Pages

Thursday, March 23, 2017

பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்


ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு ரத்தசோகையால் கர்ப்பக் காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு இரும்புசத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை 2014 ல் சுகாதாரத்துறை துவங்கியது. வாரந்தோறும் வியாழக்கிழமை மதிய உணவிற்கு பின் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பத்து முதல் 19 வயதுள்ள பள்ளிச் செல்லா குழந்தைகளுக்காக அங்கன்வாடி மையங்களில் நர்சுகள் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. எந்த அறிவிப்பும் இல்லாமல் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரும்புச்சத்து மாத்திரை பல மாதங்களாக வரவில்லை; இதனால் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டோம். குடற்புழு மாத்திரை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கி வருகிறோம்,' என்றார்.

No comments:

Post a Comment