Pages

Wednesday, March 25, 2015

TNPTF மாநில பொதுச்செயலாளர் அறிக்கை

நிதியுதவி பெறும் பள்ளிகளில் முறைகேடுகளின் உச்சம்..

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது: நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்களை  நிர்ணயிப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் தான் அதிகம் விளையாடுகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பணியிடம் உபரியாக  இருக்கும். அதை மாற்றி அதிக எண்ணிக்கை என்று காட்டி முறைகேடாக பணியிடத்தை உருவாக்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும். இதுபோல்  கன்னியாகுமரியில் பணியிடம் நிர்ணயிப்பதில் அதிகம் முறைகேடுகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர்  இதய நோயால் இறந்தார் என்று கூறுகின்றனர்.

கீழ் மட்ட அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெற்றுத் தருதல், சேமநல நிதியை பெற்றுத் தருதல், கல்வி உதவித் தொகை பெற்றுத்  தருதல், போன்ற பணிகளுக்கான பணம் பெறுகின்றனர். இது குறித்து வாட்ஸ் அப்பில் பல முறை வெளிப்படையாக செய்திகள் வந்தும் கல்வி அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருவூல இயக்குநரிடம் தெரிவித்தோம். அரசு மூலம் இணைய தள வசதி  செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக யாரும் செலவிட வேண்டியதில்லை என்று கூறுகிறார். ஆனால் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மாதா மாதம்  ஆசிரியர்களிடம் பணம் வசூலிக்கின்றனர்.

இது குறித்தும் வாட்ஸ் அப்பில் ஆதாரத்துடன்  தகவல் வெளி வந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்பீஸ் வாங்குவது, ஸ்டாம்பு விற்பது,  பசுமைப்படை செயல்படுத்துவது உள்ளிட்ட செலவுக்கு தொடக்க கல்வித்துறை பணம் ஒதுக்கீடு செய்வதில்லை. அதை வாங்கிக் கொடுத்ததாக கணக்கு  எழுதிவிடுகின்றனர். அதற்கான செலவை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தான் செய்கின்றனர்.

No comments:

Post a Comment