Pages

Thursday, June 22, 2017

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்


தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறைப்படி நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அல்லது நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக அரசுக்கு 10 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும், என கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அரசு செயலர் உதயசந்திரன் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment