Pages

Thursday, March 26, 2015

SMS மூலம் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம்

வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க, 'எஸ்.எம்.எஸ்.,' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அவரது அறிக்கை:தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வாக்காளரின் 'ஆதார் எண்', மொபைல் எண், இ - மெயில் முகவரி, போன்றவற்றை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் இணையதளம் www. elections.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். இது தவிர எஸ்.எம்.எஸ்., மூலமாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு, ECILINK என டைப் செய்து, 'ஸ்பேஸ்' விட்டு, ஆதார் எண்ணை 'டைப்' செய்து, '51969' என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். இது தவிர, tnvoteraadhaar@gnail.com' என்ற இ - மெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 1950 அல்லது 1077 கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment