Pages

Wednesday, November 06, 2019

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்பப் பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.10.2019-ல் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2019 என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்புக்கு கோரிக்கை வந்துகொண்டிருப்பதால் TRB - பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment