வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருந்தால், அவற்றை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
'வாக்காளர் பட்டியலில், ஓட்டுச்சாவடிக்கு, 100 வாக்காளர் வீதம், தொகுதிக்கு குறைந்தது 25 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளனர். இவர்களை நீக்க, ஓட்டுச் சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்' என, கருணாநிதி தெரிவித்து இருந்தார். இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறும்போது, ''வாக்காளர் பட்டியலில், தவறு உள்ளதா என ஆய்வு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment