Pages

Monday, July 08, 2013

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது  

ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. மாநிலத்தில், 550 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், 4,300 மாணவர் மட்டுமே, இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. மாவட்ட தலைநகரங்களில், குறிப்பிட்ட மையங்களில் நடந்த கலந்தாய்வில், சிறப்பு பிரிவினர் பங்கேற்றனர். சென்னையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில், கலந்தாய்வு நடந்தது.

51 பேர் அழைக்கப்பட்டதில், 28 மாணவர் பங்கேற்று, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். உத்தரவுகளை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அய்யப்பன் வழங்கினார். மாநில அளவில், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த, 201 பேர் அழைக்கப்பட்டதில், 116 பேர் கலந்து கொண்டு, சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். 85 பேர், "ஆப்சென்ட்'. தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வரும்,15ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment