Pages

Wednesday, October 31, 2012

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! Posted Date : 15:25 (31/10/2012)Last updated : 15:29 (31/10/2012) சென்னை: சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் நாளை  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலம் புயல் இன்று மாலை கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்க உள்ளதால்,  சென்னை அருகே கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று  வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல்  தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய  முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் வீடு திரும்பலாம் என அறிவித்தார். அத்துடன் தனியார் நிறுவன ஊழியர்களும் வீடு திரும்ப அவர் அறிவுறுத்தினார். மேலும் சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நாளை  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment