Pages

Tuesday, December 09, 2014

பி.எப். கணக்குகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை: மத்திய அரசு

பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே பி.எப் கணக்கு எண்ணாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க வேண்டுமா? என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா, பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க தேவையில்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment