Pages

Friday, December 13, 2013

கல்வி உதவித்தொகை பெற தேர்வு: 16ல் இருந்து விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க, 16ல் இருந்து, 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு: வட்டார அளவில், பிப்., 22ம் தேதி, தேர்வு நடக்கும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், நடப்பு ஆண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பெற்றோரின், ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர், ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பள்ளி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு கட்டணமாக, 50 ரூபாயை, 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை, 23ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், தேர்வுத் துறை இணைய தளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment