்ள முறையின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.    இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடுவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த புத்தகங்களை எவ்வாறு அச்சிடலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அதிகப் படங்களுடனும், குறைந்த பக்கங்களிலும் புத்தகங்களைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. புத்தகங்களை எளிமையாக்கும் வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு புத்தகங்களாகப் பிரித்து அச்சிடப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், பிற பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் அச்சிடப்படுகின்றன. செப்டம்பர் முதல் வாரத்துக்குள்... ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தலா இரண்டு புத்தகங்கள் வீதம் 16 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கே. கோபால் தெரிவித்தார்.      மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறையை தமிழக அரசு நடப்பாண்டில் அறிமுகம் செய்தது. அதனடிப்படையில், ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.     ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்கள் மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.     சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன. இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சடிக்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் கூறியது:    இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் எங்களிடம் வழங்கப்பட்டு விட்டன. புத்தகங்களை அச்சிடும் பணி இப்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. முதல் பருவத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பருவத்தில் அந்தப் புத்தகங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு புத்தகமும் 200 பக்கத்துக்கு மிகாத வகையில் அச்சிடப்படுகின்றன.     ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள புத்தகங்கள் தனி கவனத்துடன் அதிக படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள்: இரண்டாம் பருவத்துக்காக 1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 500 இலவசப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த புத்தகங்களில் தமிழ் வழிப் புத்தகங்களே அதிகம் இருக்கும். தனியார் பள்ளிகள் மற்றும் சில்லறை விற்பனைக்காக 76 லட்சத்து 38 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அக்டோபர் மாதத்தில்தான் இரண்டாம் பருவம் தொடங்குகிறது. ஆனால், செப்டம்பர் முதல் வாரத்துக்குள் புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும் என்றார் அவர். புத்தகங்களின் விலை நிர்ணயம்: முப்பருவ முறையின் கீழ் இரண்டு, மூன்றாம் பருவங்களுக்கான புத்தகங்களின் விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. இரண்டு, மூன்றாம் பருவப் புத்தகங்களின் விலை வகுப்பு புத்தக                                                          மொத்த        எண்ணிக்கை தொகுதி-1  தொகுதி-2 விலை 1 2 ரூ.30 ரூ.40 ரூ.70 2 2 ரூ.30 ரூ.40 ரூ.70 3 2 ரூ.30 ரூ.55 ரூ.85 4 2 ரூ.30 ரூ.55 ரூ.85 5 2 ரூ.40 ரூ.45 ரூ.85 6 2 ரூ.35 ரூ.50 ரூ.85 7 2 ரூ.40 ரூ.60 ரூ.100 8 2 ரூ.40 ரூ.60 ரூ.100

VAO Exam

வி.ஏ.ஓ. தேர்வு: 7.8 லட்சம் பேர் விண்ணப்பம்-07-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வரும் செப்டம்பர் 30ம் தேதி நடத்த உள்ள வி.ஏ.ஓ. தேர்வுக்கு, நேற்று வரை, 7.8 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வரும் 10ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். வருவாய்த் துறையில், 1,045 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப, செப்டம்பர் 30ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் முதல் வாரத்தில், டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் அறிவித்தது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிய இன்னும் நான்கு நாள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று வரை, 7.8 லட்சம் பேர் பதிவு செய்ததாக, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கி விட்டதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய நிலை எழவில்லை எனவும், அவர் தெரிவித்தார். நான்கு நாட்களில், மேலும் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. « முதல் பக்கம்

Monday, August 06, 2012

இரண்டாம் பருவ புத்தகங்கள்: பதிப்பகங்களுக்கு அழைப்பு-07-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, தனியார் பதிப்பகங்கள், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய தலைவர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இரண்டாம் பருவத்திற்கான பாடத் திட்டம், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பெற்றோர், பொதுமக்கள், மாணவர் பார்வைக்காக, மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப் பட்டு உள்ளது. இந்த வகுப்புகளுக்கு, தமிழ் நீங்கலாக தயார் செய்யப்பட்ட இதர பாடங்களுக்கு, பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெற, 21ம் தேதிக்குள் பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம். புத்தகங்களை, இரு நகல்களுடன், "உறுப்பினர்-செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை௬&' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். பாடப் புத்தகத்தின் தோராய விலையை குறிப்பிட வேண்டும். புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

1yr degree

https://www.box.com/shared/5d1d89ca39169363aed4

Federation Leaders meet to Director

  பள்ளிக் கல்வித் துறை செயலரை சந்திக்க ஆசிரியர்கள் முடிவு-06-08-2012 எழுத்தின் அளவு : Print Email நாமக்கல்: கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெயரிலும் பெற்று கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் 77 தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க, மாவட்டக் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் மூலம் முக்கியத் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் விரைவில் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநரை நேரில் சந்தித்து தலைமையாசிரியர்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். கல்வி உதவித்தொகையை அனைத்து மாணவர்களின் பெயர்களிலும் பெறுவதற்கான பட்டியல் தயாரித்து அளிக்கும்படி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலிருந்து அனுப்பப் பட்ட இடைத்தரகர்கள் வற்புறுத்தியதுடன், அவ்வாறு பட்டியல் தயாரிக்காவிடில் பெற்றோர்களிடம் தெரிவித்து வேறு பள்ளிக்கு மாணவர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தர வேண்டும் என்று சில பெற்றோர்களை தூண்டியும் விட்டுள்ளனர். அத்தகைய வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே தலைமையாசிரியர்கள் அனைத்து மாணவர்கள் பெயரிலும் பட்டியல் தயாரித்து அனுப்பி கல்வி உதவித்தொகை பெற்றுத் தந்துள்ளனர். இதில், இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொரு மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் ரூ.600 முதல் ரூ.900 வரை மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலக ஊழியர்களே பெற்றுள்ளனர். தலைமையாசிரியர்கள் எவ்வித தொகையும் எடுத்துக் கொள்ளவில்லை

Sunday, August 05, 2012

கிருஷ்ண ஜெயந்தி - விடுமுறையில் குழப்பம்   கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் இம்மாதம் 8ம் தேதி கொண்டாடும் நிலையில், கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி விடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.    பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.    பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.   இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, ""ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார். இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் 1,000 மெட்ரிக் பள்ளிகள் மாநிலம் முழுவதும், 1,000 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. நிலம் குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, அங்கீகாரம் தர மறுக்கின்றனர் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலர் நந்தகுமார் கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான சிறுமி சுருதியின் குடும்பத்திற்கு, சீயோன் பள்ளி நிர்வாகம், ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். எங்களது சங்கம் சார்பில், விரைவில் ஐந்து லட்சம் ரூபாய், சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும். இது போன்ற சம்பவங்கள், எங்கும் நடக்கக் கூடாது. பள்ளி வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நிலம் குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, அங்கீகாரம் தர மறுக்கின்றனர். இந்த பள்ளிகளின் வாகனங்களுக்கு தகுதிச் சான்று கேட்டால், பள்ளியின் அங்கீகார சான்றிதழ் கேட்கின்றனர். இந்த பள்ளிகளில் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் என்னாவது? மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும் என்றிருப்பதை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலையில் மாற்ற வேண்டும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

Eng medium.click download

Eng medium schols

Check out this file on Box: https://www.box.com/shared/005e47a121e4a5b93331