Pages

Wednesday, July 31, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

   விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டும் 27 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பல்வேறு பிழைகளுடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பங்களை பிழைகளுடன் பூர்த்திசெய்தவர்களுக்கும் நிபந்தனை அடிப்படையில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இந்த ஆண்டு மொத்தமாக 6.79 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாள் தேர்வுக்கு 2 லட்சத்து 68 ஆயிரம் பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 794 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்தது. இப்போது ஸ்கேன் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தகுதித் தேர்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டும் விண்ணப்பதாரர்கள் ஏராளமான பிழைகளுடன் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அனுப்பியுள்ளனர

். இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் 2,500 பேர் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் ஊரைக் குறிப்பிடவில்லை. 1,400-க்கும் அதிகமானோர் தங்களின் பிறந்த தேதியைக் குறிப்பிடவில்லை. இரண்டாம் தாளில் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் என தாங்கள் எழுத விரும்பும் தாளைக் குறிப்பிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இந்தத் தாளில் 7,800 பேர் இந்த விருப்பப் பாடத்தைக் குறிப்பிடவில்லை. முதல் தாள், இரண்டாம் தாளில் மொத்தம் 17 ஆயிரம் பேர் தங்களது பிரதான மொழியைக் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டு விண்ணப்பத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கும் தங்களது பாலினத்தைக் குறிப்பிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலினத்துக்கான பகுதியில் ஆண், பெண், திருநங்கை என இருக்கும். ஆனால், 44 விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான பாலினத்தைக் குறிப்பிடவில்லை.

எனினும் இவர்கள் அனைவருக்கும் நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது

பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன்  அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில், பி.எட். படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், இந்த படிப்பில் புதிய பாடப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, "கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டுமுதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 150, 105 மற்றும் 100 மதிப்பெண்கள் என மூன்று பகுதிகளாக இருந்த செய்முறைத் தேர்வு இப்போது 200, 200 மதிப்பெண்கள் என இரண்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. கல்லூரி வேலை நாள்கள் அதிகரிப்பு: மேலும் பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை 180 வேலை நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு

பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் இயற்பியல், கணித ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள¢ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி இந்த கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.

இதில் இயற்பியல், கணிதம் பாடங்களுக்கான பட்டியல் 1.1.2013 தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் முதுநிலை ஆசிரியர் (இயற்பியல்) பதவி உயர்வுக்கான பட்டியலில் 225 பேரும், முதுநிலை ஆசிரியர் (கணிதம்) பதவி உயர்வுக¢கான பட்டியலில் 300 ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Tuesday, July 30, 2013

பள்ளிக் கல்வித் துறையில் மொத்தம் 7 இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணை இயக்குநர்கள் 2 பேருக்கு இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் எஸ்.கண்ணப்பன், கே.தங்கமாரி ஆகியோர் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குநராக கே.தங்கமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட இயக்குநர்கள் விவரம் (அடைப்புக் குறிக்குள் இப்போது வகிக்கும் பதவி):

1. வி.சி.ராமேஸ்வர முருகன் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்குநர்)

2. கே.தேவராஜன் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பள்ளிக் கல்வி இயக்குநர்)

3. தண்.வசுந்தராதேவி - உறுப்பினர்-செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் (அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்)

4. ஆர்.இளங்கோவன் - தொடக்கக் கல்வி இயக்குநர் (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர்)

5. ஆர்.பிச்சை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (செயலர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்)

6. ஏ.சங்கர் - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் (விடுப்பில் இருந்தார்)

7. எஸ்.அன்பழகன் - செயலர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் (விடுப்பில் இருந்தார்)

8. எஸ்.கண்ணப்பன் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் (இணை இயக்குநர், பணியாளர் நலன்)

9. கே.தங்கமாரி - ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குநர் (அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்))

பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்களாக உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் (பள்ளிக் கல்வி) க.அறிவொளி, முறைசாராக் கல்வித் திட்ட இயக்குநர் வி.மோகன்ராஜ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படவில்லை.

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது

  தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும்

. பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தால் உடனே தலைமையாசிரியர்களே நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களான மாநில பள்ளிக் கல்வி இயக்குநர்-28278796, இணை இயக்குநர்(பணியாளர் நிர்வாகம்)-28276340, இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி)-28280186, இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி திட்டம்)-28204340, இணை இயக்குநர்(தொடக்க கல்வி)-28250523 ஆகியோருக்கு தெரிவிக்கவும் வேண்டும் என  பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Monday, July 29, 2013

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?

  "டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித் துறை, "டிஸ்மிஸ்' செய்தது.

மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, "டிஸ்மிஸ்' செய்து, கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது

. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை' என, தெரிவித்தன.

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை : பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

""மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது:

மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு' அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும். இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும்.

இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார். அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். ""கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என இயக்குனர் பதிலளித்தார்.

இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?

அனைத்து பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. இவ்வழக்கில் வாதாட இருக்கும் மூத்த வழக்குரைஞர்களிகளின் நேரமின்மையும் இதற்கு ஒரு காரணம். அதனால்தான் விசாரணை தள்ளி போகிறது. எனவே புதன் அல்லது வியாழன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. விசாரணை வந்தால் ஒரிரு நாட்களில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வெளியாகிவிடும். இவ்வழக்கு சம்பந்தமாக ஞாயிறன்று பல தெலைபேசி அழைப்புகள் வந்நதவண்ணம் இருந்தது. பல அழைப்புகளை நேரமில்லாததால் பதில் அளிக்க இயலவில்லை. இவ்வழக்கை நடத்துபவர்களிடம் தினமும் நாம் உரையாடி வருகிறோம். உடனடி தகவல்களை தங்களின் பார்வைக்காக நமது வலைத்தளத்தில் (www.mptnptf.blogspot.com) பதிவேற்றுவோம்.

என்றும் தோழமைணுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்

Sunday, July 28, 2013

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தால் பணி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்டம், வருகிற பிப்ரவரி மாதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறத

  பணிநீக்கம் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது. அதில், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகார் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

பொய்ப் புகார் என்றால்... அதேபோல் செக்ஸ் தொல்லை என்று கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும் பணி நீக்கம் உள்ளிட்ட மேற்கண்ட அதே தண்டனைகளை வழங்கவும் வரைவு மசோதாவில் பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு–

இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர் ஒருவர் இடம் பெற வேண்டும். நேருக்கு நேர்.... மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று, விசாரணை கமிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது.

விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும் இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும் ஆஜராக அனுமதி இல்லை. மேற்கண்ட விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள்.

இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட். படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பி.எட். படிக்காமல் பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பணி நீக்கம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

  பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் உதவி பெறும், பள்ளிகளில், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், நலிவடைந்த பிரிவினர் உட்பட 20 உறுப்பினர் கொண்ட பள்ளி மேலாண்மை நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாதந்தோறும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, அறிக்கையை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.

பல பள்ளிகளில், இந்த கூட்டம் நடத்தப்படாமல், நடத்தியதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, கல்வித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அது குறித்த அறிக்கையை, வட்டார வளமையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டம் நடத்தவில்லை,எனில் அது குறித்த தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கூட்டம் நடந்தது குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாதத்தின் முதல் 5ம் தேதிக்குள், அந்த அறிக்கையை, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் கூட்டணிஆர்ப்பாட்டம்

்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி சார்பில், அரண்மனைப்புதூர்மாநகராட்சி பள்ளி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி துணை செயலாளர் காளீஸ்வரி, வட்டார செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மூன்று நபர் குழு வெளியிட்ட அறிக்கையில், இடைநிலை பள்ளி ஆசிரியர் களுக்கு பயனளிக்கும் எந்தஅறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ@த @காரிக்கையை வலியுறுத்தி, பொங்கலூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, வட்டார செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.