Pages

Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல்,  ஜாக்டோ அமைப்பில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சென்ைன மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மாலை 4.30 மணிக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவகத்தின் முன்பு கூடிய தொடக்க கல்வித்துறை பணியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment