Pages

Friday, December 13, 2013

பணியிடங்களில் பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: அமலுக்கு வந்தது சட்டம்

    பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளி"ல ஈடுபடுவோருக்கு எதிராக கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. டில்லியில்,ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ,பாலியல் பலாத்காரத்திற்கு பலியான சம்பவத்தை அடுத்து, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் தொந்தரவுகள், பாலியல் வன்முறையை தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்துவதில், தாமதம் காட்டப்படுவதாக கூறி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மீது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு, பதிலளித்து பேசிய, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியதாவது: இந்த சட்டம் அமல்படுத்துவது குறித்த முறையான அறிவிப்பு, கடந்த 9ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. 10ம், அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்க்கும் அனைத்து அலுவலகங்களிலும் இந்த சட்டம் கட்டாயமாக்கப்படும். புகார்களை விசாரிக்க, கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்களை, 90 நாட்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். புகார் நிருபிக்கப்பட்டு, பாலியல் தொந்தரவில் தெரியவந்தால், பணி நீக்கம், பதவி உயர்வு ரத்து, சம்பள உயர்வு நிறுத்தம், அபராதம் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment