Pages

Wednesday, June 21, 2017

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3ம் தேதி பொது மாறுதல் கவுன்சலிங்


ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை 3, 4ம் தேதிகளில் பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு ஜூலை 3ம் தேதி ஆன்லைன் மூலம் மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது.

அதேபோல பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் ஜூலை 4ம் தேதி நடக்கும். பொது மாறுதல் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்கும்.

No comments:

Post a Comment